"தேவாரம் நடத்திய காமப் பஞ்சாயத்து' பற்றி நவ.15-17 தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரை, தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது. அது தொடர்பான ஆதாரங் களை அள்ளித் தெளித்தார்கள் அந்த கட்டுரையில் சம்பந்தப்பட்டவர்கள்.
சாந்தி (பெயர் மாற்றப்பட் டுள்ளது) இவர் தமிழகத்தில் மிகப் புகழ்பெற்ற பெரிய தொழிலதிபர் குடும்பத்து மருமகள். இவருக்கு பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் இவர், கோவை கணபதி பகுதியில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்து, தன் கணவர் நாத்தனார், மாமியார் மற்றும் டிரைவர் ஆகியோர் மீது துன்புறுத்துதல் மற்றும் கோவை புதூரில் பள்ளியில் படிக்கும் மகனை கடத்துதல் மற்றும் சொத்து ஆவணங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் புகார் கொடுக்கிறார்.
ஒரே நேரத்தில் கோவையிலும் தூத்துக்குடியிலும் அதே புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
சாந்தியின் கணவரோ, “"நானும் என் மனைவியும் இணைந்துதான் கோவையில் உள்ள பள்ளியில் எங்கள் மகனை சேர்த்தோம். என் மனைவி யிடம்தான் எங்கள் மகன் இருக்கிறான். இந்நிலையில் கோவை மற்றும் தூத் துக்குடியில் என் மீது புகார் அளிக்கப் பட்டு இரண்டு மாவட்ட போலீசாரும் என்னை விசாரிக்க வேண்டுமென்று சம்மன் அனுப்புகிறார்கள். எனவே, இந்த பொய்ப் புகார்களை உயர்நீதி மன்றம் விசாரித்து, அதை ரத்து செய்ய வேண்டும்'’என வழக்குப் போட்டார் அந்தப் பெண்ணின் கணவர். இந்த வழக்கு நீதியரசர் இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுதுதான் வால்டர் தேவாரம் தலையிட்டார். கோவை யில் போலி அட்ரஸை பயன் படுத்தி வழக்குப் போட்டது, 5ஆம் தேதி போட்ட புகார் மனுவுக்கு 2 ஆம் தேதியே வழக்கு பதிவு செய்தது என டெக்னிக்க லாக சைக்கிளும், கோவை குழந்தை கிருஷ்ணனும் சிக்கிக்கொள்வார்கள் என்பதால், கணவரின் குடும்பத்தா ரிடம் பேசிய வால்டர், "அந்தப் பெண் சமரசத்திற்கு வருகிறார், நீங்கள் கேட்கும் டைவர்ஸுக்கான ஒப்புதலை நான் வாங்கித் தருகிறேன், சொத்தில் பங்கு கேட்க மாட்டாள்' என அளித்த உறுதிமொழியின்படி அந்த வழக்கு சமரச மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வழக்கில், அந்தப் பெண்ணிட மிருந்து ஏன் விவாகரத்து கேட்டார் என்பதற்கு காரணமாக, அந்தப்பெண் சைக்கிளிடம் பரிமாறிக்கொண்ட மெசேஜ்கள் மற்றும் படங்கள் ஆகிய வற்றை கணவர் தரப்பு ஆதாரமாக வழக்கில் குறிப்பிட்டி ருந்தது. "ஒட்டு மொத்தமாக அசிங்கப்பட்டு விடுவோம் என சைக் கிளும் கோவை குழந்தை கிருஷ்ணனும் வால்டர் தேவாரத்தின் காலில் விழுந்து தப்பித்திருக்கிறார்கள்' என் கிறது காவல்துறை வட்டாரங்கள்.
சைக்கிள், சென்னை நகர இணை கமிஷனராக இருந்த பொழுது தடகள வீராங்கனை தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என காவல்துறை அலுவலகத்தையே களே பரப்படுத்தினார். காவல் துறையில் உள்ள சில பெண் களையும் சைக்கிள் விட்டு வைக்கவில்லை. பெண் அதிகாரிகளுக்கு கோடி கள் மதிப்பில் வீடுகளை வாங்கிக் கொடுத்துள் ளார். மலைக்கோட்டையில் உயர் பதவி வகித்த பெண் அதிகாரிக்கு சமீபத்தில் நீலாங்கரையில் பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஒவ்வொருமுறையும் சைக்கிள், பாலியல் ரீதியான பிரச்னைகளில் சிக்கும் போதெல்லாம் தேவாரம் தலையிட்டு காப்பாற்றுவது ஏன் எனக் கேள்வி கேட்கிறார்கள் இந்தக் காமப் பஞ்சாயத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
சைக்கிளின் கதை என ஒரு தொடரே எழுதலாம் என் கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.