"நானும் ஜெயில்ல இருந்திருக்கேன்..'’என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் சிறைவாசி நமக்கு அனுப்பிய கடிதத்தில் "நக்கீரன்ல வர்ற ஜெயில் கட்டுரைகளைத் தொடர்ந்து படிச்சிட்டு வர்றேன். டிபார்ட்மெண்ட் ஆபீசர்ஸ் பண்ணிட்டு வர்ற மோசடிகளப் பத்தி நெறய வந்துட்டே இருக்கு. ஊழலை உரிஉரின்னு உரிக்கிறீங்க. அப்படியே கைதிகள் படற அவஸ்தைய கொஞ்சம் எழுதலாம்ல.
ஜெயில்ல இருந்து ரிலீஸாகி மூணு வருஷமாச்சு. இப்ப எனக்கு 57 வயசு. ஆனா.. ஜெயில்ல உண்டான பாதிப்புல இருந்து என்னால மீள முடியல. இப்ப ஆஸ்துமா பிரச்சனை கொலையா கொல்லுது. எப்பவுமே எனக்கு பீடி, சிகரெட் பிடிக்கிற பழக்கம் கிடையாது. ஜெயில்லயும் வைராக்கியமா அப்படியே இருந்துட்டேன். ஜெயில்ல 100-க்கு 90 பேர் பீடி குடிக்கிறாங்க. அந்த 90 பேரும் பீடி குடிச்சாத்தான் ஜெயில் டென்ஷன்ல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு நம்புறவங்க. எந்த நேரமும் ஊதித் தள்ளிட்டே இருப்பாங்க. இதுல கொடுமை என்னன்னா.. என்னை மாதிரி பீடி குடிக்காதவங்க.. பீடி குடிக்கிறவங்க விடற புகைய சுவாசிச்சிட்டே ஜெயில்ல நொந்துபோய் வாழறதுதான். அதான்.. லங்ஸ் கேன்சர்.. ஆஸ்துமால கொண்டுபோய் விட்ருது. அதுவும் ஜெயில்ல இந்த பீடில அடிக்கிற கொள்ளை இருக்கே.. நல்லா விசாரிச்சு எழுதுங்க.. தலைசுத்திப் போயிரும்'’என்று தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
சிறைகளுக்குள் பீடி: புகையிலை முதன்முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டு, பிறகு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பா காலனித்துவத்தால் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்களிடம் கடுமையாக வேலை வாங்குவதற்கு புகையிலை முக்கியப் பொருளாக பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திலிருந்த இந்தியாவிலும் புகையிலை அறிமுகப
"நானும் ஜெயில்ல இருந்திருக்கேன்..'’என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் சிறைவாசி நமக்கு அனுப்பிய கடிதத்தில் "நக்கீரன்ல வர்ற ஜெயில் கட்டுரைகளைத் தொடர்ந்து படிச்சிட்டு வர்றேன். டிபார்ட்மெண்ட் ஆபீசர்ஸ் பண்ணிட்டு வர்ற மோசடிகளப் பத்தி நெறய வந்துட்டே இருக்கு. ஊழலை உரிஉரின்னு உரிக்கிறீங்க. அப்படியே கைதிகள் படற அவஸ்தைய கொஞ்சம் எழுதலாம்ல.
ஜெயில்ல இருந்து ரிலீஸாகி மூணு வருஷமாச்சு. இப்ப எனக்கு 57 வயசு. ஆனா.. ஜெயில்ல உண்டான பாதிப்புல இருந்து என்னால மீள முடியல. இப்ப ஆஸ்துமா பிரச்சனை கொலையா கொல்லுது. எப்பவுமே எனக்கு பீடி, சிகரெட் பிடிக்கிற பழக்கம் கிடையாது. ஜெயில்லயும் வைராக்கியமா அப்படியே இருந்துட்டேன். ஜெயில்ல 100-க்கு 90 பேர் பீடி குடிக்கிறாங்க. அந்த 90 பேரும் பீடி குடிச்சாத்தான் ஜெயில் டென்ஷன்ல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு நம்புறவங்க. எந்த நேரமும் ஊதித் தள்ளிட்டே இருப்பாங்க. இதுல கொடுமை என்னன்னா.. என்னை மாதிரி பீடி குடிக்காதவங்க.. பீடி குடிக்கிறவங்க விடற புகைய சுவாசிச்சிட்டே ஜெயில்ல நொந்துபோய் வாழறதுதான். அதான்.. லங்ஸ் கேன்சர்.. ஆஸ்துமால கொண்டுபோய் விட்ருது. அதுவும் ஜெயில்ல இந்த பீடில அடிக்கிற கொள்ளை இருக்கே.. நல்லா விசாரிச்சு எழுதுங்க.. தலைசுத்திப் போயிரும்'’என்று தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
சிறைகளுக்குள் பீடி: புகையிலை முதன்முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டு, பிறகு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பா காலனித்துவத்தால் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்களிடம் கடுமையாக வேலை வாங்குவதற்கு புகையிலை முக்கியப் பொருளாக பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திலிருந்த இந்தியாவிலும் புகையிலை அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழகச் சிறைகளிலும் கைதிகளை அடிமையாக நடத்துவதற்காக சிறைக்குள் நுழைந்தது.
நிறுத்தப்பட்ட பீடி: தமிழ்நாடு சிறை விதிகள், 1983ன் விதி 227 படி, கைதிகள் வழக்கமாகத் தங்கும் இடங்களுக்குள் புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். மரண தண்டனை கைதி என்றால் ஒரு நாளைக்கு ஆறு பீடிகள் வழங்கப்படும் (விதி 909(க்ஷ)). விதி 457ன்படி, சிறையின் தொழிற்கூடங்களில் பணிபுரியும் கைதிகளுக்கு, குறிப்பிட்ட வேலைகளைச் செய்வதற்கு ஊதியமாக பீடிகள் வழங்கப்பட்டன. புகைபிடிப்பவர்களுக்கும் புகைபிடிக்காதவர் களுக்கும் இடையிலான பாகுபாட்டைத் தவிர்ப்பதற்காக, தமிழக அரசு G.O.Ms.No.1492, நாள்: 13.06.1986ன்படி, ஊதியமாக பீடி வழங்குவது நிறுத்தப்பட்டு, ஒருநாள் வேலைக்கான ஊதியமாக கைதிகளுக்கு மூன்று பைசாக்கள் வழங்கப்பட்டன. விதி 481 (2)ன்படி, கைதிகள் தங்களது சொந்தப் பயன்பாட்டிற்காக, சொந்தப் பணத்திலிருந்து புகையிலை, சிகரெட் போன்றவற்றை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அப்போதைய சிறைத்துறைத் தலைவர் 02.05.2000 மற்றும் 03.02.2002 தேதியிட்ட தனது கடிதத்தில், சிறை ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், சிறைக்குள் புகைபிடிப்பதை அனுமதிப்பது 'தீ விபத்து', 'தீயைத் தவறாகப் பயன்படுத்துதல்' போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்று தமிழக அரசுக்குத் தெரிவித்தார். மேலும் தனது கடிதத்தில், ‘தற்போது சிறைகளில் உயர்கல்வி, தொழிற்கல்வி, கணினி கல்வி, யோகா, தியானம் போன்ற பல நலத்திட்டங்கள் மூலம் கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துவதை மேற்கோள் காட்டி, இது அவர்களின் மனக் கவலைகளிலிருந்து விடுபடவும், புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடவும் உதவும் என்று கூறி, கைதிகள் மற்றும் ஊழியர்கள் எந்த வடிவத்தி லும் புகையிலையை பயன்படுத்துவதைத் தடை செய்யவேண்டும்.’ என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்,
இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து, அதை ஏற்றுக்கொண்டு, அரசாணை எண். 683, உள் (சிறை-V) துறை, தேதி 05.08.2002ன்படி சிறைக்குள் எந்த வடிவத்திலும் புகையிலையைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் உத்தரவை நிறைவேற்றியது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறை விதிகள், 1983ல் 228(10), 298(b), 357, 457, 801 (1) (iii), 909(b) ஆகிய விதிகள் திருத்தப்பட்டன .
இந்த அரசாணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலூர் மத்திய சிறையிலிருந்த சண்முகம் என்ற சிறைவாசி 18.03.2003 அன்று சிறைக்குள் பீடியை அனுமதிக்க வேண்டி வழக்கு(W.P. No.8370 of 2003) தொடுத்தார். மேலும் அச்சிறைவாசி தரப்பில், வழக்கமாகப் புகைபிடிப்பவர்களை இது எதிர்மறையாகப் பாதிக்கிறது என்றும் சிறை வாசிகளின் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்ட நியாயமற்ற கட்டுப்பாடு என்றும், நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆனால், சென்னை உயர்நீதி மன்றம் இந்தத் தடையை உறுதி செய்தது. இது கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களின் நலனுக்கான நியாயமான நடவடிக்கை எனக் கூறியது.
அதன்பின், பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்வதற்காக, சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், வணிகத்தை ஒழுங்குபடுத்துதல், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம்) சட்டம், 2003, மே 2003ல் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு 01.04.2004 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், மேற்கண்ட சட்டங்கள் சிறைச் சாலைகளை உள்ளடக்கியதாகத் தெரியவில்லை. ஏனெனில், சிறை பொது இடத்தின் வரையறைக்குள் வராது.
2006ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், எந்தவொரு உணவுப் பொருளிலும் புகையிலையைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
இந்திய அரசு 2007-08ஆம் ஆண்டில் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (NTCP) அறிமுகப்படுத்தியது மற்றும் தமிழ்நாட்டில் சபஈட, 2007 முதல் பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் மாநில புகையிலைக் கட்டுப்பாட்டுப் பிரிவால் செயல்படுத்தப்படுகிறது. இவற்றின் முக்கிய நோக்கம், புகையிலை பயன்பாட்டிலிருந்து மக்களை வெளியேற்ற உதவுதல் ஆகும்.
இந்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து வந்த இந்திய சிறைகளுக்கான சுற்றறிக்கை எண்: F.N.17013/13/2009-PR, நாள்: 23.03.2009ல் புகைபிடித்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தர வாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை அல்ல, அதே சமயம் நச்சுப் பொருள்களிலிருந்து விடுபட்டு புதிய காற்றை சுவாசிப்பது அரசிய லமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும். சிறை வளாகத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல்/நுகர்வு செய்தல் என்பது பொது சுகாதார அபாய மாகும், எனவே, சிறை அதிகாரிகள் பொருத்தமான சட்டத்தை இயற்றுவதன் மூலமோ அல்லது சிறை கையேடுகளில் பொருத்தமான திருத்தங்களைச் செய்வதன் மூலமோ சிறை வளாகங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது விரும்பத்தக்கது. இது சிறைக் கைதிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சிறைகளில் ஊழலையும் நீக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு பீடி தடை செய்யப்பட்ட நிலையில், தமிழக சிறைகளில் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால், மதுரை மத்திய சிறையில் பீடிக்கு கடுமையான ‘டிமாண்ட்’ இருந்தது. இதனைப் பயன்படுத்தி அப்போது இருந்த அதிகாரிகள் 5 ரூபாய்க்கு விற்ற பீடியை 100 ரூபாய்க்கு சிறையில் விற்று வந்தனர். அந்த சமயத்தில், ஃ.த.நாகராஜ் என்ற காவலர் 5 கட்டு பீடியை சிறைக்குள் எடுத்து வந்து, அதிகாரிகள் விற்கும் அதே விலைக்கு கைதிகளிடம் பீடியை விற்று தனது குடும்பக் கஷ்டத்தைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினார். அவர் நினைத்தது நடக்கவில்லை. மாறாக, அவர் பீடி கொண்டு வந்ததைப் பிடித்து, தடை செய்யப்பட்ட பொருளை சிறைக்குள்ளே எடுத்து வருகிறார் எனக் கூறி சஸ்பெண்ட் செய்தனர். சிறிது காலத்திற்குப் பின் பணியமர்த்தப் பட்டு முதுகுளத்தூர் கிளைச் சிறைக்கு அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அதனால், விரக்தியின் எல்லைக்கே சென்ற ஃ.த. நாகராஜ், மனைவியை வேலைக்கும், மகனைப் பள்ளிக்கும் அனுப்பிவிட்டு, வீட்டிலிருந்த முக்கியமான பொருள்கள் அனைத்தையும் பாதுகாப்பாக எடுத்துவைத்துவிட்டு, மதுரை சிறைக்காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் சிலிண்டர் எரிவாயுவை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
தங்களுக்குக் கீழ் பணிபுரியும் சிறைக்காவலர் களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய சிறைத்துறை அதிகாரிகளே 20 மடங்கு விலைவைத்து பீடியை விற்பனை செய்ததால்தான், தானும் அதுபோல் பீடியில் லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஃ.த.நாகராஜுக்கு ஏற்பட்டது. இதற்கு மூலகாரணமாக இருந்தது அதிகாரிகளே. தங்களுக்குப் போட்டியாக சிறைக்காவலர் ஃ.த.நாகராஜ் எப்படி பிளாக்கில் பீடி விற்கலாம் என்ற சுயநலச் சிந்தனையினால் அவர் மீது சஸ்பெண்ட், ட்ரான்ஸ்பர் நடவடிக்கை எடுத்து, உயிரைப் பறித்தது கொடுமை அல்லவா?