அமைதியையும், அறத்தையும் போதித்தவர் வள்ளலார். அவரின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் (ஓ.பி.ஆர்.), 1954-ல் வள்ளலார் வாழ்ந்த வடலூர் மண்ணில் சத்திய ஞானசபைக்கு அருகில் சுத்த சன்மார்க்க நிலையம் என்ற சங்கத்தை நிறுவி, அப்பர் அனாதை இல்லம், இலவச பள்ளி ஆகியவற்றைத் தொடங்கினார். அதை நிர்வகிக்க பலநூறு ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார். இன்று அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பதிலாக, முறைகேடுகளும், அத்துமீறல்களும் மலிந்து கிடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக வள்ளலார் பக்தரான சென்னையைச் சேர்ந்த ம.மு.தமிழ்ச்செல்வன் நம்மிடம், ""சுத்த சன்மார்க்க நிலைய சங்கத்தை தனக்குப்பிறகு நிர்வகிக்க ஏழுபேர் கொண்ட குழுவை நியமித்தார் ஓ.பி.ஆர். அவர்களுக்கு வழி காட்டியாகவும், சங்கத்தை மேற்பார்வை செய்யவும் பொள் ளாச்சி மகாலிங்கம் என்பவரை வாய்மொழியாக அறிவித்தார். 1970-ல் ஓ.பி.ஆர். மறைந்ததும், தன்னை தலைவராக பிரகட னப்படுத்திக் கொண்டார் பொள்ளாச்சி மகா
அமைதியையும், அறத்தையும் போதித்தவர் வள்ளலார். அவரின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் (ஓ.பி.ஆர்.), 1954-ல் வள்ளலார் வாழ்ந்த வடலூர் மண்ணில் சத்திய ஞானசபைக்கு அருகில் சுத்த சன்மார்க்க நிலையம் என்ற சங்கத்தை நிறுவி, அப்பர் அனாதை இல்லம், இலவச பள்ளி ஆகியவற்றைத் தொடங்கினார். அதை நிர்வகிக்க பலநூறு ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார். இன்று அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பதிலாக, முறைகேடுகளும், அத்துமீறல்களும் மலிந்து கிடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக வள்ளலார் பக்தரான சென்னையைச் சேர்ந்த ம.மு.தமிழ்ச்செல்வன் நம்மிடம், ""சுத்த சன்மார்க்க நிலைய சங்கத்தை தனக்குப்பிறகு நிர்வகிக்க ஏழுபேர் கொண்ட குழுவை நியமித்தார் ஓ.பி.ஆர். அவர்களுக்கு வழி காட்டியாகவும், சங்கத்தை மேற்பார்வை செய்யவும் பொள் ளாச்சி மகாலிங்கம் என்பவரை வாய்மொழியாக அறிவித்தார். 1970-ல் ஓ.பி.ஆர். மறைந்ததும், தன்னை தலைவராக பிரகட னப்படுத்திக் கொண்டார் பொள்ளாச்சி மகாலிங்கம். ஏற் கனவே இருந்த சங்கப்பதிவை புதுப்பிக்காமல், தனக்கு வேண் டியவர்களை இணைத்து, 1987-ல் சங்கப்பதிவு சட்டத்தின் கீழ் அதேபெயரில் புதிதாக பதிவுசெய்தார். பிறகு 1991-ல் தனக்கு நெருக்கமான ஆர்.செல்வராஜ் என்பவரை செயலாளராக்கி னார். நாளடைவில் நிர்வாகத் தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த செல்வராஜ், எளியமக்களின் சேவைக்காக ஓ.பி.ஆர். தானமாகக் கொடுத்த சொத்துகளை, தனது சொந்த சொத்துகளாக பட்டாமாற்றம் செய்து கொண்டு முறைகேடு களை அரங்கேற்றி வருகிறார்.
என்.எல்.சி. நிறுவனம் கைய கப்படுத்திய 243 ஏக்கர் நிலத்திற் கான இழப்பீடாக, ஏக்கருக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப் பட்டது. இந்தப் பணத்திற்கான கணக்கு வழக்குகள் முறையாக பின் பற்றப்படவில்லை. மேலும், 17 ஏக்கர் நிலத்தில் மட்டுமே தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகள் என சட்டத்திற்கு புறம்பாக எட்டு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இங்கும் இலவசக் கல்விக்கு பதிலாக கட்டாய நன்கொடை வசூ லிக்கப்படுகிறது. இதற்கான கணக்கு களும் முறையாக பராமரிக்கப்படுவ தில்லை. இந்த முறைகேடுகள் தொடர் பாக சாதுக்கள், பொதுமக்கள் கொடுத்த ஆவணங்கள் மட்டுமின்றி, ஆர்.டி.ஐ. மூலம் பல ஆதாரங்களைப் பெற்றோம். மோசடிகளை உறுதி செய்து, அதை வெளிக்கொண்டுவர நான், நண்பர்கள் சுந்தரராஜன், தமிழன்பாபு ஆகியோர் கடந்த ஜனவரி 11-ல் மேட்டுக்குப்பம், வடலூர் வள்ளலார் சபை போன்ற இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டி னோம். அப்போது ஜோதிபாக்யராஜ் என்பவர் மூலம் கடுமையாகத் தாக்கி உடைமைகளைப் பறித்தனர். செல்வ ராஜ் தனது அலுவலகத்தில் வைத்து எங்களைக் கடுமையாகத் தாக்கியதோடு, குடும்பத்தோடு கொன்றுவிடுவோம் என்று மிரட்டி, முகவரி, தொலைபேசி எண்களை வாங்கி, ஜோதிபாக்யராஜ் மூலம் போலீஸில் பொய்ப்புகார் கொடுத் தார். அங்கு நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்பவர்களுக்கு இதுதான் கதி. இருந்தாலும், ஓ.பி.ஆர். கனவை நனவாக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.
வடலூர் வள்ளலார் பக்தரான சந்திரஹாசன் பேசுகையில், “""வள்ள லார் பெயரில் இயங்கும் கல்வி நிறு வனங்களில் பணம்தான் பிரதானம். 15 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திற னாளி மாணவனிடம் நன்கொடை கேட்டது தொடர்பாக பேசச் சென்ற போதுதான், இங்கு நடக்கும் முறைகேடு கள் பற்றித் தெரிந்துகொண்டேன். தைப்பூசம் முடிந்த மூன்றாவது நாள் வரவு, செலவு கணக்குகளை துண்டுப் பிரசுரமாக வெளியிடவேண்டும். அதை யெல்லாம் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இங்கு பயில்கிற மாண வர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களையும் செல்வராஜ் தனது கொத்தடிமைக ளாகவே நடத்துகிறார். விடுதி மாணவர்களை செல்வராஜின் வீடு, தோட்ட வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கின்றனர். மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். சமீபத்தில் குறிஞ்சிபாடியைச் சேர்ந்த பாரதிதாசன் என்கிற மாணவன் பள்ளிவளாகத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளான். அவனது குடும்பத்திற்கு வேண்டியதை செட்டில் செய்து மூடிமறைத்தனர். இதையெல்லாம் தட்டிக்கேட்பதோடு, அரசுக்கும் புகார் எழுதுவதால் என்னையே கொலைசெய்ய முயற்சி செய்தார்கள்'' என்றார் உறுதியுடன்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வள்ளலார் குருகுல தாளாளர் செல்வராஜைத் தொடர்புகொண்டோம்…. ""என்.எல்.சி.க்கு 140 ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதற்கு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டது. ஆசிரியர்களையோ, மாணவர்களையோ வீடு மற்றும் தேட்ட வேலைகளில் ஈடுபடுத்தியதில்லை. அதற்கென ஆட்கள் இருக்கின்றனர். குருகுல மாணவர்கள் மட்டும் சேவைப்பணிகளைத் தெரிந்துகொள்ள குருகுல தூய்மைப் பணிகளைச் செய்கிறார்கள். மாணவர் இறந்தது வெளியில் என்றாலும், கருணை அடிப்படையில் நிதியுதவி வழங்கினோம். இங்கு வரவு, செலவு கணக்குகள் முறையாக பின்பற்றப்படுகின்றன. குருகுல கணக்கு வழக்குகளை நேரில்வந்து தெரிந்துகொள்ளலாம்'' என்றவரிடம், சுவரொட்டி ஒட்டியவர்கள் தாக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, “கிராமத்தில் ஒட்டியதற்காக கிராம மக்கள் விரட்டியுள்ளனர். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என் வளர்ச்சி பிடிக்காமல் அவதூறு பரப்புகிறார்கள்'' என்றார்.
ஏழை-எளியோரின் நலனுக்காக ஓமந்தூரார் எழுதி வைத்த சொத்துகள், யாரோ சிலரின் சுயநலத்திற்காக கொள் ளை போகக்கூடாது. அரசு இதில் தலையிட்டு முறையான நடவடிக்கை மேற்கொள்வதே அறமும், நீதியுமாகும்.
-சுந்தரபாண்டியன்