2011-ஆம் ஆண்டிலிருந்து பொதுத்தொகுதியாக மாற்றப்பட்ட குன்னூர் தொகுதி ஏறக்குறைய தி.மு.க.வின் கோட்டை என்றே கூறலாம். இருப்பினும், அ.தி.மு.க.வும் தி.மு.க.வுக்கு சரியான 'டப் பைட்' கொடுத்துள்ளது. இந்த முறை 'தமிழ் வேட்பாளருக்கே' வாய்ப்புக் கொடுங்கள் என தி.மு.க. தலைமைக்கு கோரிக்கைவைத்து வருகின்றனர் தமிழ் மக்கள்.

Advertisment

அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப் பாக, பேருந்து நிலையமருகே அமைந் துள்ள அண்ணா சிலையிலிருந்தே திரா விடக் கட்சிகளின் அரசியல் துவங்குகிறது. குன்னூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்த வரை படுகர், தாயகம் திரும்பிய தமிழர்கள், புலம்பெயர் தமிழ் மக்கள், பழங்குடியின மக்களான கோத்தர், இருளர், குரும்பர் உள்ளிட்ட வாக்குகளே வெற்றி வேட்பாளரைத் தீர்மானிக்கிறது. 

Advertisment

குன்னூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை சுற்றுலா தலங்களில் பார்க்கிங் வசதி, ரயில்வே லெவல் கிராசிங் பகுதியில் மேம்பாலம், தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயம், குன்னூரில் பொதுவான திருமண மண்டபம் அமைக்கவேண்டும், மனித -விலங்கு மோதல் குறித்து சிறப்பு திட்டங்கள் வகுத்தல், குன்னூரில் பழைய நீர் ஆதாரமாக உள்ள கரன்சி  மற்றும் ஜிம்கானா நீர்த்தேக்கங்களை புதுப்பித்து குடிநீர்ப் பிரச்சினை நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்பது பொதுமக்களின் நிரந்தர கோரிக்கையாக இருந்துவருகிறது.

   "நீலகிரி மாவட்ட அரசியலில் முக்கிய இடம்பெற்றுள்ள குன்னூர் தொகுதி, கடந்த பல ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு உறுதியான ஆதரவை வழங்கிவந்துள்ளது. 1957 முதல் 2021 வரை நடைபெற்ற 15 சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் - 2 முறை, த.மா.க. (தி.மு.க. கூட்டணியில்) - 1 முறை, அ.தி.மு.க. - 3 முறை, தி.மு.க. - 9 முறை வெற்றிபெற்றுள்ளன. கடந்த முறை தேர்தலில் சொந்த சமூக மக்கள் கைவிட்ட நிலையில், தமிழ் மக்களின் ஆதரவோடு வெற்றிபெற்ற ராமச்சந்திரனுக்கு வனத்துறை அமைச்சராக பதவிகொடுக்கப்பட்டது. ஆனால், உட்கட்சி பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களாலும், வனப்பகுதியில் 

Advertisment

தனது சொந்த தேவைக்காக நிதியொதுக்கி சாலை அமைத்தது தொடர்பாக வனத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மாற்றம்செய்யப் பட்டு சுற்றுலா அமைச்சர் பதவி வழங்கப்பட் டது. ஆனால் அதிலும் முறையாகச் செயல் படாததால் பதவி பறிக்கப்பட்டது. பின் தமிழ்நாடு தலைமை அரசு கொறடாவாக பதவி வழங்கப்பட்டது. வருகின்ற தேர்தலில் இவருக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? என்பது கேள்வி. இந்நிலையில், கூடுதலாக இத்தொகுதிக்கு சீட் கேட்டு தி.மு.க. சார்பில் 5 நபர்கள் களமிறங்கி தலைமையின் பதிலுக்காக காத்திருக்கின்றனர்'' என்கின்றார் குன்னூர் நகர தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

கட்சி விசுவாசம், நிர்வாக அனுபவம், மக்கள் தொடர்பு, சமூக சேவை உள்ளிட்ட காரணிகளே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளரைத் தீர்மானிக்கும் என்பதால், தி.மு.க.வின் நீல கிரி மாவட்டப் பொறுப்பாளர் கே.எம்.ராஜு, தலைமைச் செயற்குழு உறுப் பினர் எக்ஸ்போ செந்தில், கோத்த கிரி ஒன்றியச் செயலாளர் கண் ணன், விளை யாட்டு மேம்பாட் டுத்துறை மாநில துணைச்செயலா ளர் வாசிம்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சுனிதா நேரு உள்ளிட்டோர் தங்களுக்கு வேட்பாளர் வாய்ப்புவேண்டி தலைமையின் பதிலுக்காகக் காத்திருக் கின்றனர்.

  கோத்தகிரி பகுதியின் தி.மு.க. நிர்வாகியோ, "குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதிகளையே பெரும்பாலும் அனைத் துக் கட்சிகளும் தங்களது கட்சியின் வேட்பாளராக களமிறக்குவதை வழக்க மாகக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வும் அப்படியே செய்ய, அந்த சமூக வாக்குகள் தி.மு.க. வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளிய நிலையில் தாயகம் திரும்பியோர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் வாக்குகள் தி.மு.க.வை வெற்றி பெறவைத்தது. இந்த தமிழ் மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் மறைந்த 'கலைஞர்' இன்றுவரை வாழ்கின்றார். அதனுடைய வெளிப்பாடுதான் இது! ஆகவே இம்முறை தமிழ்  வேட்பாளருக்கு தி.மு.க. ஒதுக்க வேண்டும் என்பதே நீண்ட நாள் கோரிக்கை. அப்படி ஒதுக்கும்பட்சத் தில் வரலாறு காணாத வெற்றியை தி.மு.க.வுக்கு தமிழ் மக்கள் தேடித்தருவார்கள்'' என்கின்றார் அவர்.

  இதேவேளையில், கடந்த 2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் போட்டியிட நேர்காணலுக்குச் சென்று திரும்பியவரும், முதல்வர் மு.க. ஸ்டாலினின் பாராட்டைப் பெற்றவருமான கோத்தகிரி ஒன்றியச் செயலாளரான கண்ணன், கொரோனா கால சேவை, ‘உதயநிதி’ இலவச இ-சேவை மையம் என அரசியலோடு சேவை புரியும் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ள எக்ஸ்போ செந்திலும், தமிழ் சமூக மக்களின் அடையாளமாக தி.மு.க. வேட்பாளராக களமிறங்க வாய்ப்புகள் அதிகம்” என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

தி.மு.க. தரப்பு இவ்வாறு தேர் தலை எதிர்நோக்க, அ.தி.மு.க. தரப்பில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, ஹேம்சந்த், மாதன் ஆகியோர் வேட்பாளருக்கான களப் போட்டியில் உள்ளனர். பா.ஜ.க. கூட் டணிக்கு வழங்கினால் சௌந்திர பாண்டியன் களமிறங்கலாம்.

-வேகா