ஞ்சை மாநகராட்சியில் கட்சி, கவுன்சிலர்கள் உள்பட யாரையும் மதிப்பதில்லை. எந்த வசதிகளும் செய்துகொடுக்கவில்லை. மேயர் சன்.ராமநாதன் மட்டும் பணத்தில் மிதக்கிறார், தன் மனைவி, மகன் என குடும்பத்தினர் பெயரில் சொத்துகள் குவித் திருக்கிறார் என்று தி.மு.க உள்ளிட்ட கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி கட்சித் தலைமை வரை புகாரனுப்பியும் நடவடிக்கை இல்லை. அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறைக்கு புகார்கள் தயார் செய்துகொண்டிருப்பதாக கடந்த ஆக. 2025, 13- 15 நக்கீரன் இதழில் "மேயருக்கு எதிராக போர்க்கொடி! தஞ்சை பரபரப்பு!'’என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

Advertisment

இந்த நிலையில்தான் கட்சித் தலைமை மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் மூலம் அழைத்துப் பேசி, “"பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைங்க. சட்ட மன்றத் தேர்தலுக்கான பணி கள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் வழக்கமாக நமக்கு சாதகமாகவுள்ள டெல்டா மாவட்டத்தில் இதுபோன்ற பிரச்சனை களை நமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பயன் படுத்துவார்கள். அனைத்து கவுன்சிலர் களையும் அழைத்துப் பேசி தீர்வுகாணுங்கள். தலைமைக்கு உடனே தகவல் தெரிவியுங்கள்''’என்று உத்தர விட்டுள்ளது.

தி.மு.க தலைமையின் உத்தரவையடுத்து மேயர் சன்.ராமநாதன் உள்பட தி.மு.க கவுன்சிலர்கள் 36 பேருக்கும் மாவட் டச் செயலாளர் தரப்பிலிருந்து அழைப்புக்கொடுக்கப்பட்டது. மா.செ அழைப்பை ஏற்று பெரும்பான்மையான கவுன்சிலர்கள் தஞ்சை அறிவாலயத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு மா.செ. சந்திரசேகர், தஞ்சை எம்.எல்.ஏ. நீல மேகம், மேயர் சன்.ராம நாதன் ஆகியோர் இருக்க, அனைவரும் வந்தபிறகு பேச்சைத் தொடங்கிய மா.செ., “"உங்கள் பிரச்சினைகள் என்ன என்பதை கேட்டு தீர்க்கச் சொல்லி தலைமை உத்தரவிட்டிருக்கு. நீங்க எல்லாம் என்ன சொல்றீங்க. உங்கள் கோரிக்கை என்ன?''’என்று கேட்க, “"மேயர் எங்களை மதிப்பதில்லை. அ.தி.மு.க நகராட்சித் தலைவர் இருக்கும்வரை ஒவ்வொரு வார்டு வேலைக்கும், அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தலா 2 சதவீதம் கொடுப்பாங்க. அதில் விருப்பமுள்ளவர்கள் வாங்கிக்கிடுவாங்க. விருப்பமில்லாதவர்கள் எங்க வார்டு வேலை தரமாக இருந்தால் சரி என்று சொல்லி வேலையை தரமா பார்த்துக்கிடுவாங்க. இப்ப மொத்தமா 16 சதவீதம் வாங்கிட்டு யாருக்கும் எதுவும் கொடுப்பதில்லை. நாங்களும் தேர்தலுக்கு செலவு செய்திருக்கிறோம். மறுபடியும் வரும் தேர்தலை சந்திக்கவேண்டாமா?''’என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

tanjore1

Advertisment

இதையெல் லாம் கேட்ட மேயர், “"2 சதவீதம் எல்லாம் கொடுக்க முடியாது'’என்று சொல்ல... “"அப்பறம் என்ன செய்யப் போறீங்க?''’ என்று மா.செ. கேட்க, "தலா ரூ.3 லட்சம் கொடுக்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறாராம். "அதெல்லாம் வேண்டாம். இதுவரை நடந்த பணி களுக்கு 2 சதவீதம் என்று கணக்கு பார்த்தால் மொத்தம் ரூ.25 லட்சம் வரை வரும். தலா ரூ.10 லட்சம் கொடுங்கள்'' என்று கவுன்சிலர்கள் இறுதி யாக நிற்க, மேயரோ, "அவ்வளவு பணம் என்னிடம் இல்லை... தலா ரூ.5 லட்சம் கொடுக்கிறேன்'' என்று சொல்ல பிரச்சினை ஓரளவு தீர்வுக்கு வந்தது. பாதிப் பேருக்கு சொன்னபடி தலா ரூ.5 லட்சம் கொடுத்தவர் மீதிப் பேருக்குக் கொடுக்கவில்லை.

இதைக் கேள்விப்பட்ட கூட்டணியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் "எங்களுக்கு எதுவுமில்லையா?'' என்று முணுமுணுக்க, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்களோ, "எங்கள் கட்சி பதவியில இருந்தப்ப கரெக்ட்டா கமிசன் வாங்கிய சன்.ராம நாதன், இப்ப எங்களுக்கும் செய்ய வேண்டியதைச் செய்யணும், இல்லன்னா பிரச்சினை செய்வோம்'' என்று ஒன்றுசேர்ந்து வருகின்றனராம்.

தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் நம்மிடம், “"ஓரளவு தீர்வு கிடைச்சிருக்கு... ஆனால் எல்லாருக்கும் செட்டில்மெண்ட் ஆகல''’என்றனர்.

Advertisment

tanjore2

“மேயர் பதவிக்கு வரும்வரை அனைவரையும் அனுசரித்து வந்தவர் பதவியேற்ற பிறகு மா.செ. சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், எம்.பி. முரசொலி ஆகியோருக்கு எதி ராக செயல்படத் தொடங்கினார். ஒருகட்டத்தில் மா.செ.வுக்கு எதிராக கட்சிக்காரர்களிடம் வெளிப் படையாக பேசத்தொடங்கிட்டார். மா.செ., தலை மையிடம், சீனியர் அமைச்சர்களிடம் நட்பிலுள்ள சாதாரண ஆட்களிடம்கூட பயந்து பயந்து நடக்கிறார் என்று பேசியுள்ளார். அதேபோல கோவி.செழியனுக்கு அமைச்சர் பதவிகொடுத்ததும். அவரைப் பற்றி ஒரு நண்பரிடம் ஜாதிரீதியாகப் பேசி ஏன் இவருக்கெல்லாம் அமைச்சர் பதவி என்ற ரீதியில் பேசிய ஆடியோக் களை சில கட்சி நிர்வாகிகள் பத்திரமாக வைத்துள்ளனர். இருந்தும் இப்ப மேயருக் காக இந்த மா.செ.தான் பேசவேண்டியுள்ளது''’என்றனர்.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவந்த மா.செ துரை.சந்திர சேகரன் கூறும்போது, "தஞ்சை மாநகராட்சி கவுன் சிலர்கள் பிரச்சினை பற்றி என் கவனத்திற்கு வந்ததும் மேயர், கவுன்சிலர்களை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினோம். மேயரிடம் நீங்களும் 15 வருசம் கவுன்சிலராக இருந்துவந்தவர். உங்களுக்கும் வார்டு பிரச் சினைகள் பற்றி நன்றாகத் தெரியும். மேயரானதும் மற்ற கவுன்சிலர்களின் கோரிக்கைகளைக் கேட்டு நடந்துக்கணும். அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டு செயல்படனும் என்று சொன்னேன். அவரும் இதுவரை நடந்ததுக்கு வருத்தம் தெரிவித்து இனிமேல் அப்படி நடக்காது''’என்று கூறியதாகத் தெரிவித்தார். 

தஞ்சை மாநகராட்சியில் ஆளுங்கட்சி கவுன் சிலர்கள் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு எட்டப் பட்டுள்ளது.