Advertisment

முதல்வர் அளித்த முதல்கட்ட உதவி! -நக்கீரன் செய்தி எதிரொலி!

dra

டந்த (ஆகஸ்ட் 18-20) இதழில் “"தமிழக முதல்வரின் பார்வைக்காக காத்திருக்கும் திரா விடப் பல்கலைக்கழகம்!'’என்கிற தலைப்பில் ஆந்திரா, குப்பத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழ கத்தின் தேவைகள் குறித்த செய்தியை வெளியிட்டிருந்தோம். அந்த இதழ் வெளிவந்த அன்றைய தினமே (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) காலை தமிழ் வளர்ச்சித்துறையின் செயலாளர் உடனடியாக திராவிட பல்கலைகழக துணைவேந்தர் தும்மல ராமகிருஷ்ணாவிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

Advertisment

dra

டந்த (ஆகஸ்ட் 18-20) இதழில் “"தமிழக முதல்வரின் பார்வைக்காக காத்திருக்கும் திரா விடப் பல்கலைக்கழகம்!'’என்கிற தலைப்பில் ஆந்திரா, குப்பத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழ கத்தின் தேவைகள் குறித்த செய்தியை வெளியிட்டிருந்தோம். அந்த இதழ் வெளிவந்த அன்றைய தினமே (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) காலை தமிழ் வளர்ச்சித்துறையின் செயலாளர் உடனடியாக திராவிட பல்கலைகழக துணைவேந்தர் தும்மல ராமகிருஷ்ணாவிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

Advertisment

dra

இதுகுறித்து நம்மிடம் பேசிய பல்கலைக்கழக அதிகாரிகள், "தமிழ்நாடு தலைமைச் செயலகத்தி லிருந்து பேசுகிறார்கள் என்றதும் ஆச்சர்யம். உடனடியாக என்ன தேவை எனக் கேட்டார்கள். அதன்படி நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் வழங்க கோரிக்கை வைத்தோம். அதுபோல, மொழி மாற்ற அலுவலர் நியமனத்துக்கு தேவையான நிதியுதவி அளிக்கிறோம் என்றுகூறி அதற்கான அறிக்கையைக் கேட்டார்கள். துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவா ளர் ஆகியோர் உடனடி யாக கூடிப்பேசி அன்று மாலையே தயார்செய்து அனுப்பி வைத்தனர்.

தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் பேசியதும் உடனடியாக தமிழ்த்துறை தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை அழைத்த துணைவேந்தர் தும்மல ராமகிருஷ்ணா, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றாகச் செயல்படு கிறார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் புத்தகத்தில் வந்த ஒரு செய்தியைப் பார்த்தவுடனே நடவடிக்கை எடுத்தது ஆச்சர்யமாக இருக்கிறது துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வேகமும் வியப்பூட்டுகிறது எனப் பாராட்டினார்'' என்றனர்.

Advertisment

பல்கலைக்கழகத்துக்குத் தேவையானதைப் பெற ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி தமிழக முதல்வரிடம் தேவையானதைப் பெற திட்டமிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் வேகமான செயல் பாட்டுக்கு திராவிட பல்கலைக்கழக மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

________________________________________

சர்ச்சை கல்லூரியில் மாற்றம்!

கடந்த ஆகஸ்ட் 13-15 தேதியிட்ட இதழில், "கலவியல் கல்லூரி அலறும் மாணவிகள்!'” என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். செய்தி வெளிவந்த அன்றே, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.டி அந்த கல்லூரிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி, அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிக்கு சென்னையிலிருந்து புதிய முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணைக்குப் பின்பு பிற நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

nkn270821
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe