டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வட இந்தியர்கள் கணிசமாகத் தேர்வுபெறுவது ஒருபக்கமிருக்க, மத்திய அரசுப் பணிகளில் தமிழர்கள் தகுதியிருந்தும் வேண்டுமென்றே ஒதுக்கப்படுகிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
அண்மையில் தமிழக அரசில் மாவட்ட அளவில் உயர் பொறுப்பிலிருந்த ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந் தோம். “"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க' என்றவர் ஒரு இளைஞருக்கு மருத்துவச் சோதனை செய்துகொண்டிருந்தார்
சோதனை முடிந்ததும், அந்த இளைஞரைச் சுட்டிக்காட்டியவர், “""இவர் மாஸ்டர் டிகிரிவரை படித்தவர்; வேலை வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருக்கிறார். அண்மையில் நடந்த மத்திய போலீஸ் பாதுகாப்பு படைத் தேர்விற்காகப் போயி ருக்கிறார். எழுத்து, உடல் தகுதியில் தேர்வுபெற்றிருக்கிறார். ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்லுகிறேன், இவரின் உடல் ஆரோக்கியம் நார்ம லாகவே உள்ளது. எந்தக் குறையும் இல்லை. ஆனால் "உனக்கு இருமல் உள் ளது. அந்நோய் குறித்து அரசு மருத்துவர் சோதனைச
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வட இந்தியர்கள் கணிசமாகத் தேர்வுபெறுவது ஒருபக்கமிருக்க, மத்திய அரசுப் பணிகளில் தமிழர்கள் தகுதியிருந்தும் வேண்டுமென்றே ஒதுக்கப்படுகிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
அண்மையில் தமிழக அரசில் மாவட்ட அளவில் உயர் பொறுப்பிலிருந்த ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந் தோம். “"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க' என்றவர் ஒரு இளைஞருக்கு மருத்துவச் சோதனை செய்துகொண்டிருந்தார்
சோதனை முடிந்ததும், அந்த இளைஞரைச் சுட்டிக்காட்டியவர், “""இவர் மாஸ்டர் டிகிரிவரை படித்தவர்; வேலை வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருக்கிறார். அண்மையில் நடந்த மத்திய போலீஸ் பாதுகாப்பு படைத் தேர்விற்காகப் போயி ருக்கிறார். எழுத்து, உடல் தகுதியில் தேர்வுபெற்றிருக்கிறார். ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்லுகிறேன், இவரின் உடல் ஆரோக்கியம் நார்ம லாகவே உள்ளது. எந்தக் குறையும் இல்லை. ஆனால் "உனக்கு இருமல் உள் ளது. அந்நோய் குறித்து அரசு மருத்துவர் சோதனைச் சான்று குறிப்பிட்ட தினத்திற் குள் வேண்டும்' என்று சார்ட் கொடுத்து அனுப்பிவிட்டனர் அந்த கேம்பின் அதிகாரி கள். இருமலை ஒரு நோய் என்று சொல்லி யனுப்பியது ஏன் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது'' என்றார். அந்த இளைஞரிடம் மெல்ல பேச்சுக்கொடுக்க, பெயர், அடையாளங்கள் வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பேசத்தொடங்கினார்.
""சி.ஆர்.பி.எஃப்., சி.ஐ.எஸ்.எப். போலீஸ் படைப்பிரிவினருக்கான 64 ஆயிரம் காலியிடங் களுக்கான தேர்வு, கடந்த ஜன 7 முதல் 9 ஆம் தேதி வரை நடந்தது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப் பட்ட இரண்டாயிரம் இடங்களுக்கு சென்னை மற்றும் சிவகங்கையில் தகுதித் தேர்வு நடந்தது. அடிப்படை தகுதி 10 ஆம் வகுப்பு என்றாலும், பி.இ., மாஸ்டர் டிகிரி பட்டம்பெற்ற ஆண், பெண் கள் அன்றைய தினம் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக எழுத்துத் தேர்வில் வடிகட்டப்பட்டு தேர்வானவர்கள், உடல் தகுதித் தேர்வு சோதனையில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை 24 நிமிடத்தில் கடக்கவேண்டும். இறுதியாக மருத்துவச் சோதனை. நான் வரிசையில் வரும்போது தற்செயலாக லேசாக இரும, "உனக்கு இருமல் கம்ப்ளைண்ட், அரசு மெடிக்கல் செக்கப் அறிக்கையோடு வரவேண்டும்' என்று அனுப்பிவிட்டார்கள்.
இன்னொருவர் தன்னிடமிருந்த டாக்குமெண்ட் பேப்பர்களை அவசரமாக எடுக்கும்போது, ஒரு பேப்பர் டேபிளின் கீழே விழ தேடியிருக்கிறார். அவருக்குக் கண்பார்வை சரியில்லை என்றும் அரசு டாக்டரின் சோதனை அறிக்கை வேண்டுமெனவும் சார்ஜ் தரப்பட்டது. ஒரு இளைஞரின் வயிற்றைத் தடவிய கேம்ப் சோதனையாளர் "மலச்சிக்கல் வியாதி' என சார்ஜ் சீட் கொடுத்திருக்கிறார்.
இதுபோன்று சளி உள்ளிட்ட சாதாரண விஷயங்களுக்கு அரசு மருத்துவச் சோதனைச் சான்றுடன் ஒரு வாரத்திற்குள் மறுசோதனைக்கு வந்து சேரவேண்டும் என்று பல இளைஞர்களைத் திருப்பி அனுப்பினார்கள்'' என்கிறார் வருத்தமாய்.
"நீங்கள் நினைப்பதுபோல் கிடையாது. இது ஒரு சாதாரண விஷயம்தான் இங்கேயே மறு சோதனை செய்யுங்கள்' என்று சிலர் கேட்டும், கேம்பிலிருந்த இந்தி பேசும் அதிகாரிகள், ஏதேதோ சொல்லி அனுப்பிவிடுகிறார்களாம். முக்கிய தேர்வான இந்தப் பிரிவில், தமிழ்நாட்டின் நிலை கருதி ஒரு தமிழ் தெரிந்த அதிகாரியைக்கூட நியமிக்கவில்லையாம். இருக்கும் ஒன்றிரண்டு தமிழ் அதிகாரிகளை வேறு பகுதியில் வைத்துவிடு கிறார்கள். இதுபோன்ற காரணமில்லா சார்ஜ் மெமோக்களுடன் வந்த இளைஞர்களைச் சோதனை செய்த அந்த அரசு சீனியர் மருத்துவரோ,
""மருக்காலங்குளத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். தேர்வுக்கு போன ஒரு பெண்ணை, கண் நோய் என்று சொல்லி சான்றுக்காக அனுப்பிவிட்டார்கள். அவளின் கண்களை முழுக்கச் சோதனை செய்தோம். சி.டி.ஸ்கேன் பார்த்துவிட்டோம், லேசர் கொண்டு கண்ணின் ரத்த அழுத்தம் கூடச் சோதனை செய்துவிட்டோம். எந்தக் குறையும் இல்லை. சிவகிரியைச் சேர்ந்த இன்னொருவர் இ.என்.டி.யில் பிரச்சினை என வந்தார். சோதனை செய்ததில் நார்மல் என்று ரிப்போர்ட் வருகிறது.
முன்பெல்லாம் இதுபோன்று யாரும் வந்ததில்லை. கடந்த இரண்டு வருடமாக மத்திய பணிக்காக இதுபோன்று ரிப்போர்ட் கேட்டு வரு பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியதைப் பார்க் கும்போதுதான் எங்களுக்குச் சந்தேகமே வந்தது. கேம்பில் யார் இதுபோன்று கொடுத்தார்கள் என்று அவர்களிடம் கேட்டதற்கு, சாதாரண நபர் எங்களைச் சோதனையிட்டார். தள்ளியிருந்தவர் இந்த நோட்டீசைக் கொடுத்தார் என்கிறார்கள்; ஆனால் அதில் டாக்டர் கையெழுத்திருக்கிறது.
இதுபோன்று வரும் இளைஞர்கள், இந்த சோதனை அறிக்கைக்காக எந்த அரசு மருத்துவ மனை செல்வது, யாரைப் பார்ப்பது என்று நாள் கணக்கில் அலைகிறார்கள். அதிலேயே நேரம் போய்விடுவதால் காலக்கெடு முடிந்து, மனஅழுத்தத் தில் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். இது ஒரு வகையான யுக்தி என்றுதான் எங்களுக்குப் படுகிறது'' என்கிறார்கள் மருத்துவர்கள்.
வடநாட்டான் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், ""ரொட்டி, கப்டா, அவுர் காம். மதராஸி வாலேக்கோ நஹி மில்னா' என்பதே கொள்கைபோல. அதாவது உணவு, உடை, வேலை தமிழனுக்குக் கிடைக்கக்கூடாது.
-பரமசிவன்