காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாங்கூடத்தில் பாலியல் சர்ச்சை அடங்கு வதற்குள், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. கிருஷ்ணகுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்று அவரின் உறவினர் ஒருவர் புகார் கூற, மீண்டும் கேரளாவில் பரபரப்பாகியுள்ளது.

Advertisment

பா.ஜ.க. மாநில து.தலைவரான கிருஷ்ணகுமார் மீது, அவருடைய மனைவியின் தங்கை தன்னை கிருஷ்ணகுமார் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துவந்ததாகவும் அதேபோல் 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததாகவும் ஒரு பட்டியலை பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ்சந்திரசேகருக்கு அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இது சம்பந்தமாக அந்தப் பெண்ணின் தரப்பினர் கூறும்போது, கிருஷ்ணகுமாரின் மனைவி நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரும் பா.ஜ.க. மகிளா மோர்ச்சாவில் நிர்வாகியாக இருக்கிறார். பாலக்காடு நகராட்சியின் தலைவியாகவும் இருந்துள்ளார். இந்தநிலையில் அவரின் சகோதரி அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணத்திற்குமுன் வீட்டில் இருக்கும்போது கிருஷ்ணகுமார் பாலீயல்ரீதியாக தொந்தரவு செய்துவந்துள்ளார். இதை வெளியில் சொன்னால் உன்னுடைய அக்காவை கொடுமைப்படுத்துவேன் எனக் கூறியதால் அதை வெளியில் சொல்லாமல் இருந்துவந்துள்ளார். 

அத்தோடு நில்லாமல் அர்ச்சனாவுக்கு பெற்றோர் பார்க்கும் திருமண வரன்களையும்  கிருஷ்ணகுமார் தடுத்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் அர்ச்சனா, கிருஷ்ணகுமாரின் தொடர் பாலியல் தொந்தரவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடன் பழகிவந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கல்லூரி நண்பரை பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், பா.ஜ.க.வில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அர்ச்சனாவுக்கு பெற்றோர் கொடுக்கவேண்டிய சொத்தையும் கொடுக்கவிடாமல் தடுத்து தனது மனைவி பெயருக்கு எழுதி வாங்கினார்.

Advertisment

பாலக்காடு சட்டமன்றத் இடைத் தேர்தலில் தன்னைத் தோற்கடித்த காங்கிரஸ் ராகுல் மாங்கூடத்திலைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவரின் பாலியல் லீலைகளை கட்டவிழ்த்துவிட்டதில் முக்கிய பங்கு கிருஷ்ணகுமாருக்கு உண்டு. ராகுல் மாங்கூடத்தில் விவகாரம் ஊடகங்களில் பரபரப்பானதும், காங்கிரஸ்காரர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று பேட்டி கொடுத்துவந்த கிருஷ்ணகுமாரின் பேச்சுக்கு பதிலடி தந்த அர்ச்சனா, “"இந்த வார்த்தையைக் கூற கிருஷ்ணகுமாருக்கு யோக்கியதை இல்லை. அவரால் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட பல பெண்களில் நானும் ஒருத்தி'’எனக்கூறி அனை வருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.

பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த மாணவிகள் மற்றும் பா.ஜ.க.வின் மகிளா மோர்ச்சாவை சேர்ந்த பெண்கள் எனப் பலருக்கு தன்னுடைய வயதை மீறி பாலியல் தொந்தரவு கொடுத்துவந்தார். கட்சியில் அவர் செல்வாக்குமிக்க தலைவராக இருப்பதால் யாரும் அவர் மீது புகார் கொடுக்கவில்லை. பல பெண்களை கட்சியில் பதவி தருவதாக ஆசைகாட்டி தன்னுடைய இச்சைக்கு பலியாக்கியுள்ளார்.

கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுத்து, அவரது கட்சிப் பதவியைப் பறிக்கவேண்டும்’ என்று மாநில தலைவர் ராஜீவ்சந்திரசேகருக்கு இ-மெயில் மூலம் சில தினங்களுக்கு முன் புகார் கொடுத்துள்ளார்''’என்றனர்.

Advertisment

ஓணம் கொண்டாட்டத்திற்கிடையில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர் மீது எழுந்திருக்கும் பாலியல் புகாரால், எதிர்க்கட்சிகள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துள்ளன. பா.ஜ.க. வினரோ தர்மசங்கடமாக சமாளிப்புகளில் இறங்கிவருகின்றனர்.        

_________________
பிரசவ மரணத்தைத் தவிர்க்க விழிப்புணர்வு நாடகங்கள்!
-தமிழக அரசின் புதிய திட்டம்!

keralabjp1

தேனி மேகமலையில் செப்-2-ஆம் தேதி, வளரிளம் பருவத்தில் அதிகளவில் கர்ப்பம் தரிப்பதற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரம், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது.

விழிப்புணர்வு நாடகத்துக்குப் பின் பேசிய அமைச்சர் மா.சு., “"இந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு எண் 67-ன் படி, தமிழ்நாட்டில் வளரிளம் பருவத்தில் அதிகமாக கர்ப்பம் தரிக்கிற 24 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் தெரு நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கிறது. 

2020-21-ல் இந்த அரசு பொறுப் பேற்கிறபோது, பிரசவத்தின்போது 1 லட்சத்தில் 90.5 பெண்கள் இறந்தார்கள். 2022-23-ல் அது 52 ஆகக் குறைக்கப்பட்டது. 2023-24-ல் அது 45.5 ஆனது. கடந்த ஆண்டு அது 39.5 ஆகக் குறைந்தது. பிரசவத்தின் போதான பெண்கள் இறப்பு விகிதம் தேசிய அளவைக் காட்டிலும் பாதியளவாக இருக்கிறது.

இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அதனை பூஜ்யமளவுக்கு குறைப்பதுதான் இலக்கு. தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48, இதயம் காப்போம், பாதம் பாது காப்போம், நடப்போம் நலம்பெறுவோம், தொழிலாளர் களைத் தேடி மருத்துவத் திட்டம் என பல்வேறு  திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனோடு இந்தத் திட்டமும் தேனி மேகமலையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை பெருமையாகக் கருதுகிறோம். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு இது பேருதவியாக இருக்கும் என நம்புகிறோம்''’எனக் குறிப்பிட்டார்.

-கீரன்