"பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எல்லாம் தனித்தனியாக சென்டர் ஒதுக்கப்பட்டிருக்கு. ஆனால், காவல்துறையின் வாரிசுகளுக்கு எல்லாம் ஒரே சென்டர் ஒதுக்கி இருக்காங்க. 26ந் தேதி நடைபெறவுள்ள எஸ்.ஐ. தேர்வில் மோசடி நடக்க வாய்ப்பிருக்கின்றது என்பது குறித்து ஆக.26-29 வெளியான நக்கீரன் இதழில், "எஸ்.ஐ தேர்வில் மோசடி.. சர்ச்சையில் தேர்வு வாரியம்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அதை உறுதி செய்யும் வகையில் திருவண்ணாமலை மற்றும் ஓசூரில் 2 சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதில் போலீஸ் எஸ்.ஐ. உள்பட நான்குபேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் 1:
26ஆம் தேதி நடைபெற்ற எஸ்.ஐ. தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் போட்டித் தேர்வர்களுக்காக 6 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் பெண்களுக்கென தனியார் பெண்கள் கல்லூரியில் ஒரு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணியான வேட்டவலம் லாவண்யாவும் எஸ்.ஐ. தேர்வில் கலந்த
"பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எல்லாம் தனித்தனியாக சென்டர் ஒதுக்கப்பட்டிருக்கு. ஆனால், காவல்துறையின் வாரிசுகளுக்கு எல்லாம் ஒரே சென்டர் ஒதுக்கி இருக்காங்க. 26ந் தேதி நடைபெறவுள்ள எஸ்.ஐ. தேர்வில் மோசடி நடக்க வாய்ப்பிருக்கின்றது என்பது குறித்து ஆக.26-29 வெளியான நக்கீரன் இதழில், "எஸ்.ஐ தேர்வில் மோசடி.. சர்ச்சையில் தேர்வு வாரியம்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அதை உறுதி செய்யும் வகையில் திருவண்ணாமலை மற்றும் ஓசூரில் 2 சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதில் போலீஸ் எஸ்.ஐ. உள்பட நான்குபேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் 1:
26ஆம் தேதி நடைபெற்ற எஸ்.ஐ. தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் போட்டித் தேர்வர்களுக்காக 6 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் பெண்களுக்கென தனியார் பெண்கள் கல்லூரியில் ஒரு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணியான வேட்டவலம் லாவண்யாவும் எஸ்.ஐ. தேர்வில் கலந்துகொண்டிருக்கின்றார். தேர்வு தொடங்கிய நிலை யில், இயற்கை உபாதைக்காக கழிவறை செல்வதாக அங்கிருந்த கண்காணிப்பாள ரிடம் கூறியிருக்கின்றார் லாவண்யா. தேர்வு விதி முறைப்படி தேர்வின் போது யாருக்கும் கழிவறைக்கு செல்ல அனுமதி கிடையாது. எனினும் நிறைமாத கர்ப்பிணி என்பதால் லாவண்யாவை மட்டும் அனுமதித்திருக்கின்றனர். கழிவறைக்கு சென்றவர் 20 நிமிடங்கள் கழித்து லேட்டாகவே வந்திருக்கின்றார். வந்தவுடன் கையிலிருந்த குறித்து வைக்கப்பட்ட விடைகளுடன் தேர்வு எழுதிய நிலையில் கண்காணிப்பாளரிடம் சிக்கியிருக்கின்றார் அவர்.
"கழிவறைக்குச் சென்று 20 நிமிடங்கள் கழித்து வந்ததும் சந்தேகமே. இருப்பினும் தேர்விற்கு அனுமதித்தோம். கையில் வைத் திருந்த விடை பேப்பர்தான் அவரைக் காட்டிக் கொடுத்தது. பிடிப்பட்ட லாவண்யாவின் கணவரான சுமன், சென்னை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்க்கும் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார், அவருடைய நண்பர் திருவண்ணாமலை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ. சிவக்குமார். நண்பரின் மனைவிக்காக முன்னரே அந்த தேர்வு மையத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கழிவறையில் மொபைல் போனை ஒளித்து வைத்துச் சென்றிருக் கின்றார். தேர்வு நாளின்போது கழிவறைக்கு செல்வதாகக் கூறி குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்ட அந்த மொபைல் போனை எடுத்து கூகுள் மூலம் விடைகள் தேடி வந்திருக்கின்றார். அதேவேளையில், கணவரின் மற்றொரு நண்பரான கொட்டகுளம் டாக்டர் பிரவீன்குமாரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு கேள்விக்கான விடைகளை கேட்டதும்... அந்த விடையை கொண்டு, தேர்வு எழுத முயன்றதும் விசாரணையில் தெரியவந் தது. தவறு கண்டுபிடிக்கப்பட்டதுமே, தேர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா, லாவண்யாவை தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியேற்றினார்'' என்றனர் தேர்வு மைய அதிகாரிகள்.
தொடர்ந்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், முறைகேடாக தேர்வு எழுத முயன்ற லாவண்யா, இவருக்கு உதவியாக செயல்பட்ட அவரது கணவர் சுமன், போலீஸ் எஸ்.ஐ. சிவக்குமார் மற்றும் டாக்டர் பிரவீன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் 2:
எஸ்.ஐ. தேர்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,591 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,559 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வர்கள் அனைவருக்கும் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் காலை, 10 மணி முதல், 12:30 மணிவரை முதன்மை தேர்வினையும், மதியம் 3:30 முதல், 5:10 மணி வரை தமிழ் தகுதித் தேர்வினையும் எழுதினர். தேர்வு தொடங்கிய நிலையில் தேர்வு மையத் தின் அறையில் தேர்வர் ஒருவர் ஏதே பேசிக்கோண்டே தேர்வு எழுதுவதாகவும், இதனால் தங்களுக்கு இடையூறாக உள்ளதாகவும் அருகே இருந்தவர்கள் தேர்வுக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் சந்தேகத் துக்குரிய நபரை அழைத்து விசாரணை செய்தபோது, ஊத்தங்கரை அருகே அச்சூர் பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் முகக்கவசம் அணிந்துகொண்டு காதில் ஹெட்போன் ஒன்றை பொருத்தி இருந்ததைக் கண்டறிந்தனர். பின்னர் அந்த கருவியில் அடுத்த முனையில் பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதன்பின் நவீனை தேர்வு அதிகாரிகள் ஹட்கோ காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஹட்கோ போலீஸாரோ, "எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராய் தேர்வு எழுதும்போது வயர்லஸ் வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டர் மூலம் எந்திரன் ரஜினி உதவுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதுபோல்தான் இங்கும். டெக்னாலாஜியை அந்தளவிற்கு பயன்படுத்தியுள்ளனர். தேர்வு அறையில் நவீன் வினாத்தாளை பார்த்து கேள்வி கேட்க, எதிர்முனையில் கேள்விகளுக்கு யூடியூப்பைப் பார்த்தும், கூகுளைப் பார்த்தும் பதில் கூறியிருக்கின்றார் பாசமலரான தங்கை இந்திரலேகா. நவீன் மற்றும் அவரது தங்கை இருவரிடமும் தீவிர விசாரணை செய்து இருவரையும் கைது செய்துள்ளோம்'' என்கின்றனர் அவர்கள்.
போலீசுக்கே கண்காணிக்க போலீஸ் போட வைக்கிறாங்களே!