மைச்சரை சுற்றி சிலர் இருக்காங்க. அவுங்க, தங்களை மீறி அமைச்சரை சந்திக்க விடமாட்டேன்கிறாங்க. பொதுமக்களை மட்டுமில்லை, கட்சி நிர்வாகிகளான எங்களுக்கே அந்த நிலைதான்'' என புலம்புகிறார்கள் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க.வினர்.

தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான திருவண்ணாமலை வடக்கு மா.செ. எ.வ.வேலு, தனது தொகுதியில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் செல்வாக்காக இருப்பவர். கட்சித் தலைமையின் நம்பிக்கைக்குரியவர் என்பதால் சென்னையில் அவருக்குப் பணிகள் அதிகம். அமைச்சர் திருவண்ணாமலை வரும்போது, அவரைச் சுற்றி இந்த ஐவர் குழு, வேலி போட்டு விடுகிறதாம்.

r

நம்மிடம் பேசிய ஒன்றிய நிர்வாகி ஒருவர், "திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், ந.செ. கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ப்ரியா விஜயரங்கன், ஒப்பந்ததாரர் அருணை. வெங் கட், வழக்கறிஞர் சீனுவாசன் சுற்றி இருந்துக் கிட்டு மற்ற கட்சி நிர்வாகிகள் அவரை நெருங்க விடமாட்டேன்கிறாங்க. அருணை கன்ஸ்ட்ரக்ஷன் வெங்கட், சில வருடங்களுக்கு முன்புவரை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியோட இருந்தவர். இப்ப இங்கே வந்து டாமினேட் செய்றாரு.

Advertisment

கட்சி நிர்வாகியாக இருந்தாலும் எம்.பி. சீட், எம்.எல்.ஏ. சீட் கனவு நிறைவேறாமல் ஓரம்கட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளராக இருந்த சாவல்பூண்டி சுந்தரேசனை பதவியில் இருந்து விலக்கிய பின், அமைச்சரிடம் இவருக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அமைச்சர் தனக்கு மீண்டும் சேர்மன் சீட் வழங்குவார் என கார் முதல் வீடு வரை அமைச்சருடனே வலம் வர்றார். மற்ற நிர்வாகிகளை நெருங்கவே விடறதில்லை.

திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், உள்ளாட்சி தேர்தலில் சேர்மன் சீட் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டால் தன் மனைவியை சேர்மனாக்கிவிட வேண்டும் என முட்டி மோதுகிறார். நகர பொருளாள ரான வழக்கறிஞர் சீனுவாசன், இப்போ அரசு கூடுதல் வழக்கறிஞரா இருக்கார். அமைச்சர் இவரை நம்புவதால், அவரும் டாமினேட் செய்யறார். ப்ரியா விஜயரங்கனும் அப்படியே. தங்களுக்கு வேண்டியதை சாதிச்சிக்கட்டும். அதுக்காக மற்ற நிர்வாகிகள் அமைச்சரை நெருங்க தங்களிடம் அனுமதி வாங்கணும், என்ன விவகாரம்னு தங்களுக்கு தெரியணும் அப்படின்னு எதிர்பார்க்கறது எந்தவிதத்தில் நியாயம்?

ee

Advertisment

இந்த ஐவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவங்க. இவுங்க சமுதாயத்தை சேர்ந்தவங்க மேல ஏதாவது புகார் வந்தால் அதை அமைச்சர் கவனத்துக்கு போகாத அளவுக்கு பார்த்துக்கறாங்க. உதாரணத்துக்கு அமைச்சரின் தீவிர விசுவாசி மாவட்ட துணை செயலாளரா இருக்கற சுந்தர பாண்டியன், புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவராக இருக்கார். இந்த புதுப்பாளையம் ஒன்றியம் கலசப்பாக்கம் தொகுதிக்குள் வருது. தொகுதி எம்.எல்.ஏ சரவணன் சாதி ரீதியாக சேர்மனுக்கு தரும் குடைச்சல் குறித்து அமைச்சருக்கு புகார் அனுப்பியிருக்கார், அதன்மீது நடவடிக்கை எடுக்காத அளவுக்கு இந்த குழு செயல்படுது.

வடக்கு மாவட்ட நிர்வாகி ஒருவர் நம்மிடம், "வடக்கு மாவட்டத்தில் அரசின் சார்பில் செய்யாறு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடக்குது. அதில் அமைச்சர் வந்து கலந்துக்கறார், நலத்திட்ட உதவிகள் தர்றார். வடக்கு மாவட் டத்துக்கு, அந்த தொகுதிக்கும் சம்மந்தமேயில்லாத தெற்கு மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதரன், ந.செ கார்த்தி வேல்மாறன் வந்து கலந்துக்கறாங்க. மாவட்ட ஒன்றியக் குழு பெருந்தலைவர் பார்வதி சீனுவாசனைக்கூட மேடையில் ஓரம்கட்டி இவுங்க ஆக்ரமிச்சிக்கறாங்க. இவுங்க இங்க வந்து அரசியல் செய்யறதுக்கு என்ன தேவை வந்ததுன்னு தெரியல?

இதைப்பத்தி வடக்கு மாவட்ட செயலாள ரான (பொறுப்பாளர்) தரணிவேந்தனிடம் முறையிட்டா, அவர் வெதும்பிப்போய் பேசறார். தரணிவேந்தன் சைலண்ட் பார்ட்டி. யாரையும் அதட்டி வேலை செய்யச் சொல்லமாட்டார், மரியாதைக் குறைவா பேசமாட்டார். பெரியளவில் வசதியில்லாதவர், இதனால் வடக்கு மாவட்டத்துக்கான கட்சி செலவையும் அமைச்சர்தான் பார்த்துக்கறார். இதனால் வடக்கு மாவட்ட கட்சி நிகழ்ச்சி எதுவாயிருந்தாலும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவல கத்திலேயே நடக்கும். திருவண்ணாமலை அலுவலகத்துக்கு அவர் சென்றால் என்னவோ இவுங்க வீட்டு வேலைக்காரர் மாதிரி அவரை ட்ரீட் பண்றாங்க அமைச்சரை சுத்தியிருக்கறவங்க'' என்றார் வேதனையான குரலில்.

"கட்சி நிர்வாகிகள், தொண்டர்களோட உள்ளக் குமுறலை அவர்கிட்ட வெளிப்படையா சொல்றதுக்கான ஆள் அவர் பக்கத்துல யாருமில்லை. எல்லாரும் முகஸ்துதி பண்ணிட்டு, பின்னாடி அவங்கவங்க வேலையை பார்த்துக்குறாங்க.

அமைச்சர் ஊரில் இல்லாதபோது, கட்சி வேலைகளை அவரது மகன் கம்பன் பார்க்கிறார். அவரைச் சுத்தியும் ஒரு குரூப் இருக்கு. இதனால் அமைச்சருக்குத்தான் மக்களிடம் அதிருப்தி அதிகமாகுது. அது கட்சியையும் பாதிக்குது'' என்கிறார்கள் தி.மு.க. விசுவாசிகள்.