ஸ்ரீமதி விவகாரத்தில் புதுப் புது வீடியோக்களை மனசாட்சி உடைய சி.பி.சி.ஐ.டி போலீசாரும் வெளியிட்டு வருகிறார்கள். ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், பிணமாகக் கிடந்த ஸ்ரீமதியை ஹாஸ்டல் வார்டன் கிருத்திகா சென்று பார்த்தது போலவும், கிருத்திகா மற்றும் சாந்தி, வாட்ச்மேன், ஆசிரியர் ஒருவர் என நான்குபேர் தூக்கிக்கொண்டு வருவதுபோலவும் அந்த வீடியோவில் இருந்தது.
இந்த வீடியோவைப் பார்த்த ஸ்ரீமதியின் அம்மா டென்ஷனாகி விட்டார். "இந்த வீடியோவை எங்களுக்குக் காட்டுங்கள்'' என மாணவி இறந்த 13-ந் தேதி காலை 8:30 மணிக்கு கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி. விஜயகார்த்திகேயனிடம் ஸ்ரீமதியின் அம்மா செல்வி கேட்டுள்ளார். அதற்கு அவர், "காட்டுகிறேன்' என கூறிக்கொண்டே ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த மகா, யாமினி ஆகியோருடன் உங்களைப் பேச வைக்கிறேன்' என்று கூறி ஸ்ரீமதியின் அம்மாவை அழைத்துச் சென்று மகாபாரதி மோகன், கொட்டப்பாடி விஜயகுமார் மற்றும் செல்வம் ஆகியோருடன் பேச வைத்துள்ளார்.
அவர்கள், செல்வியிடம், "உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?'' என பேரம் பேசினார்கள்.
இது பற்றி நம்மிடம் பேசிய செல்வி, "ஸ்ரீமதி விழுந்ததாக பள்ளி நிர்வாகி காட்டிய இடம் அந்தக் கட்டிடத்திற்கு மே
ஸ்ரீமதி விவகாரத்தில் புதுப் புது வீடியோக்களை மனசாட்சி உடைய சி.பி.சி.ஐ.டி போலீசாரும் வெளியிட்டு வருகிறார்கள். ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், பிணமாகக் கிடந்த ஸ்ரீமதியை ஹாஸ்டல் வார்டன் கிருத்திகா சென்று பார்த்தது போலவும், கிருத்திகா மற்றும் சாந்தி, வாட்ச்மேன், ஆசிரியர் ஒருவர் என நான்குபேர் தூக்கிக்கொண்டு வருவதுபோலவும் அந்த வீடியோவில் இருந்தது.
இந்த வீடியோவைப் பார்த்த ஸ்ரீமதியின் அம்மா டென்ஷனாகி விட்டார். "இந்த வீடியோவை எங்களுக்குக் காட்டுங்கள்'' என மாணவி இறந்த 13-ந் தேதி காலை 8:30 மணிக்கு கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி. விஜயகார்த்திகேயனிடம் ஸ்ரீமதியின் அம்மா செல்வி கேட்டுள்ளார். அதற்கு அவர், "காட்டுகிறேன்' என கூறிக்கொண்டே ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த மகா, யாமினி ஆகியோருடன் உங்களைப் பேச வைக்கிறேன்' என்று கூறி ஸ்ரீமதியின் அம்மாவை அழைத்துச் சென்று மகாபாரதி மோகன், கொட்டப்பாடி விஜயகுமார் மற்றும் செல்வம் ஆகியோருடன் பேச வைத்துள்ளார்.
அவர்கள், செல்வியிடம், "உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?'' என பேரம் பேசினார்கள்.
இது பற்றி நம்மிடம் பேசிய செல்வி, "ஸ்ரீமதி விழுந்ததாக பள்ளி நிர்வாகி காட்டிய இடம் அந்தக் கட்டிடத்திற்கு மேலே செல்லும் படிக்கட்டுகள் இருந்த இடம். அந்தப் பகுதியில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் ஸ்ரீமதி விழுந்ததால்... அந்தக் கிளை உடைந்து கீழே விழுந்தது என ஒரு இடத்தைக் காட்டினார்கள். அந்த இடத்தில் ரத்தக்கறை இல்லை. அதைத்தான் நான் சந்தேகமாகக் கிளப்பினேன். ஆனால் இப்பொழுது வேறொரு இடத்திலிருந்து ஸ்ரீமதியை, இறந்து போன ஆடு, மாடுகளைத் தூக்குவது போல தூக்கிவருவதாகக் காட்டுகிறார்கள். போலீஸ் உதவியுடன் ஒரு வீடியோவை எனக்கு காண்பித்தார்கள். அரை நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஸ்ரீமதி போன்ற ஒரு உருவம் விழுந்ததாக அவர்கள் சொன்னார்கள். அதில் ஒரு மரக்கிளையின் அசைவு மட்டும்தான் எனக்குத் தெரிந்தது. இப்பொழுது ஸ்ரீமதியை தூக்கிக்கொண்டு நடந்து வரும் பாதை, அவர்கள் எனக்கு முன்பு காட்டிய இடமாக இல்லை.
ஆக... இவர்கள் வெளியிட்ட வீடியோ ஒரு செட்-அப் வீடியோ. இவர்கள் முன்பு காட்டிய இடத்திலும், இப்பொழுது ஸ்ரீமதியை தூக்கிக்கொண்டு வரும் வீடியோவிலும் இருக்கும் சாலையில் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும். இவர்கள் வேறு எங்கிருந்தோ ஸ்ரீமதியை பிணமாக எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
5:30 மணி என நேரம் குறிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில்தான் ஸ்ரீமதி விழுந்து கிடந்தார் என்றால்... இவர்கள் தவறான இடத்தை எனக்கு ஏன் காட்ட வேண்டும்?
இவர்கள் ஸ்ரீமதியை தூக்கிக்கொண்டு வரும்போது, அவரது கழுத்திலும் முதுகிலும் கை வைத்து தூக்கவில்லை. ஸ்ரீமதியை குறைந்தபட்சம் ஒரு ஸ்ட்ரெக்சரில் வைத்து தூக்கியிருக்க வேண்டும். அதைக்கூடச் செய்யவில்லை... ஸ்ரீமதியை பிணமாகத்தான் தூக்கி வருகிறார்கள் என அந்த வீடியோ சொல்கிறது. ஆகவே இந்த வீடியோவை எனக்கு முன்பே காட்டியிருக்கலாம். அவர் எங்கே விழுந்தார்? எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை'' என்றார்.
ஸ்ரீமதியின் அப்பா ராமலிங்கம் கூறுகையில்... "மதியம் ஸ்ரீமதிக்கு அவரது தம்பி சந்தோஷ், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு சென்று கொடுத்தார். இரவு 9:30 மணிக்கு ஸ்ரீமதி தளர்வாக இரண்டாவது மாடியில் உள்ள படிக்கும் அறைக்கு வந்து உட்காரு கிறார் என வீடியோ வெளியாகியுள்ளது. 9:30 மணியிலிருந்து அதிகாலை 5:30 மணி வரை மொத்தம் 60 சி.சி.டி.வி.க்கள் இயங்கும் அந்தப் பள்ளியில் ஸ்ரீமதியின் அனைத்து அசைவு களும் பதிவாகியிருக்கும். வகுப்பறையில் ஒரு மாணவன் தூங்கினாலே, பள்ளித் தாளாளர் மைக்கில், சி.சி.டி.யைப் பார்த்து, "ஒரு மாணவன் தூங்குவதாகத் தெரிகிறது.... நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?' என எச்சரிப்பார்.
அப்படிப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள் கொண்ட பள்ளிக்கூடத்தில் ஸ்ரீமதியின் மரணம் நடைபெற்ற விதம் கண்டிப்பாகப் பதிவாகியிருக்கும். இந்த சி.சி.டி.வி.க் களில் பள்ளியின் உரிமையாளர் ரவிக்குமாரின் மகன்கள் சக்தி, சரண், மற்றும் அவரது தம்பி ஆகியோர் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? என்பதும் பதிவாகியிருக்கும். அந்தக் காட்சிகளை காவல்துறை வெளியிட வேண்டும்'' என்றார்.
ஸ்ரீமதியின் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன், "இந்த விஷயத்தில் காவல்துறை நிறைய விஷயங்களை மறைக்கிறது. கடலூர் மாவட்ட புலனாய்வு அதிகாரி ஒருவர், ஸ்ரீமதியின் அம்மா செல்வியிடம், "உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன். அரசு சார்பில் நிவாரணத் தொகையும் வாங்கிக் கொடுக்கிறேன்' என பேரம் பேசியுள்ளார். அவரும் இந்த சி.சி.டி.வி. பதிவுகள் பற்றி எதுவும் சொல்லவில்லை.
இப்போது ஸ்ரீமதி காதலித்ததாகச் சொல்லப்படும் ஒரு மாணவனின் குடும்பத்தோடு பேசிவருகிறார்.
இந்நிலையில்... சென்னை, மதுரை, திருவண்ணா மலை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் "உண்மை கண்டறியும் குழு' என கள்ளக்குறிச்சியில் களமிறங்கியிருக்கிறார்கள். அவர்கள், இதே சக்தி பள்ளியின் கிணற்றில் இதற்கு முன்னால் பிணமாகக் கிடந்த மாணவனின் கதையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பள்ளியின் கிணற்றில் பிணமாகக் கிடந்த அந்த மாணவனின் மரணம் குறித்து போலீசார் அப்போது விசாரிக்கவே இல்லை. அதற்காக ஒரு எஃப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தற்போது அந்த மாணவனின் தந்தை, தனது மகனின் மரணம் பற்றிய ஆதங்கத்தை முகநூல் மூலம் தெரிவித்துள்ளார். அதில், "எனது மகனின் இறப்பிற்கு இன்று சரியான நீதி கிடைத்ததாகவே இன்றைய நிகழ்ச்சிகளை நான் காணுகிறேன். அதர்மம் அன்று வெல்லலாம்... நியாயம் நின்று நிதானமாக தண்டிக்கும்'' என பதிவிட்டுள்ளார்.
பாவேந்தர் பள்ளியை நடத்திவரும் விஜயகுமார், கூகையூர் பாலு ஆகியோர் ரவிக்குமாருக்காக அடிக்கடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்கள். அத் துடன் பாதிக்கப்பட்ட பள்ளி, நட்சத்திர இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பல கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய் திருக்கிறது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தால் 30 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பள்ளி நிர்வாகிகள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் களமிறங்கிய "உண்மை கண்டறியும் குழு', போலீஸ் கலவரக்காரர்களை கைது செய்கிறோம் என்ற பேரில், நூற்றுக்கணக்கான பேரை சிறையில் அடைத்துள்ளது. அதில் பலர் 18 வயதிற்கு கீழே உள்ள சிறார்கள் என குறிப் பிடுகிறது.