Advertisment

FOLLOW-UP! செங்கோல் அரசியல்! திராவிட மாடலின் வெற்றி!

ss

ந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்றபின்னர், டெல்லியிலுள்ள பூரி ஜெகன்னாதர் கோயிலுக்கு சென்றபோது, அவரை கடவுளின் அருகே தரிசனம் செய்ய அனுமதிக்காமல், வெளியே ஒரு தடுப்பு போட்டு நிறுத்தியது கோவில் நிர்வாகம். அந்த சம்பவம், இந்து மதத்திலிருக்கும் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வுக்கெதிரான போராட்டத் தைத்தான் பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டிலுள்ள திராவிட சித்தாந்தம் நடத்திவருகிறது.

Advertisment

dd

இந்த ஆண்டு நட

ந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்றபின்னர், டெல்லியிலுள்ள பூரி ஜெகன்னாதர் கோயிலுக்கு சென்றபோது, அவரை கடவுளின் அருகே தரிசனம் செய்ய அனுமதிக்காமல், வெளியே ஒரு தடுப்பு போட்டு நிறுத்தியது கோவில் நிர்வாகம். அந்த சம்பவம், இந்து மதத்திலிருக்கும் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வுக்கெதிரான போராட்டத் தைத்தான் பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டிலுள்ள திராவிட சித்தாந்தம் நடத்திவருகிறது.

Advertisment

dd

இந்த ஆண்டு நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவில், மீனாட்சி அம்மனுக்கு நடக்கும் பட்டாபிஷேகத்தில் கொடுக்கப்படும் செங்கோல், அக்கோவிலின் அறங்காவலர் குழுவின் தலைவரான மறைந்த பி.டி.ஆரின் மனைவி ருக்மணி அம்மாளுக்கு வழங்கப்பட்டது. அரசு ஆணையாளரும், கோவில் தலைமை குருக்களும் செங்கோலை எடுத்து ருக்மணி அம்மாளிடம் கொடுக்க, மீனாட்சி அரசாண்ட செங்கோ லுடன் கம்பீரமாக வந்தபோது, மக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர். அருகில் அவரது மகனும் அமைச்சருமான பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் உடன் வந்தார்.

ddஇந்த நிகழ்வு, சமூக நீதிக்கு குரலெழுப்பும் திராவிட சித்தாந்தத்தின் அடுத்த பாய்ச்சலாகப் பார்க்கப் படுகிறது. (செங்கோலை வழங்குவதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டதையும், அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மிகவும் காட்ட மாக மனுதாரருக்கு எதிராகக் கேள்வி எழுப்பி கண்டித்ததையும் குறித்து கடந்த நக்கீரன் இதழில் விரிவாகப் பதிவு செய் திருந்தோம்.)

Advertisment

மதுரை பெண் மேயர் இந்திராணி பொன்வசந்த் திடம் இந்நிகழ்ச்சி குறித்து கேட்டபோது, "இதுதான் திராவிட மாடல். பெரியார், அண்ணா, கலைஞர் முன்னெடுத்ததை தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார். மீனாட்சி ஆளும் பட்டினத்தில் மீனாட்சிக்கு மரியாதை வழங்கப்பட்டிருக்கு. அய்யா பி.டி.ஆர். குடும்பத்தினர், மீனாட்சி அம்மன் கோயி லுக்கு எவ்வளவோ திருப்பணிகளை செய் திருக்கிறார்கள். ருக்மணி அம்மாள் மீனாட்சியின் செங்கோலுடன் வந்தபோது, அந்த மீனாட்சியே வந்தது போன்று அங்கிருந்த பெண்கள் மிகுந்த உற்சாகத்தோடு கும்பிட்டனர்.

இங்கு, கடவுளின் முன் எல்லோரும் சமம் என்ற சமூக நீதி நிலைநாட்டப்பட்டிருக்கு. இது இந்திய அளவில் எதிரொலிக்கும். இந்துத்துவா கொள்கையில் ஜனாதிபதியாகவே இருந்தாலும் அவர் விதவையாக இருப்பதாலும், பழங்குடி இனத்தவராக இருப்பதாலும் கோயிலுக்குள் இடமில்லை. ஆனால் திராவிட மண்ணில் கடவுள் முன் ஆண், பெண் பேதமில்லை. சாதிய ஏற்றத்தாழ்வு இல்லை. பிறப்பால் பேதமில்லை, அனைவரும் சமம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. இந்த திராவிட மாடல், இனிவரும் காலத்தில் இந்தியாவையே வழி நடத்துவது நிச்சயம்'' என்று முடித்துக்கொண்டார்.

nkn270424
இதையும் படியுங்கள்
Subscribe