கடந்த ஜனவரி 26-28 நக்கீரன் இதழில், "ஜெ. ஸ்டைலில் அடாவடி இன்ஸ்பெக்டர்! -அலறும் அருப்புக்கோட்டை!' என்னும் தலைப்பில் வெளிவந்த செய்தியில், வழக்கறிஞர் கண்ணன், "எந்தப் புகாருக்கும் எப்.ஐ.ஆர். போடமாட்டேன்; கட்டப்பஞ்சாயத்து மட்டுமே பண்ணுவேன் என்று அடம்பிடிப்பவர், அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன்''’என பேட்டியளித்திருந்தார். அவர் நம்மை மீண்டும் தொடர்புகொண்டு "மாகாளியம்மன் வகையறா திருக்கோயில்களின் எழுத்தர்களான மாரிமுத்துவும், சங்கரமணியும் கடந்த 18-ஆம் தேதி அளித்த புகார் மீது இன்றுவரையிலும் அருப்புக் கோட்டை டவுண் காவல்நிலையம் எப்.ஐ.ஆர். போடவில்லையே'' எனத் தெரிவித்துவிட்டு, மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
"அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்துக்கு ஒரு புகார் வந்தால், விசாரணை அதிகாரியான ஆய்வாளர் பாலமுருகன் என்ன செய்யவேண்டும்? இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரித்து, ‘தேவையில்லாம எதற்காக கோர்ட்டுக்கு
கடந்த ஜனவரி 26-28 நக்கீரன் இதழில், "ஜெ. ஸ்டைலில் அடாவடி இன்ஸ்பெக்டர்! -அலறும் அருப்புக்கோட்டை!' என்னும் தலைப்பில் வெளிவந்த செய்தியில், வழக்கறிஞர் கண்ணன், "எந்தப் புகாருக்கும் எப்.ஐ.ஆர். போடமாட்டேன்; கட்டப்பஞ்சாயத்து மட்டுமே பண்ணுவேன் என்று அடம்பிடிப்பவர், அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன்''’என பேட்டியளித்திருந்தார். அவர் நம்மை மீண்டும் தொடர்புகொண்டு "மாகாளியம்மன் வகையறா திருக்கோயில்களின் எழுத்தர்களான மாரிமுத்துவும், சங்கரமணியும் கடந்த 18-ஆம் தேதி அளித்த புகார் மீது இன்றுவரையிலும் அருப்புக் கோட்டை டவுண் காவல்நிலையம் எப்.ஐ.ஆர். போடவில்லையே'' எனத் தெரிவித்துவிட்டு, மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
"அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்துக்கு ஒரு புகார் வந்தால், விசாரணை அதிகாரியான ஆய்வாளர் பாலமுருகன் என்ன செய்யவேண்டும்? இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரித்து, ‘தேவையில்லாம எதற்காக கோர்ட்டுக்கு அலையணும்? பணவிரயம் ஆகுமே?’ என்று அறிவுறுத்தலாம். புகார்தாரர் சமரசமாகப் போவதற்கு சம்மதித்தால், எழுதி வாங்கிவிட்டு அனுப்பலாம். ஆனால், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் புகார்தாரரை மட்டுமே பல நாட்கள் அலையவிடுவார். குற்றச்செயலில் ஈடுபட்டு புகாருக்கு ஆளானவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து கண்டிக்கவே மாட்டார். புகார் அளித்தவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, ‘ஆளைவிட்டால் போதும்..’ என்ற நிலைக்கு கொண்டுவந்துவிடுவார். நான் சொல்லுற எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு. ஒரு ரவுடியால எங்க ஏரியா மக்கள் உயிர் பயத்துல இருக்காங்கன்னு 50 பேர் கூட்டமாப் போயி கொடுத்த புகாரையே இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கண்டுக்கல. சுதா என்பவர் அளித்த அரிவாளால் வெட்ட வந்த புகார், ரமேஷ் என்ற மாணவர் தாக்கப்பட்ட புகார் எனப் பல புகார்கள் மீது நடவடிக்கையே எடுக்கல. இந்த அக்கிரமம் தொடர்ந்து நடக்குது. பாலமுருகனைப் போன்ற மேலதிகாரி இப்படியிருந்தால், அவருக்கு கீழே உள்ள காவலர்கள் எப்படி இருப்பாங்க? இதே அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஏட்டு இளங்குமரன் கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்துத் தந்து கொள்ளையடித்துக் கைதானதும் நடந்திருக்கு''’என்று வேதனைப்பட்டார்.
இந்து அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட அரசாங்க ஆவணங்கள் இருந்த கோவில் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, எழுத்தர்கள் இருவரைத் தாக்கித் தள்ளிவிட்டு, பத்திரங்களையும், பொருட்களையும், பணத்தையும் திருடிச்சென்றவர்கள் மீதான புகாரை, எப்.ஐ.ஆர். கூட போடாமல் அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையம் அப்படியே கிடப்பில் போட்டுவிட, சாலியர் சமுதாயத்தினர் கொந்தளித்து, இரவில் ஒன்றுகூடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். கொரோனா சூழ லைக் காரணம் காட்டி சட்டம் தடுத்த தால், அப்போராட்டத்தைக் கைவிட்டனர்.
நாம் அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஆய்வாளர் பால முருகனை தொடர்புகொண்டோம். "ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது'' என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.
சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்த கரிகாலன், ஏகாம்பரம், சங்கரலிங்கம், முத்துமுருகன், அன்பழகன் ஆகியோர் நம்மிடம் பேசினார்கள். “கோவில் ஆபீஸ்ல இருந்து புகார் கொடுத் திருக்கோம். சட்டுபுட்டுன்னு கேஸ் போட்டு என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்ல. ஆனா.. நெஞ்சு வலின்னு படுத்துக்கிட்டாரு இன்ஸ்பெக்டர். புகார் கொடுத்து ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு. ஆர்.டி.ஓ. விசாரணை எப்ப நடந்துச்சு? இன்ஸ்பெக்டர் பொய் சொல்லுறாரு. ஆர்.டி.ஓ. விசாரணைன்னா, ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துறதுதானே? இதுக்கு எப்படி சாலியர் சமுதாய மக்கள் சம்மதிப்பாங்க? திருடுன பொருளை எடுத்த இடத்துல திருப்பி கொண்டு வந்து வச்சிட்டா, திருட்டு இல் லைன்னு ஆயிருமா? கொள்ளை போயி ருச்சுன்னு புகார் கொடுத்திருக் கோம். மொதல்ல, வழக்கு பதிவு பண்ணி நடவடிக்கை எடுக்குறத விட்டுட்டு, திருடுனவங்கள சபையில உட்காரவச்சு பேச்சுவார்த்தை நடத்துவோம்னு சொல்லுறது ரொம்ப கேவலமா இருக்கு.
போலீஸ் செயல்படாததால, எங்க சமுதாயம் கூறுபோட்ட மாதிரி பிரிஞ்சு கிடக்கு. இப்ப கோயில் நிர்வாகமும் ஸ்தம்பிச்சுப் போச்சு. கோயில் பூசாரிகளுக்கும் ஊழியர் களுக்கும் சம்பளம் போடமுடியல. நைவேத்தியம் பண்ணுறவங்க, மாதச் சரக்கு வாங்குறவங்க, பூக்காரங்கன்னு யாருக்கும் எதுவும் கொடுக்கமுடியல. எல்லாம் அப்படி அப்படியே நிக் குது. இதுவே தொடர்ந்துச்சுன் னா, கோவில்ல அன்றாட பூஜை நடக்கிறது பாதிக் கும். அக்கிரமம் பண்ணுன ரெண்டு பேரும் போலீஸ் பயமில்லாம ஊருக்குள்ள தெனாவட்டா திரியுறாங்க. அதை உடைப்போம், இதை உடைப்போம்னு மிரட்டுறாங்க. புகார் கொடுத்த கோவில் கணக்கு பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் குடைச்சல் தர்றாங்க. இந்தமாதிரி சமுதாயத்துக்குள்ள குழப்பம் பண்ணிட்டா, அவங்க பண்ணுன குற்றம் இல்லைன்னு ஆயிருமா?' ’என்று கேட்டனர் பரிதாபமாக.
குற்ற வழக்குகளில் உறுதியுடன் இருந்து கடமையாற்றத் தவறியதால், காவல்துறையின் கண்ணியத்துக்கு அருப்புக்கோட்டையில் இழுக்கு ஏற்பட்டுள்ளது.