Advertisment

FOLLOW-UP 11 அறைகளுக்கு சீல்! களமிறங்கிய காவல்துறை! கவுதமிக்கு பா.ஜ.க. மிரட்டல்

dd

டந்த அக்டோபர் 28-31 நக்கீரன் இதழில், நடிகை கவுதமியை சீட்டிங் செய்த கும்பல் பற்றியும், அவர்களுக்கு உதவியாக காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் குறித்தும், "பா.ஜ.க. சீட்டிங்! கவுதமி விலகல்! பின்னணியில் வானதி, அண்ணாமலை!'” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். செய்தியின் எதிரொ-யாக சீட்டிங் அழகப்பனின் இல்லத்திற்கு வந்து காவல்துறை, வருவாய்த்துறையினர் உதவியோடு 11 அறைகளுக்கு சீல் வைத்து அடுத்தகட்ட நடவடிக்கையை துரிதமாக்கியுள்ளனர்.

Advertisment

gg

நடிகை கவுதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மு.சொ.அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார். இதேவேளையில் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் முன்பு 4/10/2023 அன்று ஆஜராக செக்சன் 41-அ CRPC-ன்படி சம்மன் அனுப்பினர் போலீஸார். 6 நபர்களும் ஆஜராகாததால் மீண்டும் 9/10, 10/10, 21/10, 27/10- 2023 ஆகிய தேதிகளில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.

தற்பொழுதைய நாள்வரை அவர்கள் ஆஜராகாததால் தொடர் விசாரணையின் பொருட்டு கவுதமியின் புகாருக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆவணங்களைச் சேகரிக்கும் அடிப்படையில் உதவி ஆணையர் ஜான்விக்டர் தலைமையில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் உள் ளிட்ட 12 நபர்கள் அடங்கிய போலீஸார் அக்டோபர் 31 அதி காலையி

டந்த அக்டோபர் 28-31 நக்கீரன் இதழில், நடிகை கவுதமியை சீட்டிங் செய்த கும்பல் பற்றியும், அவர்களுக்கு உதவியாக காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் குறித்தும், "பா.ஜ.க. சீட்டிங்! கவுதமி விலகல்! பின்னணியில் வானதி, அண்ணாமலை!'” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். செய்தியின் எதிரொ-யாக சீட்டிங் அழகப்பனின் இல்லத்திற்கு வந்து காவல்துறை, வருவாய்த்துறையினர் உதவியோடு 11 அறைகளுக்கு சீல் வைத்து அடுத்தகட்ட நடவடிக்கையை துரிதமாக்கியுள்ளனர்.

Advertisment

gg

நடிகை கவுதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மு.சொ.அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார். இதேவேளையில் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் முன்பு 4/10/2023 அன்று ஆஜராக செக்சன் 41-அ CRPC-ன்படி சம்மன் அனுப்பினர் போலீஸார். 6 நபர்களும் ஆஜராகாததால் மீண்டும் 9/10, 10/10, 21/10, 27/10- 2023 ஆகிய தேதிகளில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.

தற்பொழுதைய நாள்வரை அவர்கள் ஆஜராகாததால் தொடர் விசாரணையின் பொருட்டு கவுதமியின் புகாருக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆவணங்களைச் சேகரிக்கும் அடிப்படையில் உதவி ஆணையர் ஜான்விக்டர் தலைமையில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் உள் ளிட்ட 12 நபர்கள் அடங்கிய போலீஸார் அக்டோபர் 31 அதி காலையிலேயே காரைக்குடி வந்தனர். கையோடு கொண்டுவந்த நீதிமன்ற உத்தரவினை காரைக்குடி நீதிமன்றத்தில் காண்பித்து, காரைக் குடி துணைச்சரகப் போலீஸாரின் ஒத்துழைப்போடு பள்ளத்தூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கோட் டையூரிலுள்ள சீட்டிங் அழகப்பனின் வீட்டை அடைந்தனர். சரியாக நண்பகல் 12.11-க்கு வீட்டினுள் நுழைந்த போலீஸார், அங்கிருந்த பணியாளரைக் கொண்டு வீட்டினுள் உள்ள அனைத்து அறைகளையும், வாயில்களையும் கண்டறிந்து வரு வாய்த்துறையினருக்கு தகவலளித்தனர்.

Advertisment

gg

ஒவ்வொரு அறையாகச் சோத னையிட்டு ஆவணங்களை அலசி ஆராய்ந்து அதனை வரிசைப்படுத்தி தாங்கள் கொண்டுவந்திருந்த நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டனர். இதனிடையில் பூட்டு உடைக்கும் "செல்லையா'வை வரவழைத்து அறைகளைத் திறக்கவும் முயற்சித்தனர் போலீஸார். இது இப்படியிருக்க, சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி தாசில்தார், போலீஸார் வைத்திருந்த ஆவணங்களைச் சரிபார்த்து கையெழுத்திட்டுச் சென்றார். இரவு 9.30 மணிவரை நடைபெற்ற சோதனையில் எண்ணற்ற ஆவணங்களைக் கைப்பற்றிய போலீஸார், 11 அறைகளுக்கு சீல் வைத்துப் புறப்பட்டனர்.

gg

"ஆரம்பத்திலிருந்தே அந்த ஆள் அப்படித்தான்! ஊருக்கு வந்தாலும் யாரோடும் அவருக்கு தொடர்பு கிடையாது. தான் நகரத்தார் சமூகம் என்பதால், தனக்கு பாதுகாப்பாக இங்கு (கோட்டையூர்) ஒருவரை பா.ஜ.க. வில் சேர்த்தார். இதற்கும் கவுதமிதான் உதவி செய்தாங்க. இப்ப அண்ணாமலையோடு தொடர்பில் இருக்கின்றார் அவர். அவருக்கும் மு.சொ.அழகப்பனின் இருப்பிடம் தெரியும். எனினும் காவல்துறை அவரைத் தொடத் தயங்குகின்றது'' என்றார் கோட்டையூர் அழகாபுரியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஒருவர்.

gg

இதேவேளையில், கவுதமியின் புகாரிலுள்ள ஷரத்தின்படி மு.சொ.அழகப்ப னின் மகன் சொக்கலிங்கம், ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் சொந்த வீடு வாங்கி அங்கு வசித்து வருவதாகவும், அதற்கான பணம் முழுவதும் தன்னிடம் மோசடி செய்து மகனுக்கு அனுப்பியுள்ளார் மு.சொ.அழகப் பன். இது அந்நியச் செலாவணி மோசடியின்கீழ் வருவதால், இத னை ஈ.டி. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுதமி தரப்போ, "இப்பொழுது முக்கியமான ஒன்றை தங்களிடம் பகிர விரும்புகின்றோம். மோசடி செய்து நீலாங்கரை பகுதியில் வாங்கிய 15,895 சதுர அடி இடத்தில் கவுதமிக்கே தெரியாமல் வீடு கட்டினர். தாங்களும் கடந்த இதழில் அந்தப் புகைப்படத்தை பிரசுரித்தீர்கள். மு.சொ.அழகப்பனின் மோசடிகள் தெரியவர, கவுதமி தன்னுடைய அனைத்து ஒரிஜினல் பத்திரங்களையும் கேட்ட நிலையில் நாச்சியாள்தான் நேரடியாகப் பேசினார். "அனைத்து அசல் ஆவணங் களும் வேண்டுமென்றால் நீலாங்கரை சொத்தில் நான் போடும் கண்டிசனுக்கு பாகப்பிரிவினை செய்ய சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றும், இல்லையெனில் கவுதமிக்கும், அவரது மகளுக்கும் விபரீதம் ஏற்படும்' எனவும் மிரட்டினார். இதனால் பயந்த கவுதமி யிடம், அவர்கள் கூறியபடியே மொத்தமுள்ள 15,895 சதுர அடியில் 9,094 சதுர அடி இடம் நாச்சாளுக்கும், மீதமுள்ள 6,801 சதுர அடி இடம் கவுதமிக்கும் என பாகப்பிரிவினை பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ள னர். இது எவ்வளவு பெரிய மோசடி?

gggg

தற்பொழுதுவரை பா.ஜ.க. தலைவர்களின் அரவணைப்பில்தான் அந்த சீட்டிங் பார்ட்டி உள்ளார். காவல்துறை எவ்வித நெருக்கடிக்கும் ஆளாகாமல் குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்ய வேண்டும் என்பதுதான் எங்களது தற்போதைய கோரிக்கை'' என்கின்றது.

படங்கள்: விவேக்

________

இறுதிச் சுற்று!

vijay

சென்னை நேரு ஸ்டேடியத்தில் "லியோ' படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், "ஒரு காட்டில் வேட்டைக்குச் சென்ற இரு வேடர்களில் ஒருவன் முயலை வீழ்த்தினான். இன்னொருவன் யானையை வேட்டையாட முயன்று தோற்றான். உண்மையில் யானையை வேட்டையாட முயன்று தோற்ற வேடனே திறமையானவன். தோல்வி வரினும் பெரிதை இலக்காகக் கொள்ளவேண்டும்''”என கூறினார். இந்நிலையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர், 2026 குறித்து கேள்வி கேட்க, “"அப்ப என்ன... உலகக் கோப்பையா?'' என நிகழ்ச்சித் தொகுப்பாளரைக் கலாய்த்தவர், பின் தனது ரசிகர் களைப் பார்த்து, “"கப்பு முக்கியம் பிகிலு...''’என பதிலளிக்க, ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகுநேரமானது. "அரசியல் பிரவேசம் பற்றிய குறிப்பே இது' என விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

-மணி

டமையில் நேர்மையும், துணிவும் இரு கண்களாக காவல்துறையில் பணியாற்றி வருபவர் ஐ.ஜி. அஸ்ரா கார்க். இவர் பெயரை கேட்டாலே ரவுடிகளுக்கும், சட்டவிரோத செய-ல் ஈடு படுவோர்க்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். இவர் ddசென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையராக (வடக்கு) இடமாற் றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வாக்கிடாக்கியில் பேசிய அவரின் ஆடியோ, அப்பகுதி போலீஸ் வட்டாரத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் பேசிய அஸ்ரா கார்க் "கஞ்சா, குட்கா, விபச்சாரம், சூதாட்டம், லாட்டரி போன்ற சட்டவிரோதச் செயல் களுக்கு துணைபோகும் போலீசார் யாராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். யாருக்கும் தெரியாது என்று நினைத்தால் நானே ஸ்பெஷல் டீமை அமைத்து ரெய்டு செய்வேன். அதில் சிக்கும் போலீசார் மீது கடும் நட வடிக்கை பாயும். காவல் உதவி ஆணையர்கள் தங்கள் கடமையைச் செய்யவேண் டும். எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., இன்ஸ் பெக்டர், காவலர்கள் யாராக இருந்தாலும், மூன்று வருடமாக ஒரே காவல்நிலையத்தில் பணி செய்யக்கூடாது. பணி இடமாற்றம் செய்தால் அயல் பணி என்ற பெயரில் அதே காவல் நிலையத் தில் பணியாற்றக்கூடாது. டிரான்ஸ் பர் ஆர்டர் கொடுத்தால் சம்பந்தப் பட்ட காவல் நிலையத்தில் ரிப் போர்ட் செய்யவேண் டும். பெயருக்கு ஒன்று, இரண்டு கேஸ் போட்டுவிட்டு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டால் கட்டாயம் சார்ஜ் கொடுக்கப் படும்'' என்று லெப்ட் அன்ட் ரைட் வாங்கி யுள்ளார்.

-அரவிந்த்

nkn041123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe