மிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டா லின். அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு முதல்வர் செல்வது இது ஐந்தாம் முறை.

Advertisment

2021-ல் ஆட்சிப்பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் தீவிரம் காட்டி னார் ஸ்டாலின். இதற்காக, தமிழகத்தின் பொரு ளாதாரத்தை 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெ ரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவதையே இலக்காக நிர்ணயித்து வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத் திற்கு கொண்டு வரவேண்டும் என்பதில் அவரது ஆர்வமும் திட்டமிடலும் அதிகரித்திருந்தது. 

அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தொழில் நிறுவனங்களுடன் சந்திப்பு, அந்த நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடுகள் செய்ய சம்மதிக்க வைத்தல், வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க வலியுறுத்தல் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் ஸ்டாலின்.

ஏற்கனவே 4 முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய எமிரேட்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங் குள்ள தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் 18 ஆயிரத்து 498 கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக தொழில் துறையினர் விவரிக்கின்றனர். 

Advertisment

இந்தச் சூழலில், ஜெர்மன் மற்றும் இங்கி லாந்து நாடுகளுக்கு கடந்த 30-ந் தேதி புறப்பட்டார் ஸ்டாலின். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், "தமிழ் நாட்டிற்கான தொழில் முதலீடுகளை பெற்றுவர ஒருவார காலம் வெளிநாடு செல்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதற்காக 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளன. இதன் மூலம் 32,81,000 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டுப் பயணம் போல் எனது பயணம் இருக்காது''’என்றார். 

tncm1

ஜெர்மன் நாட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு-ஜெர்மன் வாழ் தமிழர்களுடன் சந்திப்பு எனும் நிகழ்வில் கலந்துகொண்டார் ஸ்டாலின். வெளிநாடு வாழ் இந்தியத் தமிழ்ச் சங்கத்தினர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர். 

Advertisment

அவர்களிடம் கலந்துரையாடிய அவர், "நில எல்லைகளும் கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை இணைக்கின்றன. கண்டங்கள் கடந்தாலும் நம் தொப்புள் கொடி உறவு அறுந்துவிடவில்லை. உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழன் இருப்பான்; தமிழனின் குரல் கேட்கும் என்கிற அளவுக்கு உலகெல்லாம் தமிழன் பரவி உயர்ந்த பொறுப்பில் இருப்பது மகிழ்ச்சி! வாழ்வதும் வளர்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும். இதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். நம்முடைய அரசின் திட்டங் களை, அரசு ஏற்படுத்தித் தருகின்ற வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் சின்னதாக தொழில் தொடங்கினாலும், அதனை தமிழகத்திலும் தொடங்க முயற்சி செய்யுங்கள். இங்குள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத் திற்கு அழைத்து வாருங்கள்''” என்றார் மிக உரிமையாக ஸ்டாலின். இதனையடுத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான அரிய நூல்கள் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் நூலகத்தை மனைவி துர்கா, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளு டன் சென்று பார்வையிட்டார் ஸ்டாலின். இதனை பகிர்ந்துகொண்ட அவர், "ஐரோப்பா தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமாக இருந்த கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் 1.25 கோடி நிதி வழங்கப்பட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெர்மன்வாழ் தமிழர்களிடம் பேசியபோது, "50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்கள், ஓலைச் சுவடிகள் இந்த நூலகத்தில் இருக்கின்றன. தமிழுக்காக உலகில் இருக்கும் பெரிய நூலகங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்திலுள்ள நூலகம், யாழ்ப்பாணத் திலுள்ள யாழ் நூலகம் வரிசையில் இதுவும் பிர சித்திபெற்றது. ஆனால், இந்த நூலகத்திலுள்ள அரிய வகை நூல்கள் பாதுகாப்பற்றுக் கிடக்கிறது. இது குறித்து தமிழக அரசுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், இதனைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டும். 

இதற்காக கொலோன் பல்கலைக்கழகத்துடன் விவாதித்து உரிய முயற்சிகளை எடுத்தால் தமிழின் பழம்பெருமை நூல்கள் பொக்கிஷமாக மாறும்! மேலும், பல்கலைக்கழகத்தில் 60 ஆண்டுகாலமாக நடந்துவந்த தமிழ்த்துறை தற்போது மூடப்பட்டுக் கிடக்கிறது. அதனை தடுக்க 1.25 கோடி நிதி கொடுக்கப்பட்டிருந்தாலும், தமிழ்த்துறை துவக்கப் பட்டதா? கொடுக்கப்பட்ட நிதி முறையாக பயன் படுத்தப்பட்டதா? என்பது குறித்து  தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டுச் சென்றுள்ள சூழலிலாவது இதில் தமிழக அரசு அக்கறைகாட்ட வேண்டும்'' என்கிறார்கள். இந்த பயணத்தில் ஜெர்மனியின் தொழில் நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தினார் ஸ்டாலின். இதில், 26 ஒப்பந்தங்கள் கையெழுத் திடப்பட்டன.  ஏற்கனவே தமிழகத்தில் இந்த நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளின் தொடர்ச்சி யாகவே இந்த ஒப்பந்தங்கள் போட்டப்பட்டிருக் கிறது. இதன்மூலம் இவைகளின் முதலீடுகள் 7,020 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நார் ப்ரேம்ஸ் 2000 கோடி, நோர்டெக்ஸ் குழுமம் 1000 கோடி, ஈ.பி.எம். -பாப்ஸ்ட் 201 கோடி ஆகியவை இந்த ஒப்பந்தங்களில் முக்கியமானவை. இதன் மூலம், 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாகியிருக்கிறது.

மேலும், விரிவுபடுத்தப்பட்ட ஒப்பந்தங்க ளாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உபகரணங் கள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் மேம் பாட்டு ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் மருத்துவ தயாரிப்புகள் ஆகிய துறைகளில் வென்சிஸ் எனெர்ஜி, பெல்லா ப்ரிமியர் ஹேப்பி ஹைஜீன், பி.ஏ.எஸ்.எஃப்., ஹெர்ரென்க் கனெக்ட், மாஸ் எனெர்ஜி, விட்சென்மேன் இந்தியா ஆகிய நிறு வனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன.  

தொழில் நிறுவனங்களின் இந்த மாநாட்டில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த தலைவர்களு டன் தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். அதில், ஆட்டோமொபைல் துறையில் தமிழகம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை விவரித்து, பி.எம்.டபிள்யூ.வின் செயல்பாட்டை அதிகப்படுத்திட வேண்டுகோள் வைத்தார்.  

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்திற்கு புறப்பட்டார்  முதல்வர்     ஸ்டாலின். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. "ஸ்டாலின் வாழ்க; தமிழகம் வளர்க!' எனும் முழக்கங்கள் எதிரொலித்தன. லண்டன்வாழ் தமிழர்கள், ஸ்டாலினுடன்          செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இங்கிலாந்தில் கால்பதித்ததுடன் அன்பாலும், பாசத்தாலும் அரவணைக்கப்பட்டேன் என பரவசப்பட்டார் ஸ்டாலின். 

இங்கிலாந்து நாட்டின் அமைச்சர் கேத்தரின் வெஸ்டை சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அந்த சந்திப்பில் கல்வி, ஆராய்ச்சி, பசுமைப் பொருளா தாரம், கடல்சார் இணைப்பு, திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் தமிழகத்திலுள்ள வாய்ப்புகளையும் பலன்களையும் எடுத்துரைத்திருக்கிறார். தமிழகத்தின் பொருளா தார இலக்கையும் பார்வையையும் கேத்தரின் வெஸ்டிடம் சுட்டிக்காட்டி அவற்றினை அடைய இங்கிலாந்து அரசின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின். 

இதனைத் தொடர்ந்து, தொழில் முதலீட்டாளர்களுடனான மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடன் தொடர்ச்சி யான உயர் மட்ட கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஸ்டாலின் முன்னிலையில், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் துறை, செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடி வமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்        களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள் ளப்பட்டன. 

விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தமிழகத்தில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டுவதை முதல்வரிடம் பகிர்ந்துகொண்டது. லாயிட்ஸ் லிஸ்ட் இண்டெலிஜென்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தந்தத்தின்படி,  கடல்சார் இடர் மேலாண்மை, காப்பீடு,கப்பல் கண் காணிப்பு பகுப்பாய்வுகளில் விரிவாக்கம், கப்பல் கட்டுதல், துறைமுக மேலாண்மை, கடல்சார் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டின் திறன்           களை கணிசமாக மேம்படுத்தும் என சொல்லப் படுகிறது.  

அதேபோல, தமிழகத்தில் புதிய மின்சார மின்மாற்றி உற்பத்தி மையத்தை 300 கோடியில் நிறுவ, வில்சன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் டெக்னா லாஜியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜவுளி ஏற்றுமதி மையமாக தமிழகத்தை வலுப்படுத்தும் வகையில் பிரிட்டானியா ஆர்.எஃப். ஐ.டி. டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனத்துடன் 520 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. 

ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தொழில் முதலீட்டு சந்திப்புகளை பல்வேறு நிறுவனங்களுடன் நடத்தி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்றிக்கொண்டு 8-ந்தேதி சென்னைக்கு திரும்பும்  முதல்வர் ஸ்டாலினின்  இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலம், தமிழகத்தில் துறை ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், உயர்தர சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடித்தள மிட்டுள்ளது.