வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஹாலிவுட் பட பாணியில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் தப்பிச்சென் றது காவல்துறையை அதிர்ச்சியடைய வைத் திருக்கிறது.

பல்கேரியா நாட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் (55). வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு 2 குழந்தைகள், மனைவி உள்ளனர். சொந்த நாடான பல்கேரியாவிலேயே அவருடைய குடும்பம் வசித்துவரும் நிலையில்... கடந்த 2019-ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டார். இதனால் சென்னை பெருநகர குற்றப்பிரிவு இவர் மீது வழக்குப்பதிவு செய்து திருச்சி சிறை சிறப்பு முகாமிற்கு அனுப்பிவைத்தனர்.

s

இவருக்கு கேன்சர் வியாதி இருப்ப தால் ஒவ்வொரு மாதமும், திருச்சி அரசு மருத்துவமனைக் குச் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா காலம் என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட கைதிகளை ஒரேயறையில் அடைப்பதைத் தவிர்த்து, அவரை தனியாக அறை எண் 20-ல் அடைத்து வைத்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 28-ஆம் தேதியே அவர் தப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை, பங்களாதேஷ், ரஷ்யா, நைஜீரியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 115 பேர் இருக்கிறார்களா? என்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். அப்போதுதான் பல்கேரியாவின் இலியன் முகாமில் இல்லாதது கண்டுபிடிக்கப் பட்டது. அதன்பிறகு அறை எண் 20-ல் சென்று பார்த்தபோது, அறையிலுள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டுள்ள தைக் கண்டு அதிகாரி கள் அதிர்ச்சியடைந்தனர்.

ss

தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் அருண், துணை ஆணையர் சக்திவேல் (சட்டம், ஒழுங்கு), கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சிறப்பு முகாமுக்குச் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் அறைக்கு அருகில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து சிறப்பு முகாம் தனித்துணை ஆட்சி யர் ஜமுனாராணி அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர். சிறை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்த பின்னர் வெளியான தகவலின் அடிப்படையில், பல்கேரியா நாட்டு கைதி இலியன் தினமும் சிறைப்பு சிறை முகாமிற்கு தண்ணீர் கொண்டுவரும் லாரியில் பதுங்கிக் கொண்டு வெளியே தப்பித்துச் சென்றது தெரியவந்தது.

Advertisment

இந்நிலையில், அவருடைய புகைப்படங்களை இந்தியாவிலுள்ள எல்லா விமானநிலையங்களுக்கும், ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்ததோடு அவர் கேரளா, பெங்களுர் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகித்து தற்போது, இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், தயாளன், நிக்சன் உள்ளிட்டோரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, "தப்பிச்சென்ற இலியன் மனதளவில் பாதிப்படைந்துள்ளார். அவருக்கு கேன்சர் நோய் இருப்பதால், தான் எப்போது இறப்போம் என்பது தெரியாது. அதற்குள் தன்னுடைய குடும்பத்தை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தப்பியிருக்கலாம்''’என்று முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

அவரை, தற்போது தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இந்தியாவின் முக்கிய போக்குவரத்து வழிகளில் மிகவும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தி யுள்ளனர். தவிரவும் முகாமில் அதிகாரிகளோ, சக முகாம் வாசிகளோ எந்தவிதத்திலாவது இலியன் தப்பிச் செல்வதற்கு உதவியிருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப் படுகிறது.

இதற்குமுன் இந்தச் சிறைவளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் தப்பிச் சென்றிருக்கிறார். அதிலும் 25 அடி உயர சுவரைத் தாண்டி குதித்துச் சென்றிருக்கிறார். நைஜீரியாவை சேர்ந்த ஸ்டீபன் பால் அப்புச்சி (வயது 32) என்பவர் போலி பாஸ்போர்ட் வழக்கில், சென்னை பெருநகர போலீசாரால் கைது செய்யப் பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.

ss

இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி அதிகாலை, தண்ணீர் லாரியின் அடியில் தொங்கியபடி தப்பிச் சென்றார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். திருச்சி தனிப்படை போலீசார் ராஜஸ்தான், மும்பை என வட மாநிலங்களில் நடத்திய தேடுதல் வேட்டையில், 2019 செப்டம்பர் 9-ஆம் தேதி, டெல்லியில் வைத்து ஸ்டீபன்பாலை கைது செய்தனர்.

"இலியன் ஸ்ட்ராகோவ், ஸ்டீபன்பால் போல தமிழக போலீசார் கையில் சிக்கப்போகிறாரா… இல்லை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு திருட்டுத்தனமாக இந்திய எல்லையைத் தாண்டப்போகிறாரா?' என்பதை பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.