க்கி வாசுதேவின் ஈஷா, கிறிஸ்தவ சமு தாயத்தாரால் நடத்தப்படும் காருண்யா கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்கள் வனப்பகுதிகளை ஆக்கிர மித்திருப்பது பற்றி இயற்கை ஆர்வலர்கள் பலமுறை புகார் எழுப்பியுள்ளனர்.

இயற்கை ஆர்வலரான யோகநாதன் நம்மிடம்... "மேட்டுப் பாளையம், ஆனைமலை, பொள் ளாச்சி பகுதிகளில் வனத்தை யொட்டி இருந்த 1049 ஹெக்டேர் பகுதிகளை வனப்பகுதியுடன் இணைப்பதற்கு பல எதிர்ப்பு வந்த நிலையிலும், கோவை மாவட்ட கலெக்டராக தற்போது பதவிக்கு வந்திருக்கும் நாகராஜன் தீவிர சிரத்தை யெடுத்து அவற்றை இணைத்துவிட்டார்.

isha

அதோடு, கல்லார் -மேட்டுப்பாளையம் யானை வழித்தடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 50.79 ஹெக்டேர் நிலம் தொடர்பாக ஆட்சியர் நாகராஜன் போட்ட உத்தரவு முக்கியமானது. "கடந்த 30 நாட்களில் தமிழக அரசு இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. இதனால் தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் உள்ள யானைகள் சென்று வரும் வழித்தடங்கள் மீட்கப்பட்டி ருக்கின்றன. இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்' என் கிறார்.

Advertisment

கோவை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை காரணமாக, வனப்பகுதி ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்ற நம்பிக் கையில் அனைவரின் பார்வையும் ஈஷா யோகா மையத்தின் மீதுதான் இருந்தது. "அது குறித்து விரைவில் ஆராயப்படும்...' என தி.மு.க.வின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சொன்னார். "புகார்கள் குறித்து இந்து அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்' என அமைச்சர் சேகர்பாபு சொன்னார். ஆனால், யானை வழித் தடங்களை ஆக்கிரமித்துள்ள ஈஷா மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பில் வேகம் இருக்குமா என்ற சந்கேம் எழுப்புகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

isha

காரணம், PORANGADU MADUVAY MANAI LTD. (பொரங்காடு மதுவே மனை லிமிடெட்) என்ற நிறுவனம் ராமச்சந்திரன், ஃ.குன்னூர் (coonoor) The Nilgiris, Dmk. M.LA) தந்தை பெயர் காரி கவுடர்.(S/o.kari Gowder) என்று உள்ளது. கம்பெனியின் டின் நம்பர் என்பது அதில் இயக்குநர்களாக இருப்பவர்களுக்கான எண்கள்.

Advertisment

அதன்படி 8 பேர் இயக்குநர்களாக இருக்கும் அந்த பொரங்காடு கம்பெனியில் 02065422 என்ற டின் நம்பரின் இயக்குநராக ராஜேஷ்சந்தர் போஜராஜன் இருக்கிறார். அவர் இந்தக் கம்பெனிக்கு மட்டுமல்லாமல், வேறு 9 கம்பெனிகளுக்கும் இயக்குநராக இருக்கிறார்.

அதில் மிக முக்கியமாக, 1. ISHA BUSINESS PRIVATE LTD. 2. ISHA CRAFTS PRIVATE LTD. 3. ISHA INSTITUTE OF INNER SCIENCES. 4. ISHA LIFE RESEARCH FOUNDATION என்கிற ஈஷாவின் நான்கு கம்பெனிகளும் அடங்கும்.

அது மட்டுமா? V S B R SOFTCARE SOLUTIONS NILGIRIS PRIVATE LTD என்கிற கம்பெனியில் 01689083 என்ற டின் நம்பரின் இயக்குனராக காரிகவுடர் ராமச்சந்திரனும், 01689098 என்ற டின் நம்பரின் இயக்குநராக அமைச்சரின் மனைவி பத்தா கவுடர் பேபி அம்மாளும், 01689320 என்ற டின் நம்பரின் இயக்குனராக ராமச்சந்திரன் மகள் வசந்தியும், 01731992 என்ற டின் நம்பரின் இயக்குநராக வசந்தியின் கணவர் தோனன் சிவகுமாரும் இருக்கிறார்கள். இவர்களை கம்பெனி ஆரம்பிக்க வைத்ததே போஜராஜன்தான் என்கிறார்கள்.

ஈஷா நிறுவனங்களில் இயக்குநராக இருக்கும் போஜராஜனுக்கு, வனத்துறை அமைச்சரிடமும் அவரது குடும்பத்தாரிடமும் உள்ள செல்வாக்குதான் இயற்கை ஆர்வலர்களிடமும் ஈஷாவால் பாதிக்கப்பட்ட வர்களிடமும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

isha

இதனிடையே, ராமச்சந்திரன் தன்னுடைய வேட்புமனு தாக்கலில் இந்த கம்பெனிகளைக் காட்டவில்லை என அவருக்கு எதிரான சிக்கல்களை வலுவாக்கும் வேலைகளில் உள்ளூர் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.

isha

இதுகுறித்து அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரனிடம் கேட்டோம். "பொரங்காடு கம்பெனிங்கறது படுகாஸ் சமுதாயத்தினருக்கென உருவாக்கப்பட்டது. இதில் எல்லா கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள். ஈஷாவுல இருக்கறவங்க யாரா இருந்தா நமக்கென்ன? ய ந இ த கம்பெனியில நான் இருந்தது உண்மைதான். ஆனா நான் ராஜினாமா பண்ணிட்டேன். இப்ப என் மனைவி, மகள், மருமகன் எல்லாம் அந்தக் கம்பெனிய பாத்துக்கறாங்க. இப்ப அதுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. ஈஷா யோகா மையம் எந்த இடத்துல இருக்குதுன்னே எனக்கு தெரியாது. மேலிடம் சொன்னா போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கிறேன். என் பொண்ணு ரெண்டொரு முறை மஹா சிவராத்திரி விழாவுக்கு போயிட்டு வந்ததா சொல்லியிருக்காங்க. அவ்வளவு தான்'' என்கிறார்

"எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரத்தில் இருப்பவர்களை எப்படி எங்கள் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொள்ள முடியும் என்பது நன்றாகத் தெரியும்' என்பதுபோல அமைதி யாகப் புன்னகைத்துக்கொண்டி ருக்கிறது ஜக்கியின் ஈஷா நிறுவனம்.