1980-களில் தமிழ் சினிமா பிரபல இயக்குனரும் நடிகருமான ஒருவர், அந்த காலகட்டத்தில் வெளிநாட்டுக் கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி கடத்திவந்து விற்பனை செய்வதில் பிரபலமாக இருந்தார். அதே பாணியில் தற்போது வெளிநாட்டு சொகுசு கார்களை, அண்டை நாடான பூட்டானிலிருந்து கடத்திவந்து, இந்தியாவின் இமாச்சலபிரதேச மாநிலத்தில் முறைகேடாக பெயர்மாற்றம் செய்து, நாடு முழுவதும் அந்த கார்களை ஹவாலா பணம் மற்றும் தங்கப் பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்துவந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisment

இந்தியாவில் வெளிநாட்டு சொகுசு கார் இறக்குமதி செய்ய, 160 சதவீதம் வரை வரிவிதிக்கப்படுகிறது. அண்டை மாநிலமான பூட்டானில் வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு வரி மிக மிகக் குறைவு. இதனால் வெளிநாட்டு சொகுசு கார்களை பூட்டான் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் கடத்திவரும் தகவல் இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது. வெளிநாட்டு சொகுசு கார்கள் இந்திய -பூட்டான் எல்லை வனப்பகுதியை ஒட்டிய பாதையில் கடத்திவருவதும், உதிரி பாகங்களாகப் பிரித்து பிறகு இந்தியாவுக்குள் கொண்டுவந்து அசெம்பிள் செய்து முழு காராகவும், அதன் ஆவணங்களை முறைகேடாக மாற்றியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கண்டெய்னர் லாரி மூலமாகவும் கடத்தி வரப்படுகின்றதாம். 

Advertisment

இந்திய, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் பெயரில் போலியான முத்திரைத்தாள் கள், போலி முத்திரைகள், போலி ஆவணங்கள் மூலம் அந்த கார்கள் பூட்டானிலிருந்து வாங்கப்பட்டதாக, இமாச்சலப் பிரதேசத்திலுள்ள போக்குவரத்து அலுவல கங்களில் பதிவுசெய் யப்படுகின்றன. அதில் வரி ஏய்ப்பு செய்வ தோடு சட்டவிரோத பணப் பரிமாற்றங்களும் நடக்கின்றன என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் ஆபரேஷன் "நும்கூர்' என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நும்கூர் என்றால் பூட்டானின் சோங்கா மொழியில் வாகனம் என்று அர்த்தம். 

இந்த ஆபரேஷன் நும்கூர் குறிப்பாக கேரளாவில் தீவிரமாக நடத்தப்பட்டது. அதில் கேரளாவில் மட்டும் 200 கார்கள் பயன்பாட்டில் இருக்கலாம் என்ற ரகசிய தகவல் சுங்கத்துறை அதிகாரி களுக்குக் கிடைத்துள்ளது. அதன்பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை கொச்சின், திருவனந்தபுரம், கோழிக் கோடு, மலப்புரம், குட்டிபுரம், திருச்சூர் ஆகிய இடங்களில் அதிரடியாக ஆபரேஷன் நடத்தப்பட்டது. கேரள போக்குவரத்து ஆணையம்.. தனிக்குழு, தீவிரவாத எதிர்ப் புப் படை, மாநில போலீசார் இணைந்து 30-க்கும் அதிக மான இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். 

Advertisment

குறிப்பாக பிரபல நடிகர் பிரித்விராஜ் வீட்டில் நடத்திய சோதனையில் கார்கள் சிக்காத நிலையில், அவர் வைத்திருந்த மற்ற கார்களின் டாக்குமெண்ட்களை வழங்குமாறு சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளார்கள். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு வெளிநாட்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு துல்கர் சல்மான் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆர்.பி.புரமோட்டர்ஸ் நிறுவனத்திடமிருந்து ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த கார்கள் வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கிலிருந்து விடுவிக்குமாறு மனு செய்துள்ள நிலையில், இந்த விசாரணை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. மூன்றாவதாக நடிகர் அமித் சக்கலக்கலுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6 வெளிநாட்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 5 கார்கள் ஆல்ட்ரேஷன் செய்ய கொண்டுவரப்பட்டதாக வும், ஒரு கார் மட்டும் அவருடையது என்றும் தெரிவித்துள்ளார். அவரின் சமூக வலைத்தளத்தில் பல வெளிநாட்டு சொகுசு கார் களுடன் சாகசம் செய்யும் பதிவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கோவையைச் சேர்ந்த தமிழ் நடிகரும் பாடகருமான ஒருவரின் பெயர் அடிபடுவதாகவும் கோவையை சேர்ந்த அன்டர்கிரவுண்ட் நெட்வொர்க் குறித்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ள தாகவும், உளவுத்துறை மூலம் அவர்களைக் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக, தேசிய அரசு போக்குவரத்து ஆணையத்திற்குச் சொந்தமான பரிவாகன் வெப்சைட்டை தவறாக முறைகேடாகப் பயன்படுத்தியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் 2016-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஒரு காரின் விவரம் 2005-லிருந்து பயன்படுத்துவதாக மோசடியாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தேசிய அளவில் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதுகண்டு உள்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள்.

இந்த சோதனையைப் பற்றி கேரள மாநிலம் கொச்சின் சுங்கத்துறை கமிஷனர் திஜு தாமஸ், "இந்தக் கடத்தல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் பல மாநிலங்களில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 36 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவையனைத்தும் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பல விதிகளை மீறியதாக உள்ளன. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் எல்லாம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மூலமாக வாங்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து வருகிறோம்''’என தெரிவித்தார்.