"ஜனவரி 01-03 நக்கீரன் இதழில் "ராஜேந் திரபாலாஜிக்காக வெடித்த துப்பாக்கி! நிர்வாகிகளை மோதவிடும் எடப்பாடி!'’ என்னும் தலைப்பில் விருது நகர் மாவட்ட அ.தி.மு.க. உட்கட்சி மோதல் குறித்த செய்தி வெளியிட்டிருந் தோம். தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளின் மீதான வழக்குகள், பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை யாகிவிட்டது.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் அ.தி. மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல பொருளாளராக இருந்துவருகிறார் பிரபாத். நரிக்குடி அ.தி.மு.க. ஒன்றிய செய லாளராக இருந்த பூமி நாதன் விடுவிக்கப்பட்டு, அந் தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் சந்திரன். இதனைத் தொடர்ந்து, ஒன்றிய கழகம் -நரிக்குடி அ.தி.மு.க. வாட்ஸ்-அப் குழுவில் பூமிநாதனும் சந்திரனும் மோதிக் கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்து அவதூறான வார்த்தை ஒன்றை சந்திரன் பதிவிட, குறுக்கிட் டார் பிரபாத். 27-12-2024 நள்ளிரவு 12-30 மணிக்கு பிரபாத்தை கைபேசியில் தொடர்பு கொண்ட சந்திரன் மிரட்டினார். விடிந்த பிறகு கல்விமடையிலுள்ள பிரபாத் வீட்டுக்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அ.தி.மு.க. கட்சியினர
"ஜனவரி 01-03 நக்கீரன் இதழில் "ராஜேந் திரபாலாஜிக்காக வெடித்த துப்பாக்கி! நிர்வாகிகளை மோதவிடும் எடப்பாடி!'’ என்னும் தலைப்பில் விருது நகர் மாவட்ட அ.தி.மு.க. உட்கட்சி மோதல் குறித்த செய்தி வெளியிட்டிருந் தோம். தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளின் மீதான வழக்குகள், பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை யாகிவிட்டது.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் அ.தி. மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல பொருளாளராக இருந்துவருகிறார் பிரபாத். நரிக்குடி அ.தி.மு.க. ஒன்றிய செய லாளராக இருந்த பூமி நாதன் விடுவிக்கப்பட்டு, அந் தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் சந்திரன். இதனைத் தொடர்ந்து, ஒன்றிய கழகம் -நரிக்குடி அ.தி.மு.க. வாட்ஸ்-அப் குழுவில் பூமிநாதனும் சந்திரனும் மோதிக் கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்து அவதூறான வார்த்தை ஒன்றை சந்திரன் பதிவிட, குறுக்கிட் டார் பிரபாத். 27-12-2024 நள்ளிரவு 12-30 மணிக்கு பிரபாத்தை கைபேசியில் தொடர்பு கொண்ட சந்திரன் மிரட்டினார். விடிந்த பிறகு கல்விமடையிலுள்ள பிரபாத் வீட்டுக்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அ.தி.மு.க. கட்சியினருடன் வந்த சந்திரன், கதவை உடைத்து பிரபாத்தின் மகன் மிதுன்சக்ர வர்த்தியையும், மனைவி ஆனந்தவள்ளியையும் தாக்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாத், தற்காப்புக்காக, தான் வைத்திருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி யால் மேல்நோக்கிச் சுட்டார். சந்திரனும் அவருடன் வந்த அ.தி.மு.க.வினரும் தலைதெறிக்க ஓடிவிட்டனர்.
பிரபாத் அளித்த புகாரின் பேரில், அ.முக்குளம் காவல்நிலையம் 9 பிரிவுகளின் கீழ் சந்திரன் உள்ளிட் டோர் மீது வழக்கு பதிவு செய்துவிட்டு, பிரபாத் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.
பிரபாத் மீதான குற்றச்சாட்டு என்ன தெரியுமா? பிரபாத் வைத்திருந்த துப்பாக்கியின் உரிமத்தை காவல்துறையினர் சரிபார்த்தபோது, 50 துப்பாக்கி தோட்டாக்களுக்கு 46 தோட் டாக்கள் மட்டுமே இருந்துள்ளன. சந்திரனுட னான மோதலின்போது பிரபாத் பயன்படுத்தியது ஒரே ஒரு தோட்டா மட்டுமே. அப்படியென் றால் மீதி தோட்டாக்கள் எங்கே? எங்கு எப்போது எதற்காகப் பயன்படுத்தினார்? தோட்டாக்களுக்கு உரிய கணக்கை ஏன் காட்ட வில்லை? உரிய முகாந்திரமின்றி சுட்டுள்ளார். அரசு அனுமதிபெற்று வாங்கிய துப்பாக்கி உரிமத்தை அவர் முறையாகப் பயன்படுத்த வில்லை என்பதுதான்.
ஆயுதச் சட்டம் பாய்ந்த நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபாத், "வீடு புகுந்து என் பொண்டாட்டி புள்ளைய அடிச்ச சந்திரனை பத்து நாளாகியும் போலீஸ் அரெஸ்ட் பண்ணல? ஆளும்கட்சி சிபாரிசுங்கிறாங்க. அதான்.. முன்ஜாமீன் எடுக்கிற வரைக்கும் சந்திரனையும் அவனுடைய கூட்டாளிகளையும் போலீஸ் விட்டுவச்சிருக்கு. என் நெலமய பாருங்க. பொய் வழக்கு போட்ருக்காங்க. எடப்பாடியாரும்கூட எனக்கு நடந்த கொடுமைய கண்டுக்கல''’என்று புலம்பியிருக்கிறார்.
பிரதாப் தரப்பினரிடம் "பொய் வழக்கு ஏன் போட வேண்டும்?''’எனக் கேட்டோம்.
"அரசு உரிமம் பெற்ற துப்பாக்கியை யும் அதற்கான தோட்டாக்களையும் வைத்து பயிற்சி எடுக்கலாம். அதற் கெல்லாம் கணக்கு காட்டவேண்டிய தேவையில்லை. வரு டம் ஒன்றுக்கு 100 தோட்டாக்களுக்கு அனுமதி உண்டு. பிரபாத் மீது ஆயுதச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, கொலை முயற்சி வழக்கும் போட்டிருக்கிறார் கள். எல்லாம் ஒரு காரணத்தோடுதான். பிரபாத் குடும்பத்தைத் தாக்கிய சந்திரன் மீது இதே அ.முக்குளம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள், நரிக்குடி மற்றும் கட்டனூர் காவல்நிலையங் களில் தலா ஒரு வழக்கு என பல பிரிவுகளின் கீழ் மொத்தம் 7 வழக்குகள் உள்ளன. அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கு போயும் போயும் ஒரு ரவுடிதான் கிடைத்தானா? தங்கம் தென்னரசு எளிதாக வென்றுவிடக்கூடிய திருச்சுழி தொகுதியில் வாக்கு வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருக்கவேண்டும் என்ற திட்டத்தோடுதான், தி.மு.க. நிர்வாகிகளு டன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் ரவுடி சந்திரன் ஒன்றிய செயலாளர் ஆக்கப்பட்டிருக்கிறார். சந்திரனும் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் எசலிமடை ரமேஷும் பயன்படுத்துறது ஒரே கார்தான். அந்தக் கார்தான் தி.மு.க. கொடியை கட்டிக்கிட்டு தங்கம் தென்னரசு வீட்டுக்குப் போகும். அதே கார்தான், அ.தி.மு.க. கொடியை கட்டிக்கிட்டு எடப்பாடியார் வீட்டுக்கும் போகும். இந்தத் தொகுதில தி.மு.க.வோடு அ.தி.மு.க. கள்ளத்தனமா கூட்டணி வச்சிருக்கு. இங்கே என்ன நடக்குதுன்னு எடப்பாடியாருக்குத் தெரியல. மக்களால் வெறுக்கப்படும் சந்திரனைப் போன்றவர் கள் பொறுப்பில் இருந்தால், அ.தி.மு.க.வுக்கு எப்படி பெண் வாக்குகள் விழும்?''’என்றனர் ஆதங்கத்துடன்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நரிக்குடி ஆய்வாளர் ஜோதிபாசுவிடம், "சந்திரனுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுகிறதாமே?''’ எனக் கேட்டோம்.
"சந்திரன் மேல நெறய கேஸ் இருக்கு. சந்திரனை ஸ்பெஷல் டீம் ஃபாலோபண் ணிட்டிருக்கு. சந்திரன் செல்போன் மட்டுமில்ல.. கூட்டாளிங்க செல்போனும் ஸ்விட்ச்-ஆப் ஆயிருக்கு. வேற ஒஙஊஒ போட்டு புது நம்பர்ல பேசுவாங்கன்னு செக் பண்ணிட்டிருக்கோம். சொந்தக்காரங்க வீட்ல எல்லாம் தகவல் சொல்லி கேட்டுட் டிருக்கோம். சி.டி.ஆர். எல்லாம் போட் டாச்சு. சம்பவம் நடந்த லொகேஷன காட்டுது. அதுலயே நிக்குது. சந்திரன் வேற யாரையும் தொடர்புகொண்ட மாதிரி தெரியல. பிரபாத் பொய் வழக்குன்னுதான் சொல்லுவாரு. வழக்கமா எல்லாரும் சொல் லுறதுதான். பொய்னு எதுவும் கிடையாது. காலியான தோட்டாக்களுக்கு அவரு எப் படி வேணும்னாலும் கணக்கு சொல்லலாம். அது நியாயமா இருந்தால் ஏற்றுக்கொள்ள லாம். அவ்வளவுதான். தற்காப்புக்காகத் தான் சுட்டேன்னு அந்த சூழ்நிலையை அவருதான் விளக்கணும். நான் துப்பாக்கிய தூக்கலைன்னா எதிரி என்னோட தலையை துண்டாக்கியிருப்பான்னு சொல்லணும். அந்த இடத்துல பார்த்த சாட்சிகள் துப்பாக்கிய வச்சு சுட்டுப்புடுவேன்னு பிரபாத் மிரட்டுனதா சொன்னாங்க. அதான்.. கொலைமுயற்சி வழக்கும் போட்டிருக்கோம். இதையெல்லாம் பிரபாத் கோர்ட்ல பார்த்துக்கலாம்''’என்றார்.
திருச்சுழி தொகுதி அ.தி.மு.க. அரசியல் ஒரு தினுசாகவே இருக்கிறது.