Advertisment

அரசு பாலிடெக்னிக்குகளில் வெளி மாநிலத்தவர்கள்! -பறிபோகும் தமிழக உரிமை!

ss

மிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத் தில் அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற நிலையில், தற்போதைய ஆட்சியில் அதற்கு கடிவாளம் போடப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருந்தார். ஆனாலும், ஒவ் வொரு பணி வாய்ப்பிலும் வெளி மாநிலத்தவர்களைப் புகுத்தும் நிலை தொடர்ந்தபடியே இருந்துவருகிறது. சமீபத்தில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ff

தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1060 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-18ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததன் காரண மாக தேர்வு ரத்து செய்யப் பட்டது. தற்போது, 2017ஆம் ஆண்டு வெளி யிட்ட அதே அரசாணை யை நடைமுறைப்படு

மிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத் தில் அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற நிலையில், தற்போதைய ஆட்சியில் அதற்கு கடிவாளம் போடப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருந்தார். ஆனாலும், ஒவ் வொரு பணி வாய்ப்பிலும் வெளி மாநிலத்தவர்களைப் புகுத்தும் நிலை தொடர்ந்தபடியே இருந்துவருகிறது. சமீபத்தில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ff

தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1060 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-18ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததன் காரண மாக தேர்வு ரத்து செய்யப் பட்டது. தற்போது, 2017ஆம் ஆண்டு வெளி யிட்ட அதே அரசாணை யை நடைமுறைப்படுத்தி 27.11.2019ஆம் ஆண்டு தேர்வுக்கான மறு அறிவிப்பு ஆணையை டி.ஆர்.பி. வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8 தொடங்கி, 13 வரை தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள், 2022 மார்ச் 8ல் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சிபெற்ற 2,148 பேருக்கு ஜூலை 16, 17, 18, 20 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்களில் நூற்றுக்கணக் கானவர்கள் வெளி மாநிலத் தவர்களாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம், தமிழகப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவர்கள் வந்திருப்பது எப்படி நியாயமாகும்? இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக் கப்படுகிறது. தமிழ்ப் பாடத்தாள் கட்டாயமென்று அரசு அறிவித்தபோதும் அதற்கான அரசாணையை முறையாக வெளியிடாததாலேயே இத்தகைய நிலை என்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முறையிட்டனர்.

ff

Advertisment

1060 காலியிடங்களுக்கு 2148 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ள நிலையில், 15 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இறுதித் தேர்வுப் பட்டியல் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடப் பட்டது.

இந்த இறுதிப்பட்டியலில், 880 பேர் பெயருடன் கூடிய பதிவெண் மற்றும் இட ஒதுக் கீட்டின்படி அறிவிக்கப்பட்டுள் ளது. மீதமுள்ள பெயர்களை அறிவிக்காமல் பெய ரை மறைத்து திரும்பப் பெறப்பட்டது எனப் பதிவு செய்துள்ளனர். இங்குதான் சந் தேகம் எழு கிறது. இதற்கு முன்பாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட பட்டிய லில் டி.ஆர்.பி. வழக்கத்திற்கு மாறாக பெயருடன்கூடிய தேர்வானவர்களின் பட்டியலை வெளியிடாமல், அதற்குப் பதிலாக பதிவு எண்களைக் கொண்ட தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. அந்த பட்டியலில்தான் ஓ.சி. கேட்டகிரியில் வடமாநிலத் தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு வந்து தேர்வாகியுள்ளனர். அப்படி தேர்வாகி உள்ளவர்கள் தற்போது இறுதிப் பட்டியலில் திரும்பப் பெறப்பட்டது என அறிவித்துள்ளது.

sdஇதனைத் தொடர்ந்து, பணி நியமன ஆணை ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் கொடுக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், வட மாநிலத்தவர்களை பணி நியமனம் செய்வார்களா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதோடு, இதுவரையிலும், 2017ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டின்படி 1060 காலிப் பணியிடத்திற்கு தற்போது நியமனம் வழங்கும் நிலையில், மேலும் 2022ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 2,256 விரிவுரையாளர் காலிப் பணியிடங்கள் தேவையாக உள்ளது. இதில் தற்போது 2017ன் படி 1060 நியமனம் போக, மீதமுள்ள 1,196 காலிப் பணியிடங்களை எப்போது நிரப்பப் போகிறது? இல்லை ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் 1,311 பேரை நியமனம் செய்யுமா? அப்படி இல்லையென்றால் அவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத் தின் தலைவர் லதா ஐ.ஏ.எஸ் இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் தெளிவாகத் தேர்வை நடத்தியுள்ளோம். வெளி மாநிலத்தவர்கள் உள்ளார்கள் என்பது போலியானது. அப்படி எதுவும் இல்லை'' என்றார். இதுகுறித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "தமிழகத்தில் தமிழர்களுக்கான உரிமை முழுமையாக மறுக்கப்படுகிறது. ரயில்வே, பெட்ரெலியம், அஞ்சல் துறையில் 946 பேரில் 66 சதவீதம் வெளிமாநிலத்தவரே உள்ளனர். தற்போது பாலிடெக் னிக் விரிவுரையாளர் பணியிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்துள் ளார்கள் என்றால் இது யாருடைய மெத்தனப் போக்கு? அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. முன்பிருந்த அ.தி.மு.க.வும் இதைத்தான் செய்தது. அதையே இவர்களும் செய்வது நியாயமா? உடனடி யாக இந்தத் தேர்வை ரத்து செய்து, தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்ட பிறகு, மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியமே மறு தேர்வு நடத்த வேண்டும்'' என்றார்.

nkn170822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe