Advertisment

FOLLOW UP குழந்தைகளிடம் தீண்டாமை! குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை!

ff

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில், பெரும்பான்மை சமூக நாட்டாமையான மகேஸ்வரன் நடத்தி வருகிற பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கச் சென்ற பட்டியலின பள்ளிக் குழந்தைகளுக்கு, ஊர்க் கட்டுப்பாட்டைச் சொல்லி, "ஒங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. ஒங்க பெற்றோர் கள்ட்ட போய்ச் சொல்லுங்க' என்று கடைக்கார ரான மகேஸ்வரன் மறுத்தது வீடியோவாக பதிவாகி வைரலானது. இதனை 2022, செப் 24-27 நக்கீரன் இதழில் "குழந்தைகளை விரட்

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில், பெரும்பான்மை சமூக நாட்டாமையான மகேஸ்வரன் நடத்தி வருகிற பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கச் சென்ற பட்டியலின பள்ளிக் குழந்தைகளுக்கு, ஊர்க் கட்டுப்பாட்டைச் சொல்லி, "ஒங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. ஒங்க பெற்றோர் கள்ட்ட போய்ச் சொல்லுங்க' என்று கடைக்கார ரான மகேஸ்வரன் மறுத்தது வீடியோவாக பதிவாகி வைரலானது. இதனை 2022, செப் 24-27 நக்கீரன் இதழில் "குழந்தைகளை விரட்டிய தீண்டாமைக் கொடுமை! பதட்டத்தில் சங்கரன் கோவில்!'’ கட்டுரையில் பதிவு செய்திருந்தோம்.

Advertisment

ff

இவ்விவகாரத்தில் விசாரணை நடத்திய கரிவலம்வந்தநல்லூர் போலீசார், நாட்டாமை மகேஸ்வரன், துணை நாட்டாமை குமார், வீடியோ பதிவுசெய்த ராமச்சந்திரமூர்த்தி முருகன், சுதா உள்ளிட்ட 5 பேர் மீதும் தீண்டாமை வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, பாஞ்சாகுளம் மட்டுமல் லாது பிற பகுதிகளிலும் இந்த சம்பவம் காரணமாக பதட்டச் சூழல் நீடிக்கவே... சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரும் பிணையில் ஊர்திரும்பினால் விவகாரம் கொதிநிலையை மேலும் கிளப்பிவிடும் என்பதால் பொது அமைதி யைப் பாதுகாக்கிற வகையில், தென்மண்டல ஐ.ஜி.யான அஸ்ராகார்க், குற்றவாளிகள் 5 பேரும் பாஞ்சாகுளம் கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கிற வகையில் நடவடிக்கையை மேற் கொண்டிருக்கிறார். தொடர்புடைய காவல் நிலைய நெல்லை மாவட்ட வன்கொடு மைத் தடுப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தனர்.

ff

Advertisment

இந்த மனு மீதான விசாரணை நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி பத்ம நாதன், பட்டியலினப் பள்ளிக் குழந்தைகளுக்கு தின் பண்டங்கள் வழங்கமறுத்த வியாபாரிகள் உட்பட 5 பேரையும் குற்றவாளிகள் என தீர்மானித்து அவர்கள் 6 மாதம் பாஞ்சாகுளம் ஊருக்குள் நுழையத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்.

தமிழகத்தில் பரவலாக இரு பிரிவினரிடையே மோதல்கள் நடந்ததுண்டு. அது சமயம்கூட பொதுஅமைதியைப் பராமரித்திட இதுபோன்று சம்பவ இடத்திற்குள் குற்றவாளிகள் நுழைய தடை என்றளவில் சென்றதில்லை.

மேலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரும் ஊருக்குள் நுழையத் தடைவிதிப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறை என்று குறிப்பிடுகின்றனர் காவல்துறை வட்டாரத்தினர்.

nkn011022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe