Advertisment

கோடிக்கணக்கில் சுருட்டிய மாஜி கல்வித்துறை! பன்வாரிலால் பகீர்!

ss

மிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிகள் விற்கப்படுகின்றன என முன்னாள் ஆளுநர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் தற்போது பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித், பஞ்சாப்பில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசியபோது, தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வரை பணி செய்தது மிக மோசமான அனுபவம். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ.40 கோடி, 50 கோடிக்கு விற்கப்பட்டது என்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகப் பணிகளை துணை வேந்தர்கள் கவனிப்பார்கள். துணைவேந்தர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். இவர்கள், தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையின் தேடல் குழு பரிந்துரை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, பல்கலைக்கழக வேந்தரான தமிழ்நாடு ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தேடல் குழு மூன்று நபர்களை பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார். இந்த தேடல் குழுவில், ஆளுநரின் பிரதிநிதி, தமிழ

மிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிகள் விற்கப்படுகின்றன என முன்னாள் ஆளுநர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் தற்போது பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித், பஞ்சாப்பில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசியபோது, தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வரை பணி செய்தது மிக மோசமான அனுபவம். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ.40 கோடி, 50 கோடிக்கு விற்கப்பட்டது என்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகப் பணிகளை துணை வேந்தர்கள் கவனிப்பார்கள். துணைவேந்தர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். இவர்கள், தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையின் தேடல் குழு பரிந்துரை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, பல்கலைக்கழக வேந்தரான தமிழ்நாடு ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தேடல் குழு மூன்று நபர்களை பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார். இந்த தேடல் குழுவில், ஆளுநரின் பிரதிநிதி, தமிழ்நாடு அரசின் பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிரதிநிதி என மொத்தம் மூன்று நபர்கள் இருப்பார்கள். ஆளுநரின் பிரதிநிதி, தேடல் குழுவின் தலைவராகச் செயல்படுவார்.

df

கடந்த 2018-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது என தமிழ்நாட்டின் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றஞ்சாட்டியிருந்தார். அப்போது நடந்த உயர் கல்வி மேம்பாட்டுக் கருத்தரங்கில் இதனைப் பேசியபோது, தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்பேச்சுக்கு விளக்கமளித்த அன்றைய உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகன், "துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கோ உயர்கல்வித் துறைக்கோ ஒரு சம்பந்தமும் இல்லை. தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் துணைவேந்தரைத் தேர்வு செய்து நியமிப்பது ஆளுநர்தான்'' என்று தெரிவித்திருந்தார். அதே குற்றச்சாட்டை மீண்டும் பன்வாரிலால் கிளப்பியுள்ள நிலையில்... "இதுபோன்ற நிலை தமிழகத்தில் இல்லை என்றும் தேர்வுக்குழு பரிந்துரைக்கும் 10 பேரில் தகுதி வாய்ந்த மூவரை கவர்னர் தேர்வு செய்து, அவர்களை நேர்காணல் செய்து, அவர்களில் ஒருவரை துணைவேந்தராக கவர்னரே முடிவு செய்வார்' என்று கே.பி.அன்பழகன் கூறியிருக் கிறார்.

தமிழக முன்னாள் ஆளுநர் வித்தியாசாகருக்கு அடுத்ததாக, 2017ஆம் ஆண்டு முதல் 2021 வரை பன்வாரிலால் புரோகித் ஆளுநராகப் பணியாற்றினார். எடப்பாடி அரசில் அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகனுக்கும், ஆளுநருக்கும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அப்போதே முட்டலும் மோதலுமாக இருந்தது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 பல்கலைக் கழகங்களில், 5 பல்கலைக்கழகங்களைத் தவிர மீதமுள்ள பதினாறும் ஆளுநரின் கட்டுப்பாட்டில் வருகிறது. அப்போதைய சிண்டிகேட் மருதமுத்து, செனெட் ராமசாமி, ஆளுநர் நாமினியாக ஜெகதீஸ் குமார் ஆகியோர் செயல்பட்டனர். இவர்களால் தேர்வு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஆளுநர் நியமனம் செய்யவேண்டும். ஆனால், உயர் கல்வித்துறை அமைச்சர் தேர்வு செய்துள்ள நபரையே துணைவேந்தர் பொறுப்பில் ஆளுநர் நியமிக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டு அப்படியே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மெட்ராஸ் யுனிவர்சிட்டி கௌரி, பெரியார் யுனிவர்சிட்டி ஜெகநாதன், அன்னை தெரசா மகளிர் யுனிவர்சிட்டி வைதேகி விஜயகுமார், பாரதியார் யுனிவர்சிட்டி காளிராஜ் என இப்படி அடுத்தடுத்து 10 நபர்களை நியமித்துள்ளார்களாம். இந்த நியமனத்திற்கு முழுவீச்சாக வசூல் செய்துதருபவர் முன்னாள் அமைச்சரின் பி.ஏ. விக்ரமாக இருந்துள்ளார். இவர் வசூல் செய்யும் பணம் கனகச்சிதமாக அமைச்சரின் வீட்டுக்குச் சென்று சேர்ந்துவிடுமாம். இருடைய சொந்த ஊர் பாப்பிரெட்டிப்பட்டி. மளிகைக்கடை நடத்திவந்த இவர், தற்போது அமைச்சரின் பினாமியாக பல கோடியில் புரண்டுவருகிறாராம். ரிஜிஸ்ட்ரர், சின்டிகேட்டர் மற்றும் கல்லூரி முதல்வர் நியமனத்திலும், இவருடன் கைகோர்த்து வசூல் செய்வதில் பேராசிரியர் மாறவர்மனும் கூட்டாளியாக இருந்துள்ளார்.

அப்படித்தான் மதுரை மணிக்குமார் என்பவருக்கு துணைவேந்தர் பொறுப்பு வாங்கிக் கொடுப்பதாகக்கூறிய மாறவர்மன், அவரிடம் மூன்று கோடியை அட்வான்ஸாக வாங்கிய நிலையில், அவருக்கு அப்பதவி கிடைக்காததால் பாதிப்பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளாராம். இந்நிலையில் ஆளுநர், தன்னையும் பணிசெய்ய விடுமாறுகூறி, மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தராக பி.பி.செல்லத்துரையை நியமித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டதில், செல்லத்துரையின் நியமனம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. அதையடுத்துதான் துணைவேந்தர் நியமனத்தில் பணம் விளையாடுவதாக ஆளுநர் குற்றஞ்சாட்டினார். தற்போது இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தினால் முன்னாள் அமைச்சர் வசமாக மாட்டுவாரென பேராசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "முன்னாள் அமைச்சரின் மீது ஆளுநர் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஏற்கெனவே வருமானவரித்துறை ரெய்டு செய்துள்ள நிலையில். இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். முறைகேடாக துணைவேந்தர் பணியில் நியமிக்கப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, "நிச்சயம் இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

-அருண்பாண்டியன்

படங்கள் : ஸ்டாலின்

nkn291022
இதையும் படியுங்கள்
Subscribe