FOLLOW UP தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல் திறனற்ற ஜாமர்களால் சிறைக்குள்ளே ஸ்கெட்ச்

புதுப்பிக்கப்பட்டது
jail

 

(சென்ற  இதழ்  தொடர்ச்சி...)…

திருச்சி பெண்கள் தனிச்சிறையில் 09.09.2021 முதல் 21-09-2021வரை  AG Audit குழு தணிக்கை ஆய்வு நடத்தியது. கடந்த ஏப்ரல் 2017 முதல் ஆகஸ்ட் 2021 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து அப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்,  வருடம் முழுவதும் சராசரியாக 100 பெண்கள் மட்டுமே உள்ள  இச்சிறைக்கு உணவு கொள்முதல் செய்வதற்கு நான்கு நிதி ஆண்டுகளில் ரூ.1 கோடியே 8 லட்சம் செலவழித்தது தெரியவந்தது.   

மேலும், திருச்சியிலேயே குறைவான விலைக்கு காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு சொசைட்டிகள் இருந்தபோதும், புதுக்கோட்டையிலிருந்து அதிகமான ட்ரான்ஸ்போர்ட் செலவு செய்து திருச்சி பெண்கள் தனிச்சிறைக்கு, சந்தை மதிப்பை விட அதிக விலை கொடுத்து பொருள்கள் கொள்முதல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றே நடவடிக்கை எடுத்திருந்தா லாவது, இந்த உணவுக் கொள்முதல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், சிறை உயர் அதிகாரிகளுக்கு இது நன்றாகத் தெரிந் திருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால், மலையுடன் மோதும் தைரியம் அவர்களுக்கு இல்லை. 

சிறைத்துறையில் என்னென்ன மோசடிகளோ தொடர்ந்து நடந்துவரும் நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து, சிறைக்குள் பொருள்கள் எவ்வாறு பெறப்பட வேண்டும் என்பது குறித்து கடந்த 7-5-2024 அன்று  டி.ஜி.பி. மகேஸ் வர் தயாள் சுற்றறிக்கை அனுப்பினார். 

அதில், "அனைத்து மத்திய சிறைகள் மற்றும் கட்டுப்பாட்டு சிறைகளில் சிறைக் கைதிகளுக்குத் தேவையான சிலிண்டர்கள், மளிகைப் பொருள் கள், முட்டை, வாழைப்பழங்கள், அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற உணவு தானியங்கள், சிறையின் தொழிற்கூடத்திற்கு வாங்கப்படும் கச்சாப் பொருள

 

(சென்ற  இதழ்  தொடர்ச்சி...)…

திருச்சி பெண்கள் தனிச்சிறையில் 09.09.2021 முதல் 21-09-2021வரை  AG Audit குழு தணிக்கை ஆய்வு நடத்தியது. கடந்த ஏப்ரல் 2017 முதல் ஆகஸ்ட் 2021 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து அப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்,  வருடம் முழுவதும் சராசரியாக 100 பெண்கள் மட்டுமே உள்ள  இச்சிறைக்கு உணவு கொள்முதல் செய்வதற்கு நான்கு நிதி ஆண்டுகளில் ரூ.1 கோடியே 8 லட்சம் செலவழித்தது தெரியவந்தது.   

மேலும், திருச்சியிலேயே குறைவான விலைக்கு காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு சொசைட்டிகள் இருந்தபோதும், புதுக்கோட்டையிலிருந்து அதிகமான ட்ரான்ஸ்போர்ட் செலவு செய்து திருச்சி பெண்கள் தனிச்சிறைக்கு, சந்தை மதிப்பை விட அதிக விலை கொடுத்து பொருள்கள் கொள்முதல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றே நடவடிக்கை எடுத்திருந்தா லாவது, இந்த உணவுக் கொள்முதல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், சிறை உயர் அதிகாரிகளுக்கு இது நன்றாகத் தெரிந் திருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால், மலையுடன் மோதும் தைரியம் அவர்களுக்கு இல்லை. 

சிறைத்துறையில் என்னென்ன மோசடிகளோ தொடர்ந்து நடந்துவரும் நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து, சிறைக்குள் பொருள்கள் எவ்வாறு பெறப்பட வேண்டும் என்பது குறித்து கடந்த 7-5-2024 அன்று  டி.ஜி.பி. மகேஸ் வர் தயாள் சுற்றறிக்கை அனுப்பினார். 

அதில், "அனைத்து மத்திய சிறைகள் மற்றும் கட்டுப்பாட்டு சிறைகளில் சிறைக் கைதிகளுக்குத் தேவையான சிலிண்டர்கள், மளிகைப் பொருள் கள், முட்டை, வாழைப்பழங்கள், அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற உணவு தானியங்கள், சிறையின் தொழிற்கூடத்திற்கு வாங்கப்படும் கச்சாப் பொருள்கள், சிறை கேன்டீனுக்கு வாங்கப்படும் அனைத்து மூலப்பொருள்கள் மற்றும் அதிகாரிகள் வாங்கும் பிற பொருள்கள் (பால் மற்றும் காய்கறிகள் போன்ற தினசரி தேவைகளைத் தவிர) வாரத்திற்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சிறையின் பிரதான வாயிலின் சிசிடிவி கேமராக்களின் முன்பும்,  உளவுத்துறை மற்றும் கண்காணிப்புப் பிரிவின் முன்னிலையிலும் சிறைக்குள் விநியோகிக்கப்பட வேண்டும். சிறைக்குள் எந்தத் தனியார் வாகனங்களையும் அனுமதிக்கக்கூடாது'’என்று குறிப்பிட்டிருந்தார். 

இப்படி ஒரு சுற்றறிக்கையை டி.ஜி.பி. ஏன் அனுப்பினார்?  

சிறைக்குள் வரும் அனைத்துப் பொருள் களும் வெவ்வேறு தினங்களில்,  வெவ்வேறு நேரங்களில் வருவதால், அதனைக் கண்காணிக்க இயலாத சூழல் உள்ளது.  இந்த விஷயத்தில் அதிகப் பணிச்சுமை இருப்பதால்,  மிக எளிதாக பொருள்கள் வந்ததுபோல், சிறைத்துறையினர் போலியாகக் கணக்கு எழுதி கோடிக்கணக்கில் மோசடி செய்துவிடுகிறார்கள்.  அதனால்தான்,  இனி ஒவ்வொரு வாரத்திலும்  ஒரே ஒருநாளில் மட்டுமே பொருள்கள் பெறப்படவேண்டும் என உத்தரவிட்டு,  அந்த ஒருநாள் முழுக்க அனைத் தையும் அனைவரும் கண்காணிக்க ஏதுவாக,  ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பியதிலிருந்தே,  வெவ்வேறு நாள்களில் பொருள்கள் வந்ததுபோல் போலியாகக் கணக்கு காண்பித்து, சிறை அதிகாரிகள் கொள்ளையடித்ததை அப்பட்ட மாகத் தெரிந்துகொள்ளலாம்.   

பொதுவாக  தமிழக அரசுத் துறைகளில் கொள்முதலில் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். கொள்முதல் எந்த அளவிற்கு   வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கிறதோ,  அந்த அளவிற்கு அதிகாரிகள் காட்டில் பணமழை கொட்டும்.  சிறைத்துறையின் தலைமை அலுவல கத்தில் கணினி சார்ந்த மற்றும் இதர பொருள் களை கொள்முதல் செய்யும்போது வெளிப் படைத்தன்மை என்பதே இல்லாமல்,  சம்பந்தப் பட்ட சிறைகளுக்கு அதனால் பயன்பாடு இருக் கிறதோ,  இல்லையோ,  சிறைத்துறையை நவீன மயமாக்குகிறோம் என்ற பெயரில், புதிது புதிதாகக் கொள்முதல் செய்து,  சிறைத்துறைத் தலைமை அலுவலகம் எப்போதும் செழிப்புடன் கொழித்துக் கொண்டிருக்கிறது.  

சிறைத்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், சிறைத்துறையில் எந்தெந்தப் பொருள் களுக்கு யார் யார் கான்ட்ராக்டர்கள்? அந்த கான்ட்ராக்டர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்? அவர்கள் இடைத்தரகர்களா? அல்லது உற்பத்தியாளர்களா? இடைத்தரகர் என்றால் எங்கிருந்து பொருள்கள் வாங்கப்படு கின்றன?  என்னென்ன பொருள்களை,  எவ்வளவு விலைக்கு இவர்கள் சிறைத்துறைக்கு வழங்கு கிறார்கள்? என்பது போன்ற விபரங்கள் இடம் பெறுவதில்லை. அனைத்தும் மர்மமாகவே நடக்கிறது.   

jail1

எந்தெந்த மத்திய சிறைகளுக்கு, என்னென்ன மதிப்பீட்டில் யார் யாருக்கெல்லாம் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?  யாரெல்லாம் இந்த டெண்டர்களில் கலந்து கொண்டனர்?  கலந்து கொண்டவர்கள் என்னென்ன விலைகளைத் தெரிவித்தனர்? எவ்வாறெல்லாம் பரிசீலனை செய்யப்பட்டது? இறுதியாக ஒருவரை எப்படி தேர்ந்தெடுத்தனர்?  என்பதுபோன்ற கேள்வி களுக்கு பதில் இருக்காது. ஏனென்றால், இந்த நட வடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை என்பதே இல்லை.  அந்தச் சிறைகளுக்குப் பயன்படுகிறதா? எனச் சிந்திக்காமல்  அந்தப் பொருள்களை வழங்கிவிட்டு,  அதற்காக சிறைத்துறையின் தலைமை அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு மத்திய சிறைக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுகிறது.  வருடாந்திர பராமரிப்புச் செலவிலும்  (AMC) வெளிப்படைத் தன்மை என்பதே இல்லாமல்,  ஊழல் மலிந்துகிடக்கிறது. 

உதாரணத்துக்கு, ஜாமர் கருவி பொருத்தி யதில் பல கோடிகள் வீணாக்கப்படுவதைச் சொல்லலாம். சிறைக்குள் செல்போன்கள் எப்படி வருகின்றன? 

காய்கறிகள், உணவுப் பொருள்களுக்குள் மறைத்து வைத்தும், வெளியிலிருந்து சிறைக்குள் வீசியும் செல்போன்கள் பெறப்படுகின்றன. அவற்றை சிறைக் கழிப்பறைகள், அறைகளின் மேற்கூரைகள், மரங்களுக்கு அடியில் மறைத்து வைத்துப் பேசுகின்றனர். செல்போன்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி, மின்விளக்கு ஆகியவற்றின் மின் இணைப்புகளில் சார்ஜ் செய்து கொள்வார்கள். எனவே, சிறைக்குள் இருந்தபடியே கைதிகள் செல்போனில் பேசி ஸ்கெட்ச் போட்டு,  வெளியே பல குற்றங்கள் அரங்கேற்றப்படுவதைத் தடுப்பதற்கு ஜாமர் கருவிகளைப் பொருத்துவதென சிறைத்துறை முடிவு செய்தது.

அரசாணை எண்: 1042, 28-11-2013ன்படி  9 மத்திய சிறைகளிலுள்ள 15 உயர் பாதுகாப்பு தொகுதிகளில் ரூ.5.40 கோடி செலவில் செல்போன் ஜாமர்களை நிறுவ ஆணையிடப் பட்டது. இந்த ஜாமர் கருவிகளை எந்த நிறுவனத்திடமிருந்து வாங்கலாம் என இரண்டு வருடங்களாக யோசித்துவிட்டு,  அரசாணை எண்: 622, 24-08-2015ல் EICL, ஹைதராபாத் என்ற நிறுவனத்துக்கு,  ஜாமர்கள் வழங்கும்படி  சிறைத்துறைத் தலைமை அலுவலகத்திலிருந்து 2016-ல் கடிதம் (IGP Lr.No.19224/MW3/2013) அனுப்பினர்.  அந்த ஜாமர்களை 2017, 2018-ல் வாங்கி, 9 மத்திய சிறைகளிலுள்ள 12 உயர் தொகுப்பு தொகுதிகளில் நிறுவினர்.  

2013-ல் தமிழக அரசு ரூ.5.40 கோடியில் செல்போன் ஜாமர் கருவிகளை வாங்கிக்கொள்ள அனுமதி அளித்தும், 4 வருடங்களுக்கும் மேலாக காலம் தாழ்த்திவிட்டு,  2017, 2018-ல் இதை வாங்கியதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. டெக்னாலஜி 4ஜி-க்கு  மாறிய பிறகு  3ஜி  டெக்னாலஜி ஜாமர் கருவிகளான குப்பைகளை வாங்கியதால் தமிழக அரசுக்கு மொத்தமாக ரூ.5.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.   மேலும், இந்த ஜாமர் கருவிகளால் 2ஜி மற்றும் 3ஜி சிக்னல்களை மட்டுமே தடுக்க முடியுமாம். 4ஜி சிக்னல்களை எல்லாம்  தடுக்காது. 5ஜி-யைத் தாண்டி 6ஜி-யை நோக்கி டெக்னாலஜி உலகம் நகர்ந்துவரும் நிலையில்,  ரூ.500-க்கே விரலடக்க செல்போன்கள் கிடைக்கின்றன.  அதனை மிக எளிதாக ஆசனவாயில் மறைத்துவைத்து சிறைக்குள் கடத்திவந்து,  சுலபமாக சிறைவாசிகள் பயன்படுத்துகின்றனர். அதனால், உயர்அடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் உள்ள சிறைவாசிகள் ஸ்மார்ட்போன்கள் மூலம் 4ஜி, 5ஜி சிம்கார்டைப் பயன்படுத்தி தாராளமாகப் பேசமுடிகிறது. இச்செயல், நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது.  

சிறைகளில் 30 மீட்டர் உயரத்தில் ஜாமர் வைக்கவேண்டும். அதையும் இவர்கள் பின்பற்றுவதில்லை.  இந்த செல்போன் ஜாமர்களை பெரும்பாலான சிறைகளில் ஆன்’ செய்து வைப்பதில்லை. 

ஆன்’செய்து வைத்திருந்தாலும் மின்கட்டணம் வீணாகும் தானே?  இந்நிலையில் புழல், பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி ஆகிய மத்திய சிறைகளிலும், புழல், வேலூர், திருச்சி, கோவை மற்றும் மதுரையில் உள்ள 5 பெண்கள் தனிச் சிறைகளிலும் கூடுதலாக 12  ஜாமர் கருவிகள் ரூ.10.10 கோடி செலவில் அமைக்கும் முடிவானது மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட A1 தாதா நாகேந்திரன் சிறைக்குள் இருந்தபடியே செல்போன் மூலம் வெளியி-ருந்த ஆதரவாளர் களைத் திரட்டி, சதித்திட்டம் தீட்டி கொலை செய்ததாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுதான் முதல் தடவையா என்றால், நிச்சயமாக இல்லை. 

மூன்று சிறைவாசிகள் தாக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட இன்னொரு வழக்கில் (WP No. 1440/2025)) "சிறைச்சாலையில் ஜாமர் இல்லையா?'’என்று உயர் நீதிமன்றம் குட்டு வைத்ததும்கூட நடந்துள்ளது.  

(ஊழல் தொடர்ந்து கசியும்...)

 

nkn190725
இதையும் படியுங்கள்
Subscribe