Advertisment

நக்கீரன் செய்தி எதிரொலி! விவசாயிகள் மகிழ்ச்சி!

farmers

"சர்வாதிகார அதிகாரிகள்! கொந்தளிப்பில் விவசாயிகள்' என்ற தலைப்பில் டிசம்பர் 24-26 நக்கீரன் இதழில் கடலூர் மாவட்டம் வெலிங்டன் ஏரியிலிருந்து மேல்மட்ட கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் மறுப்பதையும், விவசாயிகள் போராட்டத்தில் குதித்ததையும் பதிவுசெய்திருந்தோம். இது 

Advertisment

தமிழக முதல்வர் கவனத்துக்குச்சென்று  நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேச, விவசாயி களின் கோரிக்கையை ஏற்று கால்வாயில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisment

24,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்வகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது வெலிங்டன் ஏரி. 28 அடி நீரை தேக்கி மேல்மட்டக் கால்வாய், கீழ்மட்டக் கால்வாய் என அனைத்துப் பகுதிகளுக்கும் பாசனத்திற்கு திறந்துவிடுவது வழக்கம். மழை குறைவாகப் பெய்யும் பருவகாலங்களில் வறட்சிப் பகுதிக்கு தண்ணீரைப் பகிர்ந்துகொடுப்பார்கள். தண்ணீர் மிக மிகக் குறைவாக இருந்தால் பாசனத்திற்கு திறந்துவிடுவது இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக மழை குறைவாக இருக்கும் காலங்க

"சர்வாதிகார அதிகாரிகள்! கொந்தளிப்பில் விவசாயிகள்' என்ற தலைப்பில் டிசம்பர் 24-26 நக்கீரன் இதழில் கடலூர் மாவட்டம் வெலிங்டன் ஏரியிலிருந்து மேல்மட்ட கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் மறுப்பதையும், விவசாயிகள் போராட்டத்தில் குதித்ததையும் பதிவுசெய்திருந்தோம். இது 

Advertisment

தமிழக முதல்வர் கவனத்துக்குச்சென்று  நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேச, விவசாயி களின் கோரிக்கையை ஏற்று கால்வாயில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisment

24,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்வகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது வெலிங்டன் ஏரி. 28 அடி நீரை தேக்கி மேல்மட்டக் கால்வாய், கீழ்மட்டக் கால்வாய் என அனைத்துப் பகுதிகளுக்கும் பாசனத்திற்கு திறந்துவிடுவது வழக்கம். மழை குறைவாகப் பெய்யும் பருவகாலங்களில் வறட்சிப் பகுதிக்கு தண்ணீரைப் பகிர்ந்துகொடுப்பார்கள். தண்ணீர் மிக மிகக் குறைவாக இருந்தால் பாசனத்திற்கு திறந்துவிடுவது இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக மழை குறைவாக இருக்கும் காலங்களில் கீழ்மட்ட கால்வாய் பகுதிக்கு மட்டுமே மிக அதிகளவில் தண்ணீரைக் கொடுத்துவந்தனர். 

இந்நிலையில் இந்த ஆண்டு 19 அடி மட்டுமே தண்ணீர் நிரம்பியது. அந்தத் தண்ணீரை நம்பி நடவுசெய்திருந்த மேல்மட்டக் கால்வாய் இரண்டாவது கிளை பகுதியைச் சேர்ந்த விவசாயி கள், "மழைநீரை நம்பி நடவு செய்துவிட்டோம். மழை நின்றுவிட்டது. அதைக் காப்பாற்ற 

தண்ணீர் வேண்டும்' என்று வேண்டுகோள் வைத்தனர்.

 இதுகுறித்து நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தனர். இதனால் கோபமடைந்த விவசாயிகள் போராட்டம் செய்து, நீதி கேட்டு முதல்வரிடம் முறையிட பாதயாத்திரை பயணம் என்று கிளம்பினர்.  விருத்தாசலம்  கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் அதிகாரிகளால் சரியான முடிவெடுக்க முடியவில்லை. இதுகுறித்து முதல்வர் உட்பட அனைத்து துறை அதிகாரி களுக்கும் புகாரனுப்பப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தி நமது நக்கீரன் இதழில் வெளிவந்தது. 

இதையடுத்து தமிழக முதல்வர், நீர்வளத் துறை உயரதிகாரிகள் கடந்த காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது முறைப்பாசனம் வைத்து தண்ணீரைப் பகிர்ந்தளித்து நெல் அறுவடை செய்துள்ளனர். இது 1987- 88-ன்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டி, அதன்படி தண்ணீரை மேல்மட்டக் கால்வாய் இரண்டாவது கிளை பகுதிகளுக்கு நீட்டிக்குமாறு அறிவுறுத்தியதையடுத்து கடந்த ஒன்றாம் தேதி தண்ணீரைத் திறந்துவிட்டனர்.

farmers1

"காய்ந்த நெற்பயிர்களுக்கு உயிர் வந்துள்ளது. எங்கள் போராட்டங் களை, உணர்வுகளை அரசுக்குத் தெரிவித்த நக்கீரன் இதழுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்''” என்றனர் மேல்மட்டக் கால்வாய் இரண்டாவது கிளை விவசாயிகள்.

இதுகுறித்து கொட்டாரம் விவசாயி கருணாநிதி நம்மிடம், "தண்ணீர் குறைவாக இருந்த காலங்களில் முறைப்பாசனம் வைத்து தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நெல்லை விளையவைத்தோம். இந்த நடைமுறையைச் செயல்படுத்துமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் மறுத்ததன் காரணமாக போராட்டத்தில் இறங்கினோம். எனவே முறைப்பாசனம் மூலம் தொடர்ந்து தண்ணீர் வழங்கி எங்கள் விவசாயத்தைக் காப் பாற்றவேண்டும்'' என்கிறார். 

செங்கமேடு விவசாயி கணேசன், "நூறாண்டுகளுக்கு முன்பு 24,000 ஏக்கர் பாசனம் பெறும்வகையில் வெலிங்டன் ஏரி உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஏரியின் பாசனத்திற்குட்பட்ட பென்னாடம், திட்டக்குடி நகரப் பகுதிகளை ஒட்டியிருந்த பல ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக, வணிக வளாகங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் கிராமப்புறங்களிலும் நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. இப்போது சுமார் 14,000 ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்யும் நிலங்களாக இருக்கின்றன. 

farmers2

இதையெல்லாம் நாங்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் நீர்வளத் துறை அதிகாரிகள் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஆங்கிலேயர் காலத்தில் ஏட்டில் எழுதிவைத்ததை மட்டுமே கணக்கில் வைத்துக்கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் விடுகிறார்கள். இது தவறு. வரும் காலங்களில் வருவாய்த் துறை மூலம் வெலிங்டன் ஏரி பாசனப்பகுதியில் தற்போது எவ்வளவு நிலங்கள் பாசனம் பெறுகின்றன என்பதைக் கணக்கெடுத்து அதன்படி தண்ணீரை வழங்க வேண்டும். மேலும், தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில் நெல் நடவு செய்வதைத் தவிர்த்து தண்ணீரை குறைவாகப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வித்து பயிர்களை விவசாயம் செய்யவேண்டும்'' என்கிறார்.

"மழை குறைவாக பெய்யும் காலங்களில் நீர் வளத்துறை அதிகாரிகள் வெலிங்டன் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்போது பாரபட்சமான போக்கை தொடர்ந்து கடைப்பிடிப்பதால் ஒரு பகுதி விவசாயிகளான எங்கள்  வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாக உள்ளது. எனவே மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு அது கடலில் சென்று வீணாகக் கலக்கிறது. ஒருபக்கம் மழை பற்றாக்குறையால் வறட்சி, மறுபக்கம் கடலுக்குச் செல்லும் தண்ணீர். எனவே வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு நிரந்தர பாசன வசதி ஏற்படுத்த வேண்டும்'' என்கிறார் விவசாயி வில்லாளன்.

"அரசு அதிகாரிகள், மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில் அரசு கடுமையான உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என்கிறார்கள் விவசாயிகள் 

nkn140126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe