சிறைக்குள் ஏன் சிகரெட் விற்காமல் பீடி விற்கப்படுகிறது? கம்பெனிகளால் தயாரிக்கப்படுவது சிகரெட். பீடியோ குடிசைத் தொழில். சேதமான (damage) இரண்டாம் தர பீடிகளையே சிறைக்குள் வழங்குவதால் அதிகாரிகளுக்கு கொள்ளை லாபம். சிகரெட்டில் இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என்றெல்லாம் எதுவும் இல்லை. கம்பெனித் தயாரிப்பினை அப்படியே வழங்குவதால் அதிகாரிகளால் சிகரெட்டில் உள்குத்து லாபம் பார்க்க முடியாது. அதனாலேயே பீடி விற்கப்படுகிறது. சட்டப்படி வழங்க வேண்டிய உணவுப் பொருள்களையே ஒழுங்காகத் தராதவர்கள், தடை செய்யப்பட்ட பொருளான பீடியையா தரமாகக் கொடுத்துவிடப் போகிறார்கள்? சிறைக்குள் பீடி இல்லையென்றால் கஞ்சாவுக்கு வேலையே இல்லை. இவர்கள் கொடுக்கும் பீடியில்தான் புகையிலையை எடுத்துவிட்டு, சிறைக்குள் மறைத்து எடுத்துவரப்படும் கஞ்சாவைத் திணித்து கைதிகள் புகைக்கின்றனர்.
சிறைகளில் எவ்வாறு பீடி விற்கப்படுகிறது?
சிறைக்குள் பீடி தடை செய்யப்பட்ட பொருள் என்பதால், மறைத்து எடுத்துவந்து விற்பதாக யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். நாம் ஏற்கனவே சொன்னதுபோல், சிறை கேன்டீன்களில் சிறைவாசிகளின் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படும் சோப்பு, சீப்பு, பிரஷ் போன்றவற்றை விற்கும்போது, பிஸ்கட் பாக்கெட், பேரீச்சம்பழப் பாக்கெட் என்ற பெயரில் ஒரு கட்டு பீடியின் விலைக்குச் சமமாக என்னென்ன பொருள்கள் உள்ளனவோ, அந்தப் பொருள்களைச் சிறைவாசிகள் வாங்கியதுபோல் கணக்கு காண்பிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பீடிக்கட்டுகள் வழங்கப்படும். இவை வார இறுதி நாள்களில் மிக அதிக விலைக்கு விற்கப்படும். உதாரணமாக, இடைப்பட்ட நாள்களில் ஒரு பீடிக்கட்டின் விலை, ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலைக்குச் சமமானது என்றால், வார இறுதி நாளில் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் பாக்கெட் விலைக்கு விற்கப்படும். இவையனைத்துமே சில்லறை விற்பனைக்குத்தான். அதற்கு மேலும் சிறையிலுள்ள பெரிய ரவுடிகள், தனக்கும் தனது ஆதரவாளர் களுக்கும் சேர்த்து மொத்தமாகப் பீடி வாங்கும்போது, அதற்கான பெரும் தொகை சிறைக்கு வெளியே வாங்கப்பட்டு, சிறைக்குள் பீடியாக கைமாற் றப்படும்.
பொதுவாக, சிறையி லுள்ள பெரிய ரவுடிகள் மற்றும் வி.ஐ.பி.கள், மற்ற சிறைவாசி களுக்குப் பீடிகளை வாங்கிக் கொடுத்து, தங்களுக்கான கூலிப்படையைப் பெருமளவில் வளர்த்துக்கொள்கிறார்கள். வெளியில் குற்றத்தைச் செய்து விட்டுச் சிறைக்குள் எப்போது சென்றாலும் ‘அண்ணன் பார்த்துக்கொள்வார்’ என்கிற தைரியத்தில்தான், சிறையிலி ருந்து பெயிலில் விடுதலையாகும் சிறைவாசிகளைக் கொண்டு பல குற்றச் சம்பவங்கள் வெளியில் அரங்கேறுகின்றன.
இப்போதுகூட டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சிறைக்குள் அனைத்துப் பொருள்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அனுப்பிய சுற்றறிக்கையின்படி சிறைக்குள் பொருள்கள் வரும்போது, பீடிகள் மூட்டைகளில் வந்து இறங்கும். மேலும் தமிழ்நாட்டி லுள்ள அனைத்து மத்திய சிறைகளின் பிரதான வாயிலில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை இப்போது பரிசோதித்தால்கூட, பீடிகள் மூட்டை மூட்டையாக வந்து இறங்கும் காட்சியின் பதிவினைப் பார்க்கமுடியும். கொடுமை யைப் பாருங்களேன், தடை செய்யப்பட்ட ஒரு பொருளை சிறை நிர்வாகமே விற்கிறது. தற்போது புழல் சிறையில் ஒரு கட்டு பீடியின் விலை ரூ.500.
மனநலம் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் 115 கிராம் கோழி இறைச்சிகளை, பீடியைக் கொடுத்து மற்ற சிறைவாசிகள் வாங்கிக்கொள்வார்கள். பீடி கிடைக்காத நேரங்களில், ஒரு பீடிக்காக செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்வதற்கும் சிறைவாசிகள் தயாராக இருப்பார்கள். அந்த அளவுக்கு பீடியானது கைதிகளின் சிறை வாழ்க்கையில் இரண்டறக் கலந்துள்ளது.
உதாரணமாக, இந்திய அரசின் உள்துறை கடித எண் : V#17013/23/2012 #PR dated 09.10.2012 Utßm DGP Of Prison proceeding No.47503/MW/2013,Dated 10.01.2013ன்படி பகல் நேரத்தில் 20 சிறைவாசிக்கு ஒரு கழிப்பறை, இரவில் 10 சிறைவாசிக்கு ஒரு கழிப்பறை எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மத்திய சிறையிலும் 200க்கும் மேற்பட்ட கழிவறைகள் உள்ளன. இதனைச் சுத்தம் செய்து பராமரிப்பதற்கு மூன்று துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கு நிரந்தரமாகச் சென்றுவிடுவார். மீதமுள்ள இருவரும் ‘ஒருநாள் வேலை; ஒருநாள் ஓய்வு’ என்ற சுழற்சி முறையில் பணியாற்றுவதால், எப்போதும் ஒருவர் மட்டுமே சிறையில் இருப்பார். அந்த ஒரு நபரால் எப்படி சிறையிலுள்ள அனைத்துக் கழிவறைகளையும், கழிவுநீர் அடைப்புகளையும் சுத்தம் செய்து பராமரிக்க முடியும்? இது மனித சக்திக்கு அப்பாற்பட்ட பணியல்லவா?
பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு கிளாஸ் லீடரை நியமிப்பதுபோல், சிறையில் ஒவ்வொரு பிளாக்கிலும் சுமார் 50 முதல் 100 பேருக்கு கணக்குப்பிள்ளை என ஒருவர் இருப்பார். இந்தக் கணக்குப்பிள்ளையிடம் மொத்த சிறைவாசிகளும் கூட்டாகப் பணம் கொடுத்து நிறைய பீடிக் கட்டுகளை வாங்கி வைத்துக்கொள்வர். வளாகங்களைப் பெருக்குவது, பிளாக்குகளைத் தண்ணீர் ஊற்றி கழுவுவது, வழக்கமாகப் புழங்கும் கழிவறைகளைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளுக்கு பீடியே சம்பளமாக வழங்கப்படும். இந்த பீடிகளைத்தான் அந்தச் சிறைவாசி, பண்டமாற்று முறையில் மற்ற சிறைவாசிகளிடம் வழங்கி, தனக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வார்.
சிறையில் பெரிய ரௌடிகள் கூலிப்படையினரை உருவாக்குவதற்கும், கஞ்சா சிறைக்குள் வருவதற்கும், அதிகாரிகள் பணமழையில் நனைவதற்கும், முதன்மைக் காரணமாக பீடியே இருக்கிறது. பீடியை நிறுத்தினால் மட்டுமே சிறையில் கஞ்சா ராஜ்ஜியத்துக்கு முடிவுகட்ட முடியும். கைதிகள் கஞ்சா அடிமைகள் ஆவதைத் தடுக்கவும் முடியும். சிறை உயரதிகாரிகள், கைதிக்கு பீடி கிடைக்கும்படி செய்துவிட்டு, கைதியிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யும்போது, சம்பந்தப்பட்ட காவலரை சஸ்பெண்ட், டிஸ்மிஸ், ட்ரான்ஸ்பர் செய்வதெல்லாம் அவர்களுக்குக் கைவந்த கலை. காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், முதலில் சிறைக்குள் பீடியை நிறுத்து வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா? பீடியும் கிடைக்கச் செய்வோம்; காவ லர்கள் மீது நடவடிக்கையும் எடுப்போம்..’ எனப் பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுபோல் உயரதிகாரிகள் முரணாக நடந்துகொள்கின்றனர். பிரச்சனையை உண்டுபண்ணு வது அதிகாரிகள். பழி மட்டும் காவலர்கள் மீது. இதெல்லாம் என்ன கொடுமை சார்?
பீடி விற்பனையின் மைல் கல்லாக ஒரு கொலைச் சம்பவமும், கொலையாளிகள் இருவர் அளித்த வாக்கு மூலமும் வரும் இதழில்...…
(ஊழல் தொடர்ந்து கசியும்…)
___________________________________
சிறையிலும் ராஜ வாழ்க்கை!
22 ஆண்டுகளுக்கு முன் சென்னை சென்ட்ரல் ஜெயிலில் கைதியாக இருந்த அந்த முக்கிய பிரமுகர். பல்வேறு காலகட்டங்களில் ஜெயில் சூப்பிரண்ட் செந்தூர்பாண்டி, ஜெயிலர் இளவரசன், கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பணன் ஆகியோர் பணியில் இருந்தபோது சிறைக்குள் ஊழல் பெருக்கெடுத்து ஓடியதை நம்மிடம் பகிர்ந்துகொண் டார்.
ஜெயிலுக்குள்ள ஈஊகக (தனியறை) டைப், அப்புறம் 100 பேர் தங்குற அளவுக்கு பெரிய பிளாக்னு ரெண்டுவிதமான கட்டட அமைப்பு உண்டு. புதுசா வர்ற கைதிகளை பிளாக்ல கழிப்பறைக்கு பக்கத்துல படுக்க வச்சிருவாங்க. ராத்திரி முழுக்க 100 பேரும் பயன்படுத்துறது னால, தரை முழுக்க ஈரமா, துர்நாற்றமா இருக்கும். அதுனால தூக்கமே வராம ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாயிருவாங்க. சிறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால்தான் கழிப்பறைல இருந்து கொஞ்சம் தள்ளிப் படுக்குறதுக்கும், எஆசக்கு நேரா படுக்குறதுக்கும், தனி ஈஊககல் படுக்குறதுக்கும் இடம் கிடைக்கும்.
சின்னதா ஒரு பாக்கெட் பிரியாணி. அது வேணும்னா சிறைக்கு உள்ள ரூ.3000, வெளிய சிறை அதிகாரி வீட்டுக்கே போயி ரூ.7000 கொடுக்கணும். சூப்பிரண்டுக்கு ரூ.1 லட்சத்தை தூக்கி எறிஞ்சிட்டால் ராஜா மாதிரி, பிரியாணி, சிகரெட், கஞ்சா, எடுபிடி வேலை செய்றதுக்கு ஆளுங்கன்னு பொம்பளைய தவிர ஜெயிலுக்குள்ள எல்லாமே கிடைக்கும். ஒருசில நேரத்துல ஆம்பளைய பொம்பளையா பயன்படுத்திக்கிற மாதிரி கிடைக்கும். எல்லாமே இங்க பணம் தான்.
2015ல் கூட புழல் ஜெயில்ல முஸ்லீம் கைதிகள் ஜெயிலர் இளவரசனுக்கு பணம் கொடுக்காததுனால, சிறையில் அவங்க அனுபவிக்கும் சலுகைகளை ரத்து செய்தார். அந்தக் கோபத்துல இளவரசன் மேல கடுமையா தாக்குதல் நடந்துச்சு. இவர்கள் வாராவாரம் பணம் வாங்கிக் கொண்டு இவ்வாறு செயல்படக்கூடாது என்று சிறை உஏட சுற்றறிக்கையே (எண்: 34743/ஈந4/2012, நாள்: 28.09.2012) அனுப்பியுள்ளார்.