"ஹலோ தலைவரே... முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திச்சது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.''”
"ஆமாம்பா. தமிழக அரசுக்கு செக் வைக்கிற மாதிரியே நடந்துக்கிற கவர்னரை, ஸ்டாலின் சந்திச்சதால்தான் இந்த பரபரப்பு.''”
"ஆமாங்க தலைவரே... கவர்னர் ஆர்.என்.ரவியை 27-ந் தேதி ராஜ்பவனுக்குப் போய் திடீரென சந்திச்சார் ஸ்டாலின். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க ணும்னு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு, கவர்னர் மாளிகை இன்னும் ஒப்புதல் தரலை. கவர்னர் ஒப்புதல் தந்த பிறகுதான் அதை ஜனாதிபதிக்கு அனுப்பமுடியும். அதனால், இது குறித்து வலியுறுத்தத்தான் ஸ்டாலின் கவர்னரை சந்திச்சிருக்கார். ஆனால், இந்த விசயத்தில் கவர்னர் பெருசா ரீயாக்ட் பண்ணலை. அது ஸ்டாலினுக்கே நெருடலை ஏற்படுத்தியிருக்குதாம். ஸ்டாலின் வந்துட்டுப் போனபிறகு, அதுபற்றி கவர்னர், ஒன்றிய அரசுக்குத் தெரிவிச்சிருக்கார். ஆனால் அந்த சட்ட மசோதா பத்தி டெல்லியும் எதுவும் சொல்லலையாம். நாடாளுமன்றத்தில் தி.மு.க. தங்களுக்கு இசைவா நடக்குதான்னு, டெல்லி கவனிக்குதாம்.''”
"பரபரப்பா எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர், தொடங்கிடிச்சே?''”
"ஆமாங்க தலைவரே... நாடாளுமன்றத்தின்

"ஆமாங்க தலைவரே... நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, மூன்று வேளாண்மை சட்டங்களையும் ரத்து செய்வதற்கான சட்ட மசோதவை ஒன்றிய அரசு தாக்கல் செய்வதால் எதிர்பார்ப்பு அதிகம். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எந்த அரசியல் ஆதாயத்தையும் பெற்றுவிடக் கூடாதுன்னு மோடி கவனமா காய் நகர்த்தறாராம். அதேநேரம், முந்தைய கூட்டத் தொடர்களை பல்வேறு பிரச்சனைகளை கையில் எடுத்து காங்கிரஸ் முடக்குச்சு. அதுபோல், இந்த கூட்டத் தொடரையும் முடக்க அது திட்டமிடுது. சோனியாவின் உத்தரவுப்படி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், அந்த கட்சிகளின் தலைவர்களோடு காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கிட்டிருக்கு.''”
"மற்ற எதிர்க்கட்சிகளோட நிலை என்ன?''”
"காங்கிரஸ் தரப்பிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தாவிடம் பேசுனப்ப, "பிரச் சினைகளின் அடிப்படையில்தான் இதற்கு ஆதரவு தர முடியும்னும், காங்கிரஸ் நினைக்கிற மாதிரியெல்லாம் எங்களால் செயல்பட முடியாது'ன்னும் முகத்திலடிச்ச மாதிரி அவர் சொல்ல... காங்கிரஸ் தரப்பு படுஅப்செட்டாம். அதேபோல, தி.மு.க.வும் "பிரச்சினைகளுக்கு ஏற்பவே, ஒன்றிய அரசை ஆதரிப்பது, எதிர்ப்பது பற்றி முடிவெடுப்போம். மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால், நிதி தேவைகளுக்கேற்ப மத்திய அரசுடன் இணக்கமான போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டியது அவ சியமாகிறது'ன்னு சொன்னதோட, அதே நேரத்தில், "எந்த வகையில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டாலும், அதை ஆதரிக்கமாட்டோம்'னு காங்கிரஸிடம், தனது நிலையை தி.மு.க. விளக்கி யிருக்குதாம்.''”
"தமிழக அமைச்சர்கள் சிலர் மீது, அதிகாரிகள் அதிருப்தியில் இருக்காங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே... தமிழக அமைச்சர்கள் பலர் கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருக்காங்க. அதை சாதகமாக வைத்துக்கொண்டு, சில அமைச்சர்கள் மற்ற அமைச்சர்களின் துறைகளில் ஏகத்துக்கும் அதிகாரம் செலுத்தறாங்கன்னு அதிகாரிகள் புலம்பித் தள்றாங்க. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே, கலைஞர் நினைவிடத்தை புதிதாக உருவாக்கும் பணிகள் நடந்து வருது. இந்தச் சூழலில், தலைவர்களின் நினைவிடங்கள் முழுதையும் பராமரிக்க டெண்டர் விடப்பட்டிருக்கு. நினைவிடங்கள் பராமரிப்பு என்பது செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ்வரும். இதில் அந்தத் துறைக்கு சம்பந்தமில்லாத அமைச்சர் ஒருவர், வரம்புமீறி மூக்கை நுழைக்கிறாராம்.''”
"ஓ...''”
"பல கோடி ரூபாய்க்கான டெண்டரில் எல்-1, எல்-2, எல்-3 என மூன்று ஒப்பந்த நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டிருக்கு. டெண்டர் விதிமுறைகளின் படி எல்-1 நிறுவனத்துக்கு பராமரிப்புப் பணிகளை ஒப்படைக்க தமிழக செய்தித்துறை முடிவு செய்தபோது, செய்தித் துறைக்கு சம்மந்தமில்லாத முக்கிய அமைச்சர் ஒருவர், எல்-3-ஆக வந்த நிறுவனத்துக்குத்தான் இந்த கான்ட்ராக்ட்டை கொடுத்தாகணும்னு ஒத்தைக்காலில் நிக்கிறாராம். இத்தனைக்கும், எல்-3 செய்வதாகச் சொன்ன பார்மா லிட்டியை எல்-1 நிறுவனமும் செய்ய சம்மதித்தபோதும், தனக்கு வேண்டப்பட்ட எல்-3 நிறுவனத்துக்குதான் தரணும்னு அமைச்சர் அடம் பிடிப்பதால், டெண்டர் அப்படியே நிக்கிது. இந்த பஞ்சாயத்து முதல்வர் கவனத்துக்குப் போகும்போது, முடிவுக்கு வரும்னு சொல்லுது கோட்டை வட்டாரம்.''”
"புதுவையிலும் சலசலப்பு தெரியுதே?''”
"புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்குது. முதல்வராக ரெங்கசாமி இருக்கிறார். இவர் தி.மு.க. எம்.எல். ஏ.க்களைப் பழி வாங்கறதா குற்றச்சாட்டு எழுந்திருக்கு. தி.மு.க. எம்.எல்.ஏ.வான சம்பத்துக்கு ஒதுக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு, மேஜை நாற்காலிகள், ஃபோன், மின் விசிறின்னு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரலையாம். அதனால் தரையில் உட்கார்ந்துகொண்டு மக்கள்நலப் பணிகளை கவனிக்கிறாராம் சம்பத். தி.மு.க.வை சங்கடப்படுத்த நினைக்கும் பா.ஜ.க.வின் விருப்பத்தையே, ரெங்கசாமி செயல் படுத்துறாருன்னு புதுச்சேரி தி.மு.க.காரங்க சொல்றாங்க. இது அறிவாலயத்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கு. கொதிப்பில் இருக்கும் தி.மு.க.வினரோ, இதற்கு பதிலடி தரும் வகையில் தமிழக அரசின் சார்பில் மேசை, நாற்காலிகளை தமிழக முதல்வர் வாங்கி, புதுவை சம்பத்துக்கு அனுப்பி வைக்கணும்னு சொல்றாங்க.''”
"சசிகலா தரப்பிலும் அதிரடி மூவ்கள் தெரியுதே?''”
" டி.டி.வி.தினகரன் பேரில் இருக்கும் மிச்சசொச்ச சொத்துக்களையும், பறிமுதல் செய்யும் முடிவில் இருக்கிறாராம் சசிகலா. அந்த சொத்துக்கள் இருக்கும் தைரியத்தில்தான் தினகரன், ஆட்டம் போடறதா அவர் நினைக்கிறாராம். நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெ.வின் போயஸ்கார்டன் பங்களா, அவரது வாரிசுகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா வசம் வரப்போகுது. இந்த வீட்டை வாங்கத் துடிக்கும் சசிகலா, முன்னாள் லாட்டரி அதிபர் மார்டின் மூலம் டீலிங் நடத்துகிறாராம். போயஸ் கார்டன் வழக்கு தொடர்பாக யாரும் மேல்முறையீட்டுக்குப் போகலாம் என்பதால், தீபக் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கார்டன் சாவியை விரைவாக தனக்கு வழங்கவேண்டும் என தீபா மனு செய்துள்ளார்.''