Advertisment

ராங்கால் மாஜி பாஜக நிர்வாகியின் வில்லங்க ஆவணம்! மோசடி நிர்வாகிகளை காப்பாற்றும் பா,ஜ.க.!

rang

"ஹலோ தலைவரே, இந்த அடைமழை நேரத்திலும் நடிகர் விஜய்,  கரூர் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்.''”

Advertisment

"ஆமாம்பா, ஆனாலும் விஜய் விநியோ    கித்த ஆறுதலை வாங்க, கால்வாசி பேர் வரவில்லையாமே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, கரூர் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத் தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் சொன்ன விஜய், இவர்களைத் தங்கவைக்க அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் 70 அறைகளை புக் பண்ணியிருந்தார். இந்த அறைகளின் ஒரு நாள் வாடகையே தலா 15 ஆயிரம் ரூபாயாம். இதுதவிர சாப்பாடு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து ஒரு அறைக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் இதற்காக விஜய் ஒதுக்கியிருக்கிறாராம். இப்படியெல்லாம் செலவு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் தரப்பு மாமல்லபுரத்துக்கு அழைத்தபோதும், அவர்களில் கால்வாசி குடும்பத்தினர் வரவில்லையாம். இது த.வெ.க. தரப்பை சங்கடப்படுத்தியிருக்கிறதாம்.''”

"துணை குடியரசுத்தலைவரின் சென்னை பயணம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில்... அவர் கடந்த வாரம் தமிழகம் வருவதாகத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அந்தப் பயணம் கேன்சல் செய்யப்பட்டது.  பின்னர், 27ஆம் தேதி வாக்கில் சென்னை வருவார் என்று சொல்லப்பட்டது. அதுவும் புயல், மழையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அவரது சென்னை பயணம் தள்ளி வைக்கப்பட்டதற்கு வேறு காரணம் இருப்பதாக கமலாலயத் தரப்பே சொல்கிறது. அது குறித்து விசாரித்தபோது, சென்னை கலைவாணர் அரங்கில் எடப்பாடி யை அழைத்து, சி.பி.ஆருக்கு பாராட்டுவிழா நடத்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.'' 

"அப்போது சில நிர்வாகிகள், துணை ஜனாதிபதியாக அவர் வருவதால் பாராட்டு விழாவுக்கு ஸ்டாலினை அழைக்கலாமா என்று கூற, அதுவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சிலரோ, ஸ்டாலினை அழைத்தால் எடப்பாடி வரமாட்டார். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது சி.பி.ஆர் காதுக்கே போக, இப்படியெல்லாம் பிரச்சினை வரும

"ஹலோ தலைவரே, இந்த அடைமழை நேரத்திலும் நடிகர் விஜய்,  கரூர் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்.''”

Advertisment

"ஆமாம்பா, ஆனாலும் விஜய் விநியோ    கித்த ஆறுதலை வாங்க, கால்வாசி பேர் வரவில்லையாமே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, கரூர் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத் தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் சொன்ன விஜய், இவர்களைத் தங்கவைக்க அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் 70 அறைகளை புக் பண்ணியிருந்தார். இந்த அறைகளின் ஒரு நாள் வாடகையே தலா 15 ஆயிரம் ரூபாயாம். இதுதவிர சாப்பாடு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து ஒரு அறைக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் இதற்காக விஜய் ஒதுக்கியிருக்கிறாராம். இப்படியெல்லாம் செலவு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் தரப்பு மாமல்லபுரத்துக்கு அழைத்தபோதும், அவர்களில் கால்வாசி குடும்பத்தினர் வரவில்லையாம். இது த.வெ.க. தரப்பை சங்கடப்படுத்தியிருக்கிறதாம்.''”

"துணை குடியரசுத்தலைவரின் சென்னை பயணம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில்... அவர் கடந்த வாரம் தமிழகம் வருவதாகத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அந்தப் பயணம் கேன்சல் செய்யப்பட்டது.  பின்னர், 27ஆம் தேதி வாக்கில் சென்னை வருவார் என்று சொல்லப்பட்டது. அதுவும் புயல், மழையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அவரது சென்னை பயணம் தள்ளி வைக்கப்பட்டதற்கு வேறு காரணம் இருப்பதாக கமலாலயத் தரப்பே சொல்கிறது. அது குறித்து விசாரித்தபோது, சென்னை கலைவாணர் அரங்கில் எடப்பாடி யை அழைத்து, சி.பி.ஆருக்கு பாராட்டுவிழா நடத்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.'' 

"அப்போது சில நிர்வாகிகள், துணை ஜனாதிபதியாக அவர் வருவதால் பாராட்டு விழாவுக்கு ஸ்டாலினை அழைக்கலாமா என்று கூற, அதுவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சிலரோ, ஸ்டாலினை அழைத்தால் எடப்பாடி வரமாட்டார். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது சி.பி.ஆர் காதுக்கே போக, இப்படியெல்லாம் பிரச்சினை வரும்னா நான் சென்னைக்கே இப்ப வரலை என்று சொல்லிவிட்டாராம்.''”

"மாஜி பா.ஜ.க. நிர்வாகி பற்றிய வில்லங்க ஆவணங்கள் பா.ஜ.க.வினராலேயே தொகுக்கப்படுகிறதாமே?''”

"தமிழக மாஜி பா.ஜ.க. நிர்வாகி குறித்த அத்தனை ஏடாகூடங்களையும் அவர் கட்சியைச் சேர்ந்தவர்களே ஆவணப்படம் போல் தயாரித்திருக்கிறார்கள். அவர், கட்சிப் பதவியைத் தக்கவைக்கவும் பணம் சம்பாதிக்கவும் எடுத்த ஹனிடிராப் வீடியோக்கள், அவர் யாரிடமெல்லாம் எப்படி யெல்லாம் வசூலித்தார் என்கிற ஆதார ஆவணங்கள், ஆருத்ரா நிதி நிறுவன குற்றவாளிகளில் ஒருவரான  ஹரீசை, பிரதமர் மோடியைப் பார்க்க வைத்தது, அமர்பிரசாத் ரெட்டியைக் கொடிக்கம்ப வழக்கில் சிக்க வைத்தது என, அவர் நடத்திய அத்தனை கோல்மால்களையும் அவர்கள் இதில் டாக்குமெண்ட் ஆக்கியிருக்கிறார்களாம். இதன் பின்னணியில் இருப்பவர் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினாரின் மகன் பாலாஜி நயினார்தானாம். இது அந்த மாஜி நிர்வாகியின் அரசியல் வாழ்வை வெகு வாகப் பாதிக்கும் என்கிறது கமலாலயத் தரப்பே.''”

"பொருளாதாரக் குற்றத்தில் சிக்கிய தேவநாதன் யாதவைக் காப்பாற்ற டெல்லி பா.ஜ.க. தரப்பு முயல்கிறது என்கிற பேச்சு அடிபடுகிறதே?''”

rang2

"இந்து சாஸ்வத நிறுவனத்தின் மூலம் 30 ஆயிரம் கோடி நிதி மோசடி நடந்த விவகாரம், எல்லோர் மனதிலும் அப்படியே இருக்கிறது. இதைச் செய்த குற்றவாளியான தேவநாதன் யாதவ் ஜாமீன் பெற்று வெளியிலிருக்கிறார். இவரைக் காப்பாற்ற முடிவெடுத்த பா.ஜ.க. டெல்லி தலைவர் கள் சிலர், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் கொடுப் பதற்கான முயற்சியில் இருக்கிறார்களாம். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில், வழக்கின் லகானை வலுவாகப் பிடித்திருக்கிறதாம் தமிழக போலீஸ். தேவநாதன், இந்த மோசடிப் பணத்தில் வாங்கிக் குவித்த சொத்துக்களை தேதி வாரியாக, ஆதாரத்தோடு தொகுத்திருகிறார்களாம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார்.''”

"தி.மு.க. அரசுக்கு எதிரான சில பிரச்சினை கள் பரபரப்பாக உருட்டப்பட்டு வருகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, கனமழை காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்கள், அதிகம் பாதிப்படைந்திருக்கிறது. இதனால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூற துணை முதல்வர் உதயநிதியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் சென்றார்கள். எனினும், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியோ, முதல்வர் ஸ்டாலினுக்கு சினிமா படம் பார்க்க நேரம் இருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க நேரம் இல்லையா? என்று எதிர்ப்புக்குரல் கொடுக்க... அது, தி.மு.க.வுக்கு எதிரான சூறாவளியை ஏற்படுத்திவருகிறது. அதேபோல் சென்னை யில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கட்டுமானப் பணிகளைச் செய்யக்கூடாது என்று விதி இருக்கிறது. எனினும் ஒரு கட்டுமான நிறுவனம் அங்கே பல ஏக்கரில் பில்டிங் கட்டுவதற்கு, அனுமதி பெற்றிருக்கிறது. இதற்கு எதிராக, இந்த விவகாரத்தை ’அறப்போர் இயக்கம்’ கையில் எடுத்துப் போராடிவருகிறது. இந்த இடத்தை சங்கரமடத்தின் சார்பில் விற் பனை செய்தவர் ரிலையன்ஸ் பாலு என்கிற ஆடிட்டராம்.  காஞ்சி சங்கரமடத்திற்கு  ஆதரவாக எப்படி அனுமதி கொடுக்கப் பட்டது என்கிற கேள்வியும் இப்போது தி.மு.க. அரசுக்கு எதிராக எழுப்பப்பட்டு வருகிறது.''” 

"இந்த நேரத்தில், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும் தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. பற்றி முதல்வருக்கு புகார் அனுப்பி யிருக்கிறாரே?''”

"காங்கிரசின் சீனியர் அன்பரசுவின் மகன் அருள்அன்பரசு.  முன்பு எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சென்னை பூந்தமல்லிக்கு அருகே காட்டுப்பாக்கத்தில்  இவர் குடும்ப அறக்கட்டளைக்கு அரை ஏக்கர் நிலம் இருக்கிறதாம். அதில் ஒரு பகுதி இடத்தை, பூந்தமல்லி தி.மு.க. எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமிக்கு நெருக்கமான தமிழ்ச்செல்வி -வேல்முருகன் தம்பதியினர் ஆக்கிரமித்து குடிசையைப் போட்டிருக்கிறார்களாம். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, தி.மு.க. எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அருளை மிரட்டியுள்ளனர். இது குறித்து அவர் காவல்துறைக்குப் போக, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமியின் தலையீட்டால், போலீஸ் கண்டுகொள்ளவில்லையாம். இதனால் தங்கள் குடும்ப அறக்கட்டளைக் குச் சொந்தமான நிலத்தை மீட்க உதவும்படியும், அதற்கு இடையூறாக இருக்கும்  எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் முதல்வர் ஸ்டாலினுக்கு அருள்அன்பரசு புகார் அனுப்பியுள்ளார்.''

"சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றின் பாரில் நடந்த தகராறு குறித்த தகவல், முதல்வரின் காதுவரை சென்றிருக்கிறதே?''”

"சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டலான தாஜ் கோரமண்டலின் பாரில், ஐடியல் பீச் ரெசார்ட்ஸ் ஓட்டல் அதிபரான விக்ரம்பிரபு என்பவர், ஒரு பெண்ணிடம் தகராறு செய்ததைத் தொடர்ந்து, அங்கே இரு தரப்பினரும் மோதிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஓட்டல் நிர்வாகம் அனைவரையும் உட்கார வைத்திருக்கிறது. அப்போது ரெசார்ட்ஸ் ஓனர் விக்ரம் பிரபுவுக்காக, ஒரு கிறிஸ்தவ தி.மு.க. எம்.எல்.ஏ. போலீஸ்வரை சமாதானம் பேசினாராம். இந்த விவகாரம் கமிஷனர் அருண் மூலம் முதல்வர் அலுவலகத்துக்கும் சென்றிருக்கிறதாம். தகவலைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், "எங்கள் கட்சி எம்.எல்.ஏ. சொன்னாலும் கேட்காதீர்கள், முறைப்படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள்' என்று சொல்ல, இரு தரப்பை யும் சேர்ந்த 8 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பியிருக்கிறது போலீஸ்.''”

"பா.ம.க.வின் செயல்தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை டாக்டர் ராமதாஸ் நியமித் திருக்கிறாரே?''”

rang1

"டாக்டர் ராம தாஸுக்கும் அவர் மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக அதிகார மோதல் வெடித்துவருகிறது. இந்த நிலையில், எதற்கும் இறங்கிவராத அன்புமணிக்கு, அடுத்தகட்ட அதிர்ச்சியைத்  தர முடிவெடுத்த ராமதாஸ், தனது மூத்த மகளுக்கு அதிக முக்கியத்துவம் தரத்தொடங் கினார். இந்த சூழலில், பா.ம.க.வின் செயல் தலைவர் பதவியில் அவர் யாரை நியமிக் கப்போகிறார் என்கிற விவாதம் கடந்த சில நாட்களாகவே எதிரொலித்து வந்தது. இப்போது கட்சியின் செயல் தலைவராக தன் மூத்த மகள் ஸ்ரீகாந்தியை அதிரடியாக நியமித்துள்ளார் ராமதாஸ். இதைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்திக்கு பா.ம.க.வின் சீனியர் தலைவர்களும் நிர் வாகிகளும் வாழ்த்துத் தெரி வித்து வருகிறார்கள். செயல் தலைவராகியிருக்கும் ஸ்ரீகாந்தி யை, தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் வகையில் சுற் றுப்பயணம் செய்ய அனுப்பி வைக்கிறார் ராமதாஸ். இதற்கான திட்டமிடல் நடந்துவருகிறது.''” 

"நக்கீரன் அண்மையில் கையிலெடுத்த ஏ.டி.எம். உரிம மோசடி விவகாரம் பற்றி நக்கீரன் எச்சரித்திருக்கும் நிலையில், சிலர் பேங்கையே வைக்கலாம் என்று ஏமாற்று கிறார்களாமே?''”

"ஆமாங்க தலைவரே, ’"ரூ.100 கோடி மோசடி! விசாரணை வளையத்தில் சைலேந்திரபாபு?'’ ன்ற தலைப் பில் இந்த விவகாரத்தை நமது நக்கீரன் அக்டோபர் 22-24 தேதியிட்ட  இதழில் வெளி யிட்டிருந்தது.  இந்த நிலையில் இதன் அடுத்தகட்டமாக மும்பையில் பேங்கையே வைத்துத் தருவதாக ஒரு டீம் விளம்பரம் செய்து ஏமாற்றி வருகிறதாம். ’ஆரம்ப முதலீடு இல்லாமல் வங்கியின் எதிர்காலத்துடன் இணையுங் கள். உங்கள் நிதிப் பயணம் சீராக, தொந்தரவில்லாமல் இருப்பதை உறுதிசெய்யும் அற்புதமான இ.எம்.ஐ. திட்டங்களுடன் 100% வங்கிக் கடன்களை நாங்கள் வழங்குகிறோம் என்பது போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளுடன் அந்த விளம்பரங்கள் மக்களுக்கு கொக்கி போட்டு வருகின்றன வாம். அட நம்மாலும் ஒரு வங்கியை நடத்த முடியுமா? என்ற திகைப்பிலும், சபலத்திலும் சிக்கும் சிலர், இந்த விளம்பரத்தை நம்பிக் குழியில் விழுந்துகொண்டு இருக்கிறார்களாம்.''”

"திருச்செந்தூர் கோயி லில் சினிமா நடிகரை, ’சண்முக விலாச’ தரிசனத் துக்கு அனுமதித்தது பிரச் சினையாகியிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, திருச்செந்தூர்  கந்தசஷ்டி விழாவின்போது பூஜை, புனஸ்காரங்கள் முடித்தபிறகு, ஜெயந்திநாதரை ’சண்முக விலாசம்’ எனும் மண்டபத்தில் தங்க வைப்பார்கள். இங்கு சென்று வழிபட, விரதம் இருக்கும் பக்தர்கள் மட்டுமே கறாராக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்தக் கோயிலில் இருக்கும் ஸ்ரீராம் எனும் புரோகிதர், இந்த சண்முக விலாச நிகழ்வின் போது எந்த விரதமும் மேற்கொள்ளாத நடிகர் ஆர்.ஜே. பாலாஜியை, அண்மையில் அழைத்துச் சென்று மூலவரை தரிசிக்க வைத்திருக்கிறார். இதைப்பார்த்த பக்தர்களும்  பொதுமக்களும் கொதித்துப்போய்,  தர்ணா செய்யத் தொடங்கி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அங்கே ஓடிவந்த போலீஸ், அவசரம் அவசரமாக  அவர்களை யெல்லாம் சமாதானப்படுத்தியிருக்கிறது.''”

"என் காதுக்கு வந்த தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். தென்காசி மாவட்டம் குருவிகுளம் பகுதி விவசாயி ஜான்சன், தான் குத்தகைக்கு எடுத்த நிலத்தில்  மக்காச்சோளம், பாசிப்பயிறு போன்றவற்றை பயிரிட்டு வந்தாராம். அவரது மக்காச்சோளப் பயிரை மயில்களும் எலிகளும் தின்றதால், அவற்றுக்கு அவர் விஷம் வைத் திருக்கிறார். இதில் ஏறத்தாழ 50 மயில்கள் கொல்லப்பட்டிருக் கின்றன. இதையறிந்த வனத்         துறை அதிகாரிகள், விவசாயி ஜான்சனை அதிரடியாக மடக்கி யிருக்கிறார்கள்.''”

rangbox

nkn291025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe