Advertisment

FOLLOW-UP தொழிலாளர் குடும்பங்களை வாழவைத்த நக்கீரன்!-டிராக்டர் நிறுவனத்தில் சுமூகத் தீர்வு!

t

டந்த டிசம்பர் 19-22 ஆம் தேதி நக்கீரனில் "கொத்தடிமையாக டிராக்டர் தொழிற்சாலை' என்ற தலைப்பில் டாஃபே டிராக்டர் தொழிற்சாலை பிரச்சனையையும், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடப்பதையும் இரண்டு பக்க செய்தியாக வெளியிட்டிருந்தோம். ஆர்.டி.ஓ. மற்றும் தொழிலாளர் நலத்துறை மூலம் தொழிற்சங்க நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். அதோடு வருங்காலத்தில் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கக்கூடாது. ம

டந்த டிசம்பர் 19-22 ஆம் தேதி நக்கீரனில் "கொத்தடிமையாக டிராக்டர் தொழிற்சாலை' என்ற தலைப்பில் டாஃபே டிராக்டர் தொழிற்சாலை பிரச்சனையையும், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடப்பதையும் இரண்டு பக்க செய்தியாக வெளியிட்டிருந்தோம். ஆர்.டி.ஓ. மற்றும் தொழிலாளர் நலத்துறை மூலம் தொழிற்சங்க நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். அதோடு வருங்காலத்தில் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கக்கூடாது. மீறி பழிவாங்கும் நடவடிக்கை எடுத்தால் தொடர் போராட்டத்தில் குதிப்போம் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரித்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்

Advertisment

tt

அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள், கடந்த 15-ஆம்தேதி பணிக்குத் திரும்பினார்கள். அப்பொழுது தற்காலிகத் தொழிலாளர்கள் 32 பேரை திடீரென தொழிற்சாலை நிர்வாகம் தடுத்து நிறுத்தி, உங்களுக்கு இப்ப வேலை கொடுக்கமுடியாது. நிர்வாக விசாரணை நடக்கிறது என்று கூறி வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் மனம் நொந்துபோன தொழிலாளர்கள், சங்க நிர்வாகி களிடம் முறையிட்டனர். சங்க நிர்வாகிகளும் பத்து நாட்கள் பார்ப்போம் அதற்குள் பணியாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்கவில்லை என்றால் போராட்டத்தில் மீண்டும் குதிப்போம் என்று முடிவு செய்திருந்தனர்.

Advertisment

tra

இந்த நிலையில் நக்கீரன் செய்தி வெளி வந்ததையடுத்து, அதன் தாக்கத்தை நன்றியுடன் பகிர்ந்தனர் தொழிலாளர்கள். சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் மாநில தலைவரும் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஆறுமுகநயினார் நம்மிடம், ""நக்கீரனுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். செய்தியைப் பார்த்தவுடன், சென்னையிலிருந்து தொடர்ந்து போன் வந்தது தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியது. உடனே என்னை அழைத்து நக்கீரனில் தனது படத்துடன் வந்த செய்தியைப் படித்து உண்மை நிலையை அறிந்திருக்கிறார் சேர்மன். பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த 32 தற்காலிகத் தொழிலாளர்களை மீண்டும் உடனே பணிக்கு வரச் சொல்லுங்கள் இனிமேல் தொழி லாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்று அக்கறையுடன் கூறியதின் பேரில் அந்த தொழி லாளர்கள் மீண்டும் பணிக்குச் சென்றுவிட்டனர். நக்கீரன் 32 தொழிலாளர்களின் குடும்பங்களை வாழவைத்திருக்கிறது'' என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த தொழிலாளர்களும் மீண்டும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்கள். நக்கீரன் செய்தியால், தொழிலாளர் ஒற்றுமையும் நிர்வாகத்தின் அக்கறையும் இணைந்து இதனை சாதித்துள்ளது. நக்கீரன் என்றும் உரிமைக்குரலாக ஒலிக்கும்.

-சக்தி

nkn231220
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe