(சென்ற இதழ் தொடர்ச்சி…)


ட்ஜெட்:  தமிழகத்திலுள்ள சிறைகளுக்குத் தேவையான நிதியை தலைமைச் செயலகத் திலிருந்து பெற்று, அதனைச் சிறைவாசிகளுக்கான உணவுக் கொள்முதல்,  தொழிற்கூடம் மற்றும் சிறையின் நிர்வாகத் தேவைகளுக்காக, பல்வேறு கணக்குத் தலைப்புகளில் பிரித்து,  ஒவ்வொரு ஆண் டின் தொடக்கத்திலும், பட் ஜெட் ஒதுக்கீட்டை பட்ஜெட் பிரிவு மூலம் சிறை உஏட விநியோகிப்பார் (சிறை விதி: 08).  தமிழ்நாடு நிதி விதி களின்படி,  சிறை உஏட அனைத்து நிதி அதிகாரங் களையும் கொண்டிருப்பார் மற்றும் பயன்படுத்துவார் (சிறை விதி : 10). சிறை உஏட ஆனவர், தனது கட்டுப் பாட்டிலுள்ள சிறைகளின் சிக்கனமான நிர்வாகத்திற்குத் தேவையான அனைத்து ஒப் பந்தங்களையும் அனுமதிக்க  அதிகாரமுள்ளவர் (சிறை விதி : 11). 

சுழல் நிதி: பட்ஜெட் பணம் அல்லது அவசரத்திற் குப் பணம் கிடைக்கவில்லை என்றால், கச்சாப் பொருள் களை வாங்கமுடியாமல் சிறைத் தொழிற்சாலையின்  உற்பத்தி  நின்றுவிடக் கூடாது என்பதற்காக,  அரசாணை எண்:228, நாள்: 05.07.2018-ல் ‘கச்சாப்பொருள்கள் வங்கி’ எனும் திட்டத்தின் அடிப்படையில்,  ஒவ்வொரு மத்திய சிறையிலும் வங்கிக் கணக்கு ஒன்று தொடங்கப்பட வேண்டும். ஆனால்,  இந்த வங்கிக் கணக்கு மதுரை மத்திய சிறையில் மட்டுமே  அரசரடி கிளை (SBI Account no: 38007742693) சிறைக் கண்கணிப்பாள ரின் பெயரில் தொடங்கப்பட்டது.  வேறு எந்த மத்திய சிறையிலும் இவ்வாறு வங்கிக்கணக்கு ஆரம்பிக்கவில்லை.  சிறைத்துறை உஏட அலுவலக வங்கிக் கணக்கில் எப்பொழுதும் ரூ.5 கோடி இருப்பி லிருக்கும். இதிலிருந்து பணம் வழங்க,  நிதித்துறை துணைச் செயலர் மற்றும் சிறை உஏட ஆகியோர் காசோலையில் கையெழுத்திட்டு, சம்பந்தப்பட்ட மத்திய சிறைக்கு வழங்குவர்.  இந்தச் சுழல் நிதியின் பின்னணியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு,  ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு உள்ளது. மேலும்,  மதுரை சிறை ஊழல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு போடப் பட்டு, அவ்வழக்கு 22.07.25 அன்று விசாரணைக்கு வந்தது. அது ரத்து செய்யப்பட்டதால் மேல் முறையீடு செய்யவுள்ளனர்.  

Advertisment

jail1

பட்ஜெட் மற்றும் சுழல் நிதி மூலம் பெறப்படும் பணம் முறைப்படி செலவு செய்யப் படுகிறதா? அரசுக்கு இழப்பு ஏற்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து கண்டறிய,  தமிழ்நாடு பட்ஜெட் கையேட்டில் {விதிகள் பகுதி VIII} உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி,  அனைத்துச் செலவு மசோதாக்கள் மற்றும் பில்களை சிறைத்துறை உஏட தணிக்கை செய்வார் (சிறை விதி: 09).  தமிழ்நாடு சிறைக்குள் நடத்தப்படும் அனைத்துத் தணிக்கைகளும் இவரது பெயரிலேயே நடத்தப்படும்.     

சிறைத்துறையின் டி.ஜி.பி. அலுவலகத்தில் தணிக்கைக்கு எனத் தனியாக நய பிரிவு இயங்கி வருகிறது.  உள்நிதி தணிக்கை (Local fund audit)  துறையிலிருந்து  டெபுடேஷனில் உதவி இயக்குநர் அந்தஸ்துள்ளவர், இதற்குத் தலைமை தாங்குவார். இந்தப் பிரிவில் பணிபுரியும் அலுவலகக் கண்காணிப்பாளர், தணிக்கை உதவியாளர்கள், சரக்கு இருப்புச் சோதனை மேற்கொள்ளப்பட வுள்ள மத்திய சிறைக்கு  திடீரென அதிகாலையி லேயே  வந்துவிடுவர்.  சிறையில் எங்கெல்லாம்  பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதோ,  அந்த இடங்களை எல்லாம் சீல் வைத்து, அங்குள்ள பொருட்களின்  அளவு, எடை, எண்ணிக்கை ஆகியவை சம்பந்தப்பட்ட பதிவேடுகளின்படி, (TN நிதி விதி : 143, 143ஆ, 143இ, 144)  சரியாக உள்ளதா என்பதைச் சோதனை செய்து,  அதனைப்  பதிவு செய்வார்கள்.  வந்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு வரையுள்ள ஸ்டாக் தொடர்புடைய அனைத்து ஆவணப் பதிவுகளையும் சோதனை  செய்வார்கள்.

Advertisment

தலைமையிடத்து சிறை துணைத் தலைவர் (தற்போது ஐ.ஜி.): அரசாணை எண்..537, Dated:11.04.1997. IGP's Memo No.3564/AB2/95: 28.05.1997-ன்படி  ஒவ்வொரு மாதமும் சிறை உற்பத்திப் பணிகளில் தண்டனை பெற்ற அனைத்துக் கைதிகளின் முழு வேலைவாய்ப்பு மற்றும் முழு ஆற்றல் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்தல் (விதி: 18(2)) சிறைத்துறையின் கீழ் உள்ள சிறைகளின்  நிர்வாக அறிக்கைகள், அனைத்துப் புள்ளிவிவர அறிக்கைகள், சிறை அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் பருவ அறிக்கைகள் ஆகியவற்றைச் சேகரித்தல், மதிப்பாய்வு செய்தல் மற்றும் அதனைச் சிறை உஏடக்கு ஒழுங்குபடுத்தி அனுப்புதல் (விதி : 18(10)) இவரது பணியாகும். 

டி.ஐ.ஜி. அலுவலகமும் தணிக்கையும்: தமிழகச் சிறைகளில் சென்னை, வேலூர், கோயம் புத்தூர், திருச்சி, மதுரை என ஐந்து இடங்களில் டி.ஐ.ஜி. அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த இடங்களில் ஒவ்வொரு டி.ஐ.ஜி.க்கும் தலா இரண்டு மத்திய சிறைகளும்,  அதன் கீழ் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளும் இவரது கட்டுப்பாட்டிற்குள் வரும். டி.ஐ.ஜி. அலுவலகத்திற் கென்று ஒதுக்கப்பட்டவர்கள் ஒரு உதவியாளர் மற்றும் ஒரு  தட்டச்சர்  மட்டுமே.

jail2

அரசாணை எண் :1739, dated::20.11.1991 மற்றும் சிறை விதி 18 (2)(ண்)-ன்படி ரேஞ்ச் DIG தனது அதிகார வரம்பிற்குட்பட்ட சிறைகளை ஆய்வுசெய்யவும், திடீர் சோதனை மேற்கொள்வதற்காகவும் Tourist officer ஆக இருப்பார். தனது அதிகார வரம்பிற்குட்பட்ட சிறைகளில்,  ஒவ்வொரு ஆண்டும் இருப்பு  சரிபார்ப்பு,  திடீர் இருப்பு சரிபார்ப்பைச் செய்வார் {விதி 18 (2) (vii) (viii)}.

அரசாணை எண் :157, dated :18.02.2003, IGPs memo No.39139/CS2/2000, dated:12.03.2003 மற்றும் சிறை விதி 18 (2) (v) (a,b,c)-ன்படி ரேஞ்ச் டி.ஐ.ஜி. தனது அதிகார வரம்பிற்குட்பட்ட மத்திய சிறைகளை அரையாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும், காலாண்டுக்கு ஒருமுறை வருகை தரவேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை தனது தலைமையகத்தில் அமைந்துள்ள மத்திய சிறைக்குச் செல்லவேண்டும். 

ரேஞ்ச் டி.ஐ.ஜி. அலுவலகங்களில் அலுவலகக் கண்காணிப்பாளர்,  இரண்டு உதவியாளர் பணியிடங்கள் தணிக்கைக்காக நிரந்தரமாகத் தோற்றுவிக்கப்பட்டு, நிதியாண்டிற்கு ஏற்றவாறு (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை)  தணிக்கை செய்யவே இக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ரேஞ்ச் டி.ஐ.ஜி. கீழுள்ள அனைத்து மத்திய சிறை, மாவட்ட சிறை மற்றும் கிளைச் சிறைகளில் வருடந்தோறும்  100 சதவீதம் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகளைத் தணிக்கை மறுப்பாக எழுதி டி.ஜி.பி.க்கு வருடம்தோறும் அனுப்புவார்கள்.

இது மட்டுமல்லாமல்,  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை  டி.ஐ.ஜி. அவர்களால் ஒவ்வொரு மத்திய சிறையிலும் செய்யப்படும் அரையாண்டு ஆய்வானது,  திருவிழாபோல் நடைபெறும்.  கவாத்துப் பயிற்சி,  பணியாளர்களின் ஆடை அணிவகுப்பு பயிற்சி என  மத்திய சிறையிலுள்ள அனைத்து ஆவணங்களையும் டி.ஐ.ஜி. சோதனை செய்வார். இருப்புச் சோதனைத் தணிக்கை மற்றும் உள் தணிக்கை ஆகிய இரண்டினையும் நிறைவு செய்து,  தணிக்கைக் குழுவினருடன் சேர்ந்து,  டி.ஐ.ஜி.தான் இறுதியாகக் கையெழுத்திடுவார்.

உதாரணமாக 01.04.2020-31.03.2021  நிதி ஆண்டிற்கான தணிக்கையை எப்போது செய்வார்கள் என்றால்,  ஒன்றரை வருடம் கழித்து 20.10.2022 -30.10.2022ல்தான் தணிக்கை செய்வார்கள். தமிழ்நாட்டிலுள்ள எந்த டி.ஐ.ஜி.யும்  6 மாதங்களுக்கு ஒருமுறை முழுமையான ஆய்வுகள் செய்ததில்லை.

தமிழ்நாடு நிதி{Financial code, vol#I, ©¬Ü:14 (iii) (a)} விதிகளின்படி ஒவ்வொரு அரசு ஊழியரும், அரசுப் பணத்திலிருந்து எவ்வாறு செலவு செய்ய வேண்டு மென்றால், ஒரு  சாதாரண விவேகமுள்ள நபர்,  தனது சொந்தப் பணத்தைச் செலவிடுவதில் எவ்வளவு ஈடுபாடு காட்டுவாரோ, அதே விழிப்புணர்வையும் அக்கறையையும் தனது கட்டுப்பாட்டி லுள்ள பொதுப் பணத்திலிருந்து  செலவு மேற்கொள்ளும்போது காட்டவேண்டும். 

jail3

இதன்படி பார்க்கையில், உணவுக் கொள்முதல் ஊழல், சிறை கேன்டீன் ஊழல், சிறைத் தொழிற்சாலை ஊழல்,  இன்னும் வெளியே தெரியாமல் உள்ள எத்தனையோ ஊழல்கள் பதுங்கிக்கொண்டிருக்கின்றன.  தமிழகச் சிறைகளில் ஊழல் நடந்தால்,  அதற்கு மேலே கூறிய அனைவரும்தான் முழுப் பொறுப்பு. இவர்களுக்குத் தெரியாமல் அந்த ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறுதான் சிறைத்துறையின் அலுவலக இயந்திரம் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

தமிழகச் சிறைகளில் தணிக்கைக் குழு என்ற கூட்டம்,  வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்யாமல்,  தணிக்கை செய்வதற் குச் செல்லும் இடங்களில் கிடைக்கும் லஞ்சப் பணத்திற்காக, ஊழல்சார்ந்த தணிக்கைத் தடைகளை எழுப்பாமல் விட்டுவிடுகின்றனர்.  கடமையிலிருந்து தவறிய இந்தத் தறுதலைத்தனத்தால், சிறைத்துறையில் ஊழல் அரக்கன் சகிக்க முடியாத அளவிற்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். சிறைவாசிகளுக்காக அரசு தரும் பொருள்களைத் திருடுபவர் களுடன் கைகோர்த்துக்கொண்டு, அவர்களின் கூட்டாளிகளாகவே தணிக் கைத் துறையினர் மாறிவிட்டனர்.

(ஊழல் தொடர்ந்து கசியும்…)