FOLLOW-UP ராங்-கால் டார்ச்சர் புகார்! குறட்டைவிடும் காவல்துறை!

ss

டந்த 2024 ஜூன் 01-04 நக்கீரன் இதழில், "ராங்-கால் டார்ச்சர்! கண்டு கொள்ளாத காவல்துறை!'’ என்னும் தலைப்பில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணனுக்கு வந்த ராங்-கால் டார்ச்சர் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். மனக்குமுறலுடன் மீண்டும் நம்மைச் சந்தித்தார் கண்ணன்.

"10 மாதங்களாகப் புகாரைக் கிடப்பில் போடும் அளவுக்கு என்ன நடந்தது?''’எனக் கேட்டோம் அவரிடம்.

ss

"எனக்குப் பணம் தரவேண்டிய ச

டந்த 2024 ஜூன் 01-04 நக்கீரன் இதழில், "ராங்-கால் டார்ச்சர்! கண்டு கொள்ளாத காவல்துறை!'’ என்னும் தலைப்பில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணனுக்கு வந்த ராங்-கால் டார்ச்சர் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். மனக்குமுறலுடன் மீண்டும் நம்மைச் சந்தித்தார் கண்ணன்.

"10 மாதங்களாகப் புகாரைக் கிடப்பில் போடும் அளவுக்கு என்ன நடந்தது?''’எனக் கேட்டோம் அவரிடம்.

ss

"எனக்குப் பணம் தரவேண்டிய சிலர் தொடர்ந்து ஏமாற்றினார்கள். அவர்கள் மூலம், என்னுடைய மொபைல் போனுக்கு எனக்கு யாரென்றே தெரியாத நபர்களிடமிருந்து ராங்-கால்கள் வந்தபடியே இருக்கின்றன. அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் 29-3-2024 அன்று புகார் அளித்து மனு ரசீது வாங்கினேன். மேல்நடவடிக்கை எடுக்காமல் வழக்கைக் கைவிட்டார்கள். தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத் தைத் தொடர்புகொண்டேன். உடனே, சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து என்னிடம் புதிய புகார் தரச் சொல்லி மனு ரசீது (ஈநத எண் 12/2025) தந்தார்.

புதிய புகாரையும் கிடப்பில் போட்டதால் ஏ.எஸ்.பி. மதிவாணனைச் சந்தித்தேன். நான் அளித்த மேல் முறையீட்டு மனுவை அவர் வாங்கவே இல்லை. சப்- இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து வைத் தொடர்புகொண்டு, "யாரைக் கேட்டு ஈநத போட் டீர்கள்? ஈநதலில் சந்திரகலா, சரவண பெத்தி, அழகுமீனா, சுதாகர், ஜெயபாலாஜி, கீர்த்தி பெயரை ஏன் சேர்த்தீர்கள்? புகார் தாரருக்கு போன் போட்டவர்களை மட்டுமே வழக்கில் சேருங்கள், மற்றவர்கள் பெயரை நீக்கிவிடுங்கள்' என்று கோப மாகப் பேசினார். நானும் நீதிமன்றத்துக்குத் தான் போகவேண்டும்''” என்றார் வேதனை யுடன்.

அருப்புக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் மதிவாணனைத் தொடர்புகொண்டோம்... “

"எல்லா புகார்களையும் காவல்துறை சீரியஸாகத்தான் பார்க்கிறது. பெண்கள் குற்றம் செய்யமாட்டார்களா? ஈநதல் பெண்களின் பெயரை நீக்கும்படி நான் சொல்லவில்லை. இந்த வழக்கில் பாரபட்சமாகச் செயல்பட வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. சந்தேகம் இருந்தால், டவுண் காவல்நிலையத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்''’என்றார் கூலாக.

அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஆய்வாளர் ஜோதிமுத்துவிடம் பேசினோம். “"நான் இங்கு பணியில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது. பழைய புகார் கைவிடப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது''’என்றார்.

உயிருக்கு அச்சமூட்டும் விதத்தில் தொடர்ந்து தொந்தரவு செய்யும் நூற்றுக்கணக் கான ராங்-கால் மிரட்டலை காவல்துறை கண்டுகொள்ளாதது ஏனோ?

-அதிதேஜா

nkn150225
இதையும் படியுங்கள்
Subscribe