விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் உள்ள சின்னக்காமன்பட்டியில் இயங்கிவரும் கோகுலேஸ் பட்டாசு ஆலையில் கடந்த 1ஆம் தேதி காலை 8.15 மணிக்கு திடீர் வெடிவிபத்து ஏற்பட்டு 8 அறைகள் தரைமட்டமாகி, 8 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். ஒருபக்கம் பட்டாசுத் தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், தியாகத்தைப் போற்றும் விதமாகவும் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் சிவகாசியில் நினைவுச் சின்னத்தை அரசு நிறுவ, இன்னொரு பக்கம் வழக்கம்போல் பட்டாசு ஆலைகளில் விதிமீறலால் வெடிவிபத்துகள் ஏற்படுவதும், உயிரிழப்புகள் தொடர்வதுமாக உள்ளன. 

கோகுலேஸ் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த மகாலிங்கம், வைரமணி, லட்சுமி, செல்லப்பாண்டி, ராமமூர்த்தி, புண்ணியமூர்த்தி, ராமஜெயம், நாகபாண்டி ஆகிய 8 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சமும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அழகுராஜ், கருப்பசாமி, மணிகண்டன், லிங்கசாமி, முருகலட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  


பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள், லஞ்சம் வாங்கும் அரசுத்துறை அதிகாரிகளின் அலட்சியம், உயிரிழப்புகளுக்கு அரசுத்தரப்பில் நிவாரணம் என அனைத்துமே சம்பிரதாயமாக தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில், சாத்தூர் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுராமன் காவல்துறையினரின் முகத்துக்கு நேராகவே, "ஸ்டாக்கில் சல்பர் 5 கிலோ மட்டும் இருந்தால் பக்கத்து ரூமுக்கு தீ பரவாது.  விபத்தெல்லாம் எதுனால நடக்குது? போலீஸ்காரங்க லஞ்சம் வாங்கு றீங்க.  பணபலம், அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர் கள் நடத்தும் பட்டாசு ஆலை கள் மேல நடவடிக்கை எடுக்கிறது இல்ல. ஏழை மக்கள் யாரு மாட்டுறாங்களோ அவங்க மேல நடவடிக்கை எடுக்கு றீங்க''’என்று கொந்தளித்து விட்டார். 

Advertisment

sivakasi1a

சி.ஐ.டி.யு. -பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங் கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் எம்.சி.பாண்டிய னோ, "விதிமீறல்களே பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக்கு காரணமாக உள்ளன. பட்டாசு ஆலைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். அரசு நிர்வாகமோ, கண்காணிப்புக்குழு என்ற பெயரில் பட்டாசு ஆலை முதலாளிகளிடம் லஞ்ச வேட் டை நடத்துகிறது''’என்கிறார். 

வெடிவிபத்துகள் குறித்து வேதனையைப் பகிர்ந்த அந்த பட்டாசு உற்பத்தியாளர், "பேன்சி ரகப் பட்டாசு விற் பனையில்தான் அதிக லாபம் பார்க்க முடிகிறது. பட்டாசு உற்பத்தியில் மணிமருந் துக் கலவை முக்கியமானது. வீரியம் மிகுந்த இந்த ரசாயனக் கலவையை நேர்த்தியுடன் கையாளத் தெரிந்த அனுபவம்மிக்கவர்களையே தொழிலில் ஈடுபடுத்தவேண்டும். தங்களின் வாழ்வாதாரமான  பட்டாசுத் தொழிலை தெய்வமாக மதிப்பவர்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள். அதே நேரத்தில்,  பட்டாசுத் தொழிலாளர்களில் போதைக்கு அடிமையானவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கறாராக நடந்துகொள்ளும் பட்டாசு ஆலைகள், போதை ஆசாமிகளை அனுமதிப்பதில்லை. ஆனாலும், தொழிலாளர் பற்றாக்குறையின் காரணமாக, வேறுவழியின்றி இத்தகையவர்களை வேலையில் ஈடுபடுத்துவோரும் உண்டு. 

Advertisment

குறுகிய காலத்தில் பெரிய அளவில் சம்பாதிக்கத் துடிக்கும் பேராசையினால் விதிமீறல் செய்பவர்களும், போதை தெளியாமல் பட்டாசு ஆலைக்குள் வரும் தொழிலாளர்களும், பட்டாசு முதலாளிகள் விட்டெறியும் லஞ்சத்தில் திளைப் பதையே வாடிக்கையாகக் கொண்ட  அரசுத்துறை அதிகாரிகளும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக் கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றார் கள்''’என்று அழுத்தமாகக் கூறினார். 

கோகுலேஸ் பட்டாசு ஆலையின் போர்மேன் ரவி கைது செய்யப்பட,  உரிமையாளர் கமல்குமார் தலைமறைவாகிவிட, டான்பாமா எனப்படும் தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர், "இந்த தீ விபத்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் முழுமையான விளக்கம் அளிக்கவிருக்கிறோம்''’என்று செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக்கு தீர்வே கிடையாதா?                          

-அதிதேஜா 

sivakasi1