FOLLOW-UP அடிக்கடி அரங்கேறும் மர்ம மரணங்கள்! -பகீரூட்டும் மருத்துவக்கல்லூரி

ss

"பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி, அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்'” என இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டா லின் கறார் குரலில் எச்சரித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மாணவி சுகிர்தராணி, தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் விவகாரம் வெடித்து வெளியே வந்திருக்கிறது.

இதுகுறித்து கடந்த நக்கீரன் இதழில் "மருத்துவ மாணவி தற்கொலை! கைதாவாரா பேராசிரியர்?'’ என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம். இந்த விவகாரத்தில் பேராசிரியர் பரமசிவம் மற்றும் ஹரீஸ், பிரீத்தி ஆகியோரின் பெயர் அடிபடுவது குறித்தும் குறிப்பிட்டிருந் தோம். தற்போது இந்த விவகாரம், இந்தக் கல்லூரி தொடர்பான பல திடுக்கிடும் தகவல்களை வெளியே கொண்டுவந்தபடியே இருக்கிறது.

st

நம்மிடம் பேசிய ஏரியாவாசிகள் "கடந்த 28 ஆண்டுகளுக்கு முன், இந்த மருத்துவக் கல்லூரி இருக்கும் இடத்தில் ஒரு சின்ன கிளினிக்கைத்தான் இதன் சேர்மன் வேலாயுதன் நாயர் நடத்தி வந்தார். காலப்போக்கி

"பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி, அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்'” என இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டா லின் கறார் குரலில் எச்சரித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மாணவி சுகிர்தராணி, தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் விவகாரம் வெடித்து வெளியே வந்திருக்கிறது.

இதுகுறித்து கடந்த நக்கீரன் இதழில் "மருத்துவ மாணவி தற்கொலை! கைதாவாரா பேராசிரியர்?'’ என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம். இந்த விவகாரத்தில் பேராசிரியர் பரமசிவம் மற்றும் ஹரீஸ், பிரீத்தி ஆகியோரின் பெயர் அடிபடுவது குறித்தும் குறிப்பிட்டிருந் தோம். தற்போது இந்த விவகாரம், இந்தக் கல்லூரி தொடர்பான பல திடுக்கிடும் தகவல்களை வெளியே கொண்டுவந்தபடியே இருக்கிறது.

st

நம்மிடம் பேசிய ஏரியாவாசிகள் "கடந்த 28 ஆண்டுகளுக்கு முன், இந்த மருத்துவக் கல்லூரி இருக்கும் இடத்தில் ஒரு சின்ன கிளினிக்கைத்தான் இதன் சேர்மன் வேலாயுதன் நாயர் நடத்தி வந்தார். காலப்போக்கில் அந்த கிளினிக்தான், மருத் துவக் கல்லூரி மருத்துவமனையாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் 3 ஏக்கரில் இருந்த நிறுவனம், இப் போது 128 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்திருக்கிறது. குலசேகரம் பேருராட்சிப் பகுதியில் இருக்கும் இந்த கல்லூரிக்காக சுமார் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை அழித்து, அங்கு வசித்த மக்களைத் துரத்தி அவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு இடத்தை வாங்கி, கல்லூரியை விரிவாக்கிக் கொண்டே வருகிறார் சேர்மன். இந்த பகுதியில் குடியிருந்த பூர்வீக மக்கள் ஒருவர்கூட இப்போது அங்கே இல்லை. அதேபோல் பேரூராட்சிக்கு சொந்தமான நாககோடுகுளம், காட்டுக்குளம், ஒடலிவிளை ஆகிய மக்கள் பயன்பாட்டில் இருந்த குளங்களை எல்லாம் ஆக்கிரமித்து, அதில் வானுயுயர்ந்த கட்டிடங்களைக் கட்டிவிட்டார் கள். அங்குள்ள பல கட்டிடங்கள் மர்ம பங்களாக்களாகத்தான் இருக்கின்றன. எளிதில் யாரும் அங்கே போகமுடியாது. தற்போது அங்கியிருந்து திருவரம்பு எனும் ஊருக்கு செல்லக்கூடிய பேரூராட்சிக்குச் சொந்தமான பொது வழியையும் அந்தக் கல்லூரி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுபோய்விட்டது'' என்றார்கள் கவலையோடு.

நம்மிடம் மனம்விட்டு பேசிய கல்லூரி ஊழியர்கள் சிலர், "எங்கள் கல்லூரி சேர்மனாக வேலாயுதன் நாயர் இருந்தாலும், இங்கு இயக்குனராக இருக்கும் கேரளா, நெடுமங்காடைச் சேர்ந்த அவருடைய மனைவி டாக்டர் ரெமா நாயர்தான் எல்லாமாக இருக்கிறார். ஒரு தடவை டாக்டர் ரெமா நாயர் வரும்போது, 2ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்துவந்த மாணவர் ஒருவர், அவரை கவனிக்காமல் உட்கார்ந்தபடி செல் போனில் பேசிக்கொண்டிருந்தார். செக்யூரிட்டி மூலம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த மாணவர், அடுத்த கொஞ்ச நேரத்தில் ஹாஸ்டல் அறையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

இதேபோல் திண்டுக்கல்லைச் சேர்ந்த வேளாண்மைத்துறை ஊழியர் ஒருவரின் மகன் 3ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்துவந்த நிலையில், அவர் பீஸ் கட்டியபோதும் மீண்டும், மீண்டும் பீஸ் கேட்டு தொந்தரவு கொடுத்தனர். அம்மாணவர், சேர்மனை வழியில் நிறுத்தி முறையிட்டார். இதனால் செக்யூரிட்டியால் அந்த மாணவர் இழுத்துச் செல்லப்பட்டார். கடைசியில் அந்த மாணவரும் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்டது. இந்த ரீதியில்தான் இங்கே மாணவர்கள் பலரும் உயிரை இழந்து வருகிறார்கள்.

அந்தக் கல்லூரி மாணவர்களில் சிலரோ, "இந்த குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரிக்குள் அடிக்கடி மாணவர்களின் மரண சம்பவம் நடக்கிறது. அவர்கள் கொலை செய்யப்பட்டாலும், அது தற்கொலை என்றுதான் உடற்கூராய்வு ரிப்போர்ட்டைக் கொடுக்க வைப்பார்கள். இந்தக் கல்லூரிக்கு ஆதரவாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், மூகாம்பிகா கல்லூரி விரும்பியபடி ரிப்போர்ட் கொடுக்கும்''’என்று பகீரூட்டினார்கள். நம்மிடம் பேசிய மருத்துவப் பேராசிரியர் ஒருவர் சொன்ன தகவல் தலைசுற்ற வைப்பதாக இருக்கிறது.

student

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளிடம், அங்கிருக்கும் மருத்துவர் களே, "இங்கு எந்த வசதியும் இல்லை. நீங்க உயிர் பிழைக்கவேண் டும் என்றால் மூகாம்பிகாவுக்கு செல்லுங்கள்'’ என்று புரோக் கர்களைப் போல அங்கே அனுப்பி வைப் பார்களாம். இப்படி புரோக்கர் களாக செயல்படும் டாக்டர்களுக்கு உரிய கமிஷனை மூகாம்பிகா கொடுத்துவிடுமாம்.

மாணவி சுகிர்தராணி தற்கொலை விவகாரத் தில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய சிறு பான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் மீரான் மைதீன்...

"மாணவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது 306 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், அவர்களை ஏன் போலீஸ் கைது செய்யவில்லை? இதுவரை அங்கு தொடர்ந்து பல மாணவ -மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். அது பெரும்பாலும் கொலையாக இருக்கும் என்ற சந்தேகத்தை முன்னாள் மாணவர்களும், பொதுமக்களும் எழுப்புகின்றனர். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஓப்படைக்கவேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

ஆரம்பத்திலிருந்தே இந்தக் கல்லூரி நிர்வாகம் காவி சித்தாந்தத்துடன் இருந்தாலும், தற்போது குமரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரின் அரவணைப்பில் இருந்துகொண்டு ஆட்டம் போடுவதாக பலரும் சொல்கிறார்கள்.

மாணவி சுகிர்தராணி விவகாரத்தில் நீதி கிடைக்குமா? குற்றவாளிகள் கைதாவார்களா? -இந்தக் கேள்வியே அனைவர் மனதிலும் பலமாக எழுந்திருக்கிறது.

nkn141023
இதையும் படியுங்கள்
Subscribe