FOLLOW-UP தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!  கேட்பாரற்ற கேன்டீன் கேலிக்கூத்துகள்!

jail

 

 

(சென்ற இதழ் தொடர்ச்சி...)

டந்த அத்தியாயத்தில் தமிழகச் சிறைகளில் விவசாய நிலம் சார்ந்து நடக்கின்ற இரண்டுவிதமான ஊழல்கள் குறித்தும், கான்ட்ராக்டர் மாபியாக்களுடன் கைகோர்த்து சிறைத்துறை அதிகாரிகள், சிறை நிலங்களில் கிடைக்கும் விளைபொருள்களுக்கு கணக்கு காட்டாமல் மோசடி செய்வது பற்றியும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், சிறை கேன்டீன்களில்தான் அத்தனை அக்கிரமங்களும் நடக்கின்றன. அதுகுறித்தும் எழுதுங்களேன்..’ என முன்னாள் சிறைவாசி ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டு பேச, தகவல்களைக் கொட்டி யது சிறைத்துறை வட்டாரம். 

தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள், "தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!'’என்னும் தலைப்பில் நக்கீரன் தொடர்ந்து எழுதிவருவதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைப்பதிலிருந்தே, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிறைத்துறையில் நடக்கின்ற ஊழல்கள் மீதான அவருடைய ஆதங்கம் எத்தனை திண்ணமானது என்பதை அறிந்துகொள்ள முடியும். 

அனைத்து மத்திய சிறைகளிலும் சிறைவாசி களுக்கான கேன்டீன்கள், தமிழ்நாடு சிறை விதிகள், தொகுதி - 3, பகுதி லஒ-ன்படி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முழுப் பொறுப்பு, நல அலுவலர் (ரங்ப்ச்ஹழ்ங் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) ஆவார்.  இந்தக் கேன்டீன்கள் மூலம் காபி, டீ, பன், பிஸ்கட், டூத் பிரஷ், டூத் பவுடர், டாய்லட் சோப், எழுதுபொருள்கள், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வாழைப்பழம் மற்றும் கண்காணிப் பாளரால் அனுமதிக்கப்படும் இதர பொருள்களும் விற்பனை செய்யப்படும் (விதி-3).  

சிறையின் எந்த விதிகளிலும் சமைத்த உணவுகளை விற்பனை செய்யலாம் என்று குறிப்பிடாத நிலையிலும், மட்டன் சுக்கா, பரோட்டா, சிக்கன் கிரேவி, சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, இட்லி, பொங்கல், பூரி, ஆம்லெட், வடை, முட்டை போண்டா போன்ற 30-க்கும் மேற்பட்ட உணவுகள் கேன்டீன் மூலம் சமைக்கப் பட்டு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.  

jail1

 

சிறையின் ரேஷன் ஸ்டோர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பெறப்படும் சிலிண்டர்கள் மற்றும் மளிகைப் பொருள் களை சிறைக்கு வெளியே எடுத்துச்சென்றால் தெரிந்துவிடும் என்பதால், சிறைக்குள்ளேயே அந்தப் பொருள்களை மோசடி யாக விற்று சிறை அதி காரிகள் பணம் சம்பாதிப் பதற்காகவே துவங்கப் பட்டதுதான் இந்த உள் கேன்டீன் உணவகம். 

ஒருபுறம் சிறையின் ரேஷன் கிடங்கிற்கு 50 சதவீதப் பொருள்கள் வந்ததாகப் போலி கணக்கு காட்டப்பட்டு, மீதம் பெறப்பட்ட 50 சதவீதப் பொருள்களில் 15 சதவீத சிலிண்டர் மற்றும் மளிகைப் பொருள்களை உள் கேன்டீனுக்கு விற்று,  மோசடியாகப் பணம் பெறுவது நடக்கும். மறுபுறம், சிறை கண்காணிப் பாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு விலை நிர்ணயம் செய்து,  கேன்டீனில் அமோகமாக விற்பனை நடைபெற வைத்து, அதன்மூலமும் பணம் தரப்படும்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே, அப்படித்தான் சிறை கண்காணிப்பாளர்களுக்கு இரண்டு வழிகளிலும் பணம் கொட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு மாதத்திற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை ஒவ்வொரு மத்திய சிறையின் கண்காணிப் பாளரும் முறைகேடாகப் பணம் பெற்றுவருகின்றனர். 

இதைக் கட்டுப்படுத்துவதற்காக அப்போது சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த அமரேஷ் பூஜாரி, 17-6-2023 அன்று 32 உணவு வகைகளைக் குறிப்பிட்டு விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்டார். அதில் மட்டன், சுக்கா மற்றும் நாட்டுக்கோழிக் குழம்பும் வழங்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அது பெரிய அளவில் சர்ச்சையானதால் 5-7-2023 அன்று அந்த இரண்டு பொருள்களை மட்டும் நிறுத்த உத்தர விட்டு, மீதமுள்ள பொருள்களை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.  தற்போதைய டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் வந்தபின் இவற்றின்  எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுழற்சி எவ்வாறு நடைபெறுகிறதென்று பார்ப்போம். 

கைதிகளின் அன் றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள் களை வெளியில் வாங்கி சிறைக்குள் விற்பதற்கு, அதே மளிகைக் கடைக்காரரிடமிருந்து கிடைக்கும் கமிஷன் தொகையை கேன்டீன் காவலர் மூலம் சிறை கண்காணிப்பாளர் பெற்றுக்கொள்வார். 

கேன்டீனில் சமைத்த உணவுகளை விற்பனை செய்வதற்கு, சுழற்சி முறையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறை கண்காணிப் பாளரால் ஒரு காவலர் நியமிக்கப்படுவார். இதற்கென தனி ரேட் உண்டு. இவர் ஒவ்வொரு நாள் மாலையிலும், அடுத்தநாள் சிறைவாசிகள் யார் யாருக்கு என்னென்ன உணவு வேண்டுமென்பதைக் கணக்கெடுத்து, அதன்படி சமைத்து வழங்குவார். உதாரணமாக, காலை உணவுக்கு 200 நபர்களும், மதிய உணவுக்கு 300 நபர்களும் ஆர்டர் கொடுத்துள்ளார்கள் என்றால், எவ்வளவு உணவுக்கு ஆர்டர் வந்துள்ளது என்பதை ரேஷன் ஸ்டோர் காவலரிடம் கூறுவார். அவர் இதனைக் கணக்கிட்டு, ரேஷன் ஸ்டோர்களிலிருந்து பிரதான சமையற்கூடத்திற்கு மளிகைப் பொருள்கள் வழங்கு வதை அந்த அளவுக்கு ஏற்றவாறு குறைத்துவிடுவார். அவ்வாறு குறைக்கப்பட்ட சிலிண்டர் மற்றும் மளிகைப் பொருள்களை ரேஷன் ஸ்டோர் காவலரிடமிருந்து வாங்கிக்கொண்டு, அவை வெளியிலுள்ள ஒரு மளிகைக் கடையிலிருந்து பெறப்பட்டதுபோல் போலி பில் தயாரிப்பார்கள். அந்த போலி பில்லுக்கான பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை மளிகைக் கடைக்காரருக்கு கமிஷனாகக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பெரும் தொகையை சிறை கண்காணிப்பாளரிடம் தந்துவிடுவார்கள். 

jail2

புழல் 2 மத்திய சிறையில், மூன்று மாதங்களுக்கு மட்டும் ஐந்து கேன்டீன்கள் நடத்துவதற்கு 5 காவலர்களிடம் தலா ரூ.3 லட்சம் வாங்கப்பட்டு கேன்டீன்கள் செயல்பட்டன. டி.ஜி.பி. மகேஸ்வர் தயாளுக்கு இது தெரியவந்ததும், அந்த 5 கேன்டீன்களையும் இழுத்து மூடியதுடன், அந்த 5 காவலர்களையும் தமிழ்நாட்டின் தொலைதூரத்திலுள்ள சிறைகளுக்கு பணியிடை மாற்றம் செய்தார். தற்போது அனைத்து மத்திய சிறை களிலும் சீனியாரிட்டியின் அடிப்படையில் கேன்டீன் காவலர்கள் பணி நியமனம் நடக்கிறது. ஆனாலும், ஊழல் தொடரவே செய்கிறது. 

கேன்டீன்களில் பொருள்களை விற்பனை செய்யும்போது, ஒரிஜினல் விலையுடன் 5 சதவீத லாபத்தைச் சேர்த்து விற்கவேண்டும் (விதி-8). பெரும்பாலான மத்திய சிறைகளில் இந்த 5 சதவீத லாபத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவது கிடையாது. குறிப்பாக, சமைத்த உணவுப் பொருள்களை விற்பனை       செய்வதில் கிடைக்கும் 5 சதவீத லாபத் தொகையை கணக்கிலேயே காட்டுவதில்லை. அதேநேரத்தில், கேன்டீனில் விற்கும் பொருள்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசின் ஜி.எஸ்.டி. வரிகளும் செலுத்துவதில்லை. இவ்வாறு பெறப்படும் 5 சதவீத லாபத் தொகையை, கேன்டீன் பராமரிப்பிற்கும், குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாள்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கும், சிறைவாசிகளுக்கு விளையாட்டுப் பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் (விதி-10). ஆனால், இதிலிருந்தே கோழிப்பண்ணை அமைப்பதற்கும், கோழிகள் வளர்ப்புக்காகவும், அரசாணையை மீறி பல லட்சங்களை சிறை கண்காணிப்பாளர்கள் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

தற்போது ஒரு வாரத்திற்கு ஆ வகுப்பு சிறைவாசி 1000 ரூபாய்க்கும், இ வகுப்பு சிறைவாசி 750 ரூபாய்க்கும் (முன்பு ஆ வகுப்பு - ரூ.750,  இ வகுப்பு ரூ.450) மட்டுமே பொருள்களை வாங்கவேண்டும் (விதி-4). ஆனால், இந்த விதிகளை மீறி ஒரு சிறைவாசியால் எவ்வளவு தொகைக்கு வேண்டு மென்றாலும் பொருள்களை வாங்கிக்கொள்ள    முடியும். 

உதாரணமாக, ஒரு சிறைவாசியைச் சந்திக்கவரும் உறவினர்கள், சிறைவாசியின் செலவுக்காக ரூ.10000 கொடுக்கிறார்கள் என்றால், சிறைவாசியின் கணக்கில் ரூ.1000 மட்டுமே கேன்டீன் காவலரால் வரவு வைக்கப்படும். சிறைவாசி அதிகமான பொருள்களை வாங்கும்போது, ஒரு சிறு தொகையை மட்டுமே சிறைவாசியின் கணக்கு அட்டையிலிருந்து கழித்துக்கொள்வர். மீதத் தொகை,  நேர்காணலில் உறவினர்களிடமிருந்து பெறப் பட்டு கணக்கில் காட்டப்படாத தொகையிலிருந்தோ, வெளியில் வாங்கியோ செட்டில் செய்யப்படும். சிறை கேன்டீனில் பணிபுரியும் காவலர்கள் ஏ-டஹஹ் அல்லது டட்ர்ய்ங்டங் மூலம் பணம் பெறுவது, லஞ்சம் பெற்றதாக வரும் செய்திகளுக்கெல்லாம் இந்தத் தவறான நடைமுறை தான் காரணம். இதுபோன்ற முறைகேடான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் காவலர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாகக் கிடைத்துவிடும். சில நேரங்களில், சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருள்களை, காய்கறிகளுக்குள் வைத்தே கடத்துவார்கள். குறிப்பாக பீடி சிறைக்குள் வருவதற்கும், கஞ்சா புழங்குவதற்கும் ஆணிவேராக இருப்பது சிறை உள் கேன்டீன்கள்தான். 

ஒரே சிறை கண்காணிப்பாளர், ஒரேவிதமான மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை,  சிறை உணவுக் கிடங்கிற்கு மிக அதிக விலை கொடுத்தும், சிறை கேன்டீனுக்கு விலை குறைவாகவும் வாங்கியுள்ளதை, இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே தெளிவாகத் தெரிந்துவிடும்.  இதுபோன்ற கேன்டீன் தில்லுமுல்லுகள் எல்லாம் சிறைத்துறையில் சர்வ சாதாரணம்.   

(ஊழல் தொடர்ந்து கசியும்...)

 

nkn120725
இதையும் படியுங்கள்
Subscribe