Advertisment

மீன் குத்தகை மோசடி! வறண்டுபோகும் அடவிநயினார் அணை விவசாயம்!

dd

ற்போதைய தென்காசி மாவட்டத்தின் வடகரை நகரிலிருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவிலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கிறது 132 அடி உயரம்கொண்ட அடவிநயினார் அணை. இது 1989-ல் வடகரையை உள்ளடக்கிய கடையநல்லூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவன் வேண்டு கோள்விடுக்க கலைஞரின் முன்னெடுப்பால் கட்டிமுடிக்கப்பட்டது.

Advertisment

dd

மேட்டுக்கால் மற்றும் கீழக்கால் வழியாகச் செல்லும் அணை நீரால் வடகரை, அச்சன்புதூர், பண்பொழி, நெடுவயல், இடைகால் தொட்டு, 30 கி.மீ. தொலைவிலிருக்கும் கடையநல்லூர் தாண்டி சுரண்டை வரையிலான ஊர்மேனியழகியான் கிராமம் வரை சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள், சுமார் 18,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த அணையால் பயனடைகின்றனர்.

Advertisment

இத்தனை கிராமங்களிலிருந்தாலும், இந்த அணை நீர், ஒவ்வொரு பகுதியிலுள்ள நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலமாகத் தங்கள் பகுதிக்கு இவ்வளவு அடி தண்ணீர் தேவை என்ற பட்டியல் ஊராட்சிக்கு அனுப்பப்பட்டு பின்

ற்போதைய தென்காசி மாவட்டத்தின் வடகரை நகரிலிருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவிலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கிறது 132 அடி உயரம்கொண்ட அடவிநயினார் அணை. இது 1989-ல் வடகரையை உள்ளடக்கிய கடையநல்லூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவன் வேண்டு கோள்விடுக்க கலைஞரின் முன்னெடுப்பால் கட்டிமுடிக்கப்பட்டது.

Advertisment

dd

மேட்டுக்கால் மற்றும் கீழக்கால் வழியாகச் செல்லும் அணை நீரால் வடகரை, அச்சன்புதூர், பண்பொழி, நெடுவயல், இடைகால் தொட்டு, 30 கி.மீ. தொலைவிலிருக்கும் கடையநல்லூர் தாண்டி சுரண்டை வரையிலான ஊர்மேனியழகியான் கிராமம் வரை சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள், சுமார் 18,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த அணையால் பயனடைகின்றனர்.

Advertisment

இத்தனை கிராமங்களிலிருந்தாலும், இந்த அணை நீர், ஒவ்வொரு பகுதியிலுள்ள நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலமாகத் தங்கள் பகுதிக்கு இவ்வளவு அடி தண்ணீர் தேவை என்ற பட்டியல் ஊராட்சிக்கு அனுப்பப்பட்டு பின் அதன் மூலமாக முறையாக அனைத்து அணைக்கட்டுப் பகுதிகளுக்கும் தண்ணீர் பாய்ந்திருக்கிறது.

அணை நீர் ஊராட்சிகளின் பொறுப்பிலிருந்தவரை தண்ணீர் விளைநிலங்களுக்கு முறையா கப் போனது. 2009-ன்போது அணை நீர்க் கட்டுப் பாடு அதனிடமிருந்து பொ.ப.துறைக்கு மாறி அதிகாரிகளின் கரங்களில் வந்தபிறகு விவசயம் மெல்ல மெல்ல பாதிப்பைச் சந்திக்கத் தொடங்கியது.

dd

இந்தநிலையில் அடுத்தகட்டமாக அடவிநயினார் அணை பாசனத்திற்குட்பட்ட 35-க்கும் மேற்பட்ட குளங்களில் மீன்பாசி எனப்படும் மீன் வளர்ப்பு குத்தகைத் திட்டத்தைக் கொண்டுவந்த அரசும், அதிகாரிகளும் அதனைத் தனியாரிடம் ஏலமுறை யில் குத்தகைக்குவிடத் தொடங்கினார்கள். அதற்குத் தேவையான அளவுத் தண்ணீரும் குளங்களுக்கு விடப்பட்டது. இந்த மீன் வளர்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்தந்த குளப் பகுதியின் ஆதிக்க சக்திகள் அரசியல் புள்ளிகளின் கூட்டணி யோடு மற்றவர்களை குத்தகை எடுக்கவிடாமல் தடுத்ததுடன், தாங்கள் பெருமளவில் ஆதாயம் அடையும் பொருட்டு வரையறுக்கப்பட்ட குத்தகைத் தொகையைவிடப் பாதியளவுத் தொகைக்கு எடுத்து தங்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்டனர். மேலும் அரசு குத்தகை வருமானம் என்பதால், மீன்பாசிக் குளத்திற்குத் தண்ணீர் முதன்மையானது என்பது எழுதப்படாத சட்டமானது. இதனால் விவசாயம் பாதிக்கத் தொடங்கியது.

தங்களுக்கான அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்திக்கொண்ட குத்தகை நபர்கள் ஒன்றரை லட்சம் வருடக் குத்தகையுள்ள நெடுங்குளத்தை எழுபத்தைந்தாயிரத்திற்கும், 6 லட்சம் குத்தகை கொண்ட இலத்தூர் பெரிய குளத்தை மூன்று லட்சத்திற்கும் எடுத்திருக்கின்றனர். இதேபோன்ற பாதிக் குத்தகை ஃபார்முலாதான் அனைத்துக் குளங்களிலும் நடந்தேறியிருக்கிறது.

குத்தகை நட்டம் என்று சொல்லி அதிகாரி களின் துணையுடன் ஒரு வருடக் குத்தகையை இரண்டு வருடம், பின் மூன்று வருடம் என்றாக்கி அப்புறம் அப்போதைய ஜெ. அரசு வரை அரசியல் புள்ளிகள் கொண்டுபோக, அன்றைய பொ.ப.துறை அமைச்சரான ஓ.பி.எஸ். மூலம், 5 வருட மீன் குத்தகை என்றானதுதான் இதில் விசேஷம்.

இதுபோன்று மீன் குத்தகை எடுத்த புள்ளிகளே, நீர்க்கண்டிகளை நன்றாகக் கவனித்து தங்களின் கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் மூலமாக வாய்க்காலில் வருகிற தண்ணீரை மீன் வளர்ப்பிற்காக தங்களின் குளங்களுக்குத் திருப்பி விடுவதால் கோடைகாலங்களில் விவசாயத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

dd

கடந்த 2012-ன்போது மீன்குத்தகைத் தண்ணீர் தொடர்பாக சிவராமப்பேட்டையில் ஏற்பட்ட மோதலில் விவசாயி முருகேசன் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். 2018-ல் புளியரைப் பக்கம் உள்ள கற்குடி கிராமத்தில் மீன் குத்தகைதாரர், விவசாயிகளுக்குமிடையே ஏற்பட்ட மோதலால் மகேஷ் அவரது சகோதரர் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர்கள் கொலையுண்டிருக்கின்றனர்.

அணை நீர் கடந்த ஆகஸ்ட் 21 அன்று அரசு அறிவிப்பால் திறக்கப்பட்டும் முறையான தண்ணீர் கிடைக்காமல் மகசூல் பாதித்த நெடுவயல் கால்பகுதி விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லாமல் போகவே, விவகாரம் கிளம்பியிருக்கிறது. அண்மையில் விவசாயம் பாதிக்கப்பட்ட மேட்டுக்கால் பகுதி விவசாயிகள், தங்களுக்கான முறையான தண்ணீரைப் பெறு வதற்குக்கூட நீர்க்கண்டிகளுக்கு மொய்தர நேர்ந்த கொடுமையும் நடந்தேறியிருக்கிறது.

""மீன் குத்தகை முறை வந்ததால் தண்ணீர் முறையாகக் கிடைக்கவில்லை. விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கு. மீன் குத்தகையை அரசு முறைப்படுத்தி விவசாயப் பகுதிகளுக்கு முறையான தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்'' என்கிறார் நெடுவயல் விவசாயி உதயகுமார்.

அச்சன்புதூர் விவசாயியான மீரான்கனியோ, ""மீன் பாசிக்குத்தகைக்கு ஒரு திட்டம் வைக்கணும். முன்பிருந்ததுபோல அடவிநயினார் அணை அனைத்துப் பாசன விவசாயிகளின் தடுப்பணை ஆயக்கட்டுத் தலைவர்கள், அதிகாரிகள் இணைந்த ஒரு குழு அமைத்து அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தண்ணீர் திறக்கப்பட்டால் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாகத் தண்ணீர் செல்லும்''’என்கிறார்.

இதுகுறித்த அனைத்தையும், அடவிநயினார் அணையின் சிற்றாறு கோட்ட வடிகால் செயற் பொறியாளரான கிருஷ்ணமூர்த்தியோ, ஆதாரத்துடன் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கிறேன் என்கிறார். ""ஆதாரத்தைக் கொடுத்துட்டா மட்டும்... என்னத்த...'' என முனகுகிறார்கள் விவசாயிகள்.

-பரமசிவன்

nkn300920
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe