ர்மஸ்தலா கோவிலின் முன்னாள் துப்புர வுத் தொழிலாளி பீமா அளித்த தகவலின்படி கடந்த ஜூலை 29ஆம் தேதி பீமா காட்டிய 13 இடங்கள் மார்க் செய்யப்பட்டன. பீமா போலீ சார் பாதுகாப்புடன் வந்து சாட்சியமளித்துச் சென்றுள்ளார். பீமா சுட்டிக்காட்டிய இடங் களில் ஒன்று போலீஸ் பாதுகாப்புடன் தோண்டப்பட்டது. அதில் லட்சுமி என்ற பெண்ணின் ஏ.டி.எம். கார்டும், மற்றொரு ஆணின் பான் கார்டும் கிடைத்திருக்கிறது. மொத்தத்தில் 3 பேர் அந்த இடத்தில் புதைக் கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.டி.எம். கார்டை வைத்து மேற்கொண்ட விசா ரணையில் லட்சுமி காணாமல்போனதாக சில வருடங்களுக்கு முன்பு தர்மஸ்தலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் நான்கு இடங்களில் முதல்கட்டமாக தோண்டப்பட்ட நிலையில், பள்ளிச் சீருடையுடன் புதைக்கப் பட்ட மாணவியின் சடலமும் மீட்கப்பட்டது. அதே குழியில் அம்மாணவியின் புத்தகப் பையும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

DARMASHTHALA1

Advertisment

கடந்த இதழில், தர்மஸ்தலாவில் எப்போது முதல் பெண்கள் மாயமாகி வருகின்றனர், தர்ம ஸ்தலாவில் யாரெல்லாம் காணாமல்போயினர் என்பது குறித்து விரிவாக விளக்கியிருந்தோம். 

சௌஜன்யா கொலைவழக்கில் நீதிமன்றம், சந்தோஷ்ராவ் குற்றவாளி இல்லை என்று தெரிவித்து அவரை விடுவித்தது. இதை, சௌஜன்யாவின் தாயாரே ஏற்றுக்கொள்கிறார். மேலும் சௌஜன்யாவின் தாயார் குஸ்மாவதி, போராட்டக் குழு மகேஷ் ஷெட்டி நமக்கு அளித்த தகவலில் சௌஜன்யாவின் வழக்கில் அவருக்கு ஆதரவாக சாட்சியளிக்க முன்வந்த மைசூரைச் சேர்ந்த பெண் வாரிஜா உள்பட 6 பேர் மர்மமான முறையில் கொலைசெய்யப் பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர். 

இந்த வழக்கில் பல தடயங்கள் அறிவியல்பூர்வமாக அழிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்பிக்கவேண்டும் என்ற நோக்கிலே இதெல்லாம் செய்யப்பட்டுள்ளது. சௌஜன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளதாகவும், விந்து பரிசோதனை நடக்கக்கூடாது என்பதற்காக அவளது அந்தரங்க உறுப்பில் ஆறு இன்ச் அளவிற்கு மண்ணை உள்ளே தள்ளியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. சௌஜன்யா காணாமல் போன தருணத்தில் ஊர் பொதுமக்கள் தேடும்பொழுது அந்த இடத்தில் எந்த ஒரு டெண்ட்டும் இல்லை, மறுநாள் பார்க்கும்பொழுது டெண்ட் இருந்தது என்றும் அவர்கள் தங்கள் சந்தேகங்களை அடுக்கினர். 

Advertisment

தர்மஸ்தலாவில் ஆதித்யா என்ற ஹோட்டல் கட்டுவதற்கு அங்கு வசித்துவந்த யானைப் பாகன் நாராயணன் என்பவரிடம் சிலர் இடம்கேட்டிருக்கின்றனர். கொடுக்கமறுத்த காரணத்தால் அவர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அந்தப் பாகனின் தங்கை யமுனாவும், கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கிலும் காவல்துறை பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் நிகழ்த்தவில்லை. 

இங்குள்ள ஷெரின், கோதாவரி, கங்கோத்ரி போன்ற தங்கும் விடுதிகளில் பல பெண்கள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவை குறித்த வழக்குகள் ஏனோதானோ என்ற அளவிலேயே தர்மஸ்தலா போலீசாரால் கையாளப்படுகின்றன.

சிறப்பு விசாரணைக் குழு முழுப் பாது காப்புடன் சாட்சியான பீமாவை சம்பந்தப்பட்ட நேத்ராவதி ஆற்றங்கரைக்கு அழைத்துவந்தனர். மொத்தமுள்ள 13 இடங்களில் கொலைசெய்யப் பட்ட பிணங்களை அவர் புதைத்ததாகவும் 4 இடங்களை தற்போது அடையாளம் காண் பித்துள்ளார். அந்த இடங்களில் தோண்டப் பட்டு, பல பிணங்களின் எலும்புக்கூடுகள், உடைகள், உடைமைகள் வெளிப்பட்டுள்ளன.

தர்மஸ்தலாவில் அநீதியாகக் கொன்று புதைக்கப்பட்ட பெண்களுக்கு சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நீதி சேர்க்குமா? இல்லை ஆரம்ப பரபரப்புடன் அதிகாரத்தில் இருப்பவர்களின் நெருக்குதலால் தர்மஸ்தலாவில் கொன்று புதைக்கப் பட்டவர்களுடன் சேர்த்து உண்மையும் புதைக்கப்பட்டுவிடுமா என்பதுதான் கர்நாடக மக்களின் கேள்வி.

_______________________________________________

கிணறுதோண்ட வெளிப்பட்ட பூதம்!

தர்மஸ்தலா கோவில் விவகாரத்தை விசாரிக்க டி.ஜி.பி. அந்தஸ்துள்ள பிரணவ் மொகந்தி தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவில், ஏ.டி.ஜி.பி.க்கள் என்.எம்.அனுசேத், சவுமியலதா, ஜிதேந்திரகுமார் தயாமா ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தக் குழு மஞ்சுநாதர் கோயில் இடத்தில் புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. முதற்குழி யில் மூன்றுபேர் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங் கள் கிடைத்துள்ளன. கூடவே, ஒரு பெண்ணின் சிவப்பு நிற ஜாக்கெட்டும், மற்றொரு பெண்ணின் ஆதார் கார்டும், ஒரு ஆணின் பான் கார்டும் கிடைத்தனவாம். இதற்கிடையில் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் பிரணவ் மொகந்தியை, ஒன்றிய அரசுப் பணிக்கு பா.ஜ.க. அரசு அழைத்திருப்பது தற்செயலானதா... அல்லது இந்த விசாரணைக் குழுவை முடக்கும் செயலா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

-ஆகாஷ்