Advertisment

நீ பற்ற வைத்த நெருப்பு! நீ விதைத்த வினை! எரியும் இலங்கை! உயிருக்குப் பயந்து ஒளிந்த ராஜபக்ஷே!

ss

மிழீழத்தையும் தமிழினத்தையும் கொன்றழித்த அதே மே மாதத்தில் ராஜபக்ஷேக்களின் சிம்மாசனம் வீழ்ந்துகொண்டிருக்கிறது. சிங்களத்தின் அதிபரான கோத்தபாய ராஜபக்ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே சகோதரர்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால் பொருளாதார ரீதியாகவும் அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லாடிய சிங்கள மக்களே கொதித்தெழுந்து, கொழும்பு நகரையும் மற்ற பகுதிகளையும் தீயிட்டுக் கொளுத்திவருகிறார்கள்.

Advertisment

srilanka

ராஜபக்ஷேவின் ஆளும் கட்சி யிலுள்ள கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கோத்தபாய, மகிந்த இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஒரு கட்டத்தில் ஆளும்கட்சி கூட்டணியி-ருந்து தோழமைக் கட்சிகள் சில வெளியேறின. அரசியல் நெருக்கடியையும் மக்கள் போராட்டத்தையும் ஒடுக்க, இலங்கையில் எமெர்ஜென்ஸியை பிரகடனப்படுத்தினார் கோத்தபாய. மக்களின் கோபம் அதிகரித்தது. கோத்தபாயவின் ஜனாதிபதி மாளிகையையும். பிரதமர் மகிந்தாவின் அலரி மாளிகையையும் மக்கள் சூழ்ந்து அடித்து நொறுக்கினர்.

srilanka

Advertisment

கொழும்பு நகரம் முழுவதும் சிங்கள மக்களின் போராட்டங்கள் தீவிரமாக, ராஜபக்ஷே ஆதரவாளர்களும் களத்தில் குதிக்க, இருதரப்புக்குமிடையே தாக்குதல் வன்முறையாக மாறியது. ராஜபக்ஷேக்களின் ஆதரவாளர்களின் நிறுவனங்கள், ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகள், அமைச்சகளின் பங்களாக்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அம்பந்தோட்டாவில் உள்ள ராஜபக்ஷேக் களின் பூர்வீக இல்லத்தையும் சிங்களவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். ராஜபக்ஷேக்களின் தந்தை டி.ஏ. ராஜபக்ஷேவின் நினைவுச் சின்னமும் சிலையும் இடித்து நொறுக்கப் பட்டது. தென்னிலங்கை முழுவதும் இப்படிப்பட்ட வன்முறை கோரத்தாண்டவ மாடியது. இந்த சூழலில், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்ஷே. அவருடன் 26 அமைச்சர்களும் பதவி விலகினார்கள்.

இதுகுறித்து கொழும்பு பத்திரிகை யாளர்கள் சிலரிடம் விசாரித்தபோது, "வன்முறை வெடித்தபடியிருந்த சூழலில், கோத்தபாயவும் மகிந்தாவும் சந்தித்து விவாதித்தனர். அண்ணன் மகிந்தாவை ராஜினாமா செய்யச் சொல்லி வலியுறுத்தி

மிழீழத்தையும் தமிழினத்தையும் கொன்றழித்த அதே மே மாதத்தில் ராஜபக்ஷேக்களின் சிம்மாசனம் வீழ்ந்துகொண்டிருக்கிறது. சிங்களத்தின் அதிபரான கோத்தபாய ராஜபக்ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே சகோதரர்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால் பொருளாதார ரீதியாகவும் அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லாடிய சிங்கள மக்களே கொதித்தெழுந்து, கொழும்பு நகரையும் மற்ற பகுதிகளையும் தீயிட்டுக் கொளுத்திவருகிறார்கள்.

Advertisment

srilanka

ராஜபக்ஷேவின் ஆளும் கட்சி யிலுள்ள கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கோத்தபாய, மகிந்த இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஒரு கட்டத்தில் ஆளும்கட்சி கூட்டணியி-ருந்து தோழமைக் கட்சிகள் சில வெளியேறின. அரசியல் நெருக்கடியையும் மக்கள் போராட்டத்தையும் ஒடுக்க, இலங்கையில் எமெர்ஜென்ஸியை பிரகடனப்படுத்தினார் கோத்தபாய. மக்களின் கோபம் அதிகரித்தது. கோத்தபாயவின் ஜனாதிபதி மாளிகையையும். பிரதமர் மகிந்தாவின் அலரி மாளிகையையும் மக்கள் சூழ்ந்து அடித்து நொறுக்கினர்.

srilanka

Advertisment

கொழும்பு நகரம் முழுவதும் சிங்கள மக்களின் போராட்டங்கள் தீவிரமாக, ராஜபக்ஷே ஆதரவாளர்களும் களத்தில் குதிக்க, இருதரப்புக்குமிடையே தாக்குதல் வன்முறையாக மாறியது. ராஜபக்ஷேக்களின் ஆதரவாளர்களின் நிறுவனங்கள், ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகள், அமைச்சகளின் பங்களாக்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அம்பந்தோட்டாவில் உள்ள ராஜபக்ஷேக் களின் பூர்வீக இல்லத்தையும் சிங்களவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். ராஜபக்ஷேக்களின் தந்தை டி.ஏ. ராஜபக்ஷேவின் நினைவுச் சின்னமும் சிலையும் இடித்து நொறுக்கப் பட்டது. தென்னிலங்கை முழுவதும் இப்படிப்பட்ட வன்முறை கோரத்தாண்டவ மாடியது. இந்த சூழலில், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்ஷே. அவருடன் 26 அமைச்சர்களும் பதவி விலகினார்கள்.

இதுகுறித்து கொழும்பு பத்திரிகை யாளர்கள் சிலரிடம் விசாரித்தபோது, "வன்முறை வெடித்தபடியிருந்த சூழலில், கோத்தபாயவும் மகிந்தாவும் சந்தித்து விவாதித்தனர். அண்ணன் மகிந்தாவை ராஜினாமா செய்யச் சொல்லி வலியுறுத்தினார் தம்பி கோத்தபாய. அண்ணன் மகிந்தாவோ, இந்த தேசத்தில் நடக்கும் அத்தனை நெருக்கடிகளுக்கும் குழப்பங்களுக்கும் நீ தான் காரணம். அதனால், நீதான் பதவி விலக வேண்டும்'' என ஆவேசப்பட்டார்.

srilanka

இதனை மறுத்த தம்பி கோத்தபாய, "நீ ராஜினாமா செய், இல்லையெனில் உன்னை கைது செய்து சிறையில் அடைக்க உத்தர விடுவேன்'' என கோபமாக மிரட்டியிருக்கிறார். இதில் பயந்து போன மகிந்த ராஜபக்ஷே பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அண்ணனை பலிகடாவாக்கி அதிகாரத்தில் இன்னமும் நீடிக்கிறார் கோத்தபாய.

எதிர்க்கட்சி தலைவர் சஜீத பிரேமதாசா உள்பட அனைத்து அரசியல் தலைவர்களும், ஜனாதிபதி கோத்தபாயவும் விலக வேண்டும் என அதிரடியாக குரல் கொடுத்து வருகிறார்கள். கோத்தபாயவின் ராஜினாமாவில்தான் இருக்கிறது சிங்கள தேசத்தின் அமைதி” என்று சுட்டிக்காட்டினார்கள்.

இதற்கிடையே, பதவி விலகிய மகிந்த ராஜபக்ஷேவை தாக்குவதற்கு சிங்களவர்கள் ஆவேசம் கொண்டு அவரது அலரி மாளிகைக்குள் நுழைந்தனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த சிங்கள ராணுவம் மக்களை நுழையவிடாமல் தடுக்க, இருதரப்புக்கும் மோதல் வெடித்தது. மாளிகையிலிருந்து மகிந்தா உள்ளிட்ட அவரது குடும்பத் தை திரிகோண மலையில் உள்ள நேவியின் விருந்தினர் மாளிகைக்கு மாற்றி யது ராணுவம். அங்கேயும் மக்கள் தாக்குதல் நடத்தினர்.

prabhakaran

உயிருக்கு பயந்து ராஜ பக்ஷே குடும்பம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சிக்கிறது என்கிற தகவல் பரவியதால் கொழும்புவிலுள்ள சர்வதேச விமானநிலையத்தை முற்றுகையிட்டு தாக்கினார்கள். ஆனால், மகிந்தா எங்கே இருக்கிறார் என மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது பற்றி இலங்கையிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் விசாரித்தபோது, "திரிகோணமலை நேவி கேம்பில் மகிந்தாவை ராணுவம் பாதுகாக்கிறது என்பது மக்களை திசை திருப்பும் செய்தி. மகிந்தாவை வேறு இடத்தில் பாதுகாக்க வாய்ப்புகள் அதிகம். கொழும்பில் உள்ள ராணுவத்தின் அதி உயர் பங்களாவில் உள்ள அண்டர்கிரவுண்டில் பாதுகாப்பாக அவர் பதுங்கியிருப்பதாகவும் சில தகவல்கள் இங்கு பரவியுள்ளன'' என்று தெரிவிக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டணியில் உள்ள தமிழ் மக்கள் முன்னணி கட்சியின் எம்.பி.யும் அக்கட்சியின் செயலாளருமான செல்வராஜா கஜேந்திரனிடம் நாம் விசாரித்தபோது, "தமிழர்களின் தாயகப் பிரதேசத்தை நிர்மூலமாக்கி, ஒன்னரை லட்சம் தமிழர்களை கொன்றழித்து கொக்கரித்த ராஜபக்ஷேக்களை கொண்டாடிய அதே மக்கள்தான் இன்றைக்கு ராஜபக்ஷேக்களின் ராஜ்ஜியத்தை வீழ்த்திக்கொண்டி ருக்கிறார்கள்.

2009, மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த துயரத்தை யாரும் மறந்துவிடவில்லை. அன்றைக்கு ஓங்காரமிட்டு எழுந்த தமிழர்களின் உயிர் அலறல் ராஜபக்ஷேக்களை மகிழ்வித்தது. அத்தகையதொரு சூழல் இன்று கொழும்பில் ராஜபக்ஷேக்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதி கோத்தபாய எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் தேசத்தை நிர்மூலமாக்கும் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்மந்தன் பலமுறை அரசுக்கு சொல்லியிருக்கிறார். ஜனாதிபதி கோத்தபாய பதவி விலகாத வரை இலங்கையில் அமைதி வராது என்றே தோன்றுகிறது. தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் சமஸ்டி ஆட்சி முறைதான் சரியானது. தற்போதைய சூழல்களை இந்தியா ராஜதந்திரத்துடன் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ராஜபக்ஷேக்களின் ஒற்றை ஆட்சி முறை தத்துவத்தை உடைத்தும், 13-வது சட்டத்திருத்த யோசனையை தவிர்த்தும், அரசியல் தந்திரோபாயங்களுடன் இந்தியா அணுக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை பெற்றிட இந்தியா உதவ வேண்டும்''‘ என்கிறார்.

srilanka

இலங்கையின் பொருளாதார அறிஞர் ஞானதிரவியத்திடம் பொருளாதார நெருக் கடியில் இலங்கை சிக்கியது எப்படி என பேசியபோது, "இலங்கையின் பொருளாதாரம் என்பது சுற்றுலா வருவாய், ரப்பர் -தேயிலை -கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி வருவாய், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் செய்யும் முதலீடுகள் ஆகிய 3 வழிகளில்தான் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. கொரோனா பெருந் தொற்றில் உலகமே சிக்கியபோது இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுக்காததால் சுற்றுலா வருவாய் முற்றிலும் முடங்கிப்போனது.

இந்த நிலையில், கடந்த 2021 ஏப்ரலில், புதிய விவசாயத்தை அறிமுகம் செய்வதாகச் சொல்லி, அனைத்து ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளை இறக்குமதி செய்ய தடை விதித்தார் கோத்தபாய ராஜபக்ஷே. இதனால் இறக்குமதிக்கு செலவிடும் சுமார் 400 மில்லியன் டாலர்களை சேமிக்க முடியும் என சொன்னார் ஜனாதிபதி. இதனால், விவசாயம், ரப்பர் தேயிலை உற்பத்தி 95 சதவீதம் குறைந்தது. ஏற்றுமதி பாதிக்கப் பட்டது. பணவீக்கமும் நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்தது.

srilanka

அதேபோல, வெளி நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளும் தடைப்பட்டதால் அந்நிய செலாவணியின் இருப்புகள் 7.6 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் தற்போது 2.30 மில்-யன் டாலர்களாக குறைந்தன. மேலும் ராஜ பக்ஷேக்களுக்கு நெருக்கமான பினாமி கட்டுமான நிறுவனங்களில் லாபங்களுக்காக கட்டுமானத் துறைக்கு விதிக்கப்பட்டிருந்த வருமான வரியை 28 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறைத்தார் கோத்தபாய.

இதனால் அரசின் வருவாய் குறைந்தது. பல நாடுகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டக்கூட ராஜபக்ஷேக்களால் முடியவில்லை. வாங்கப்பட்ட கடன்களும் ராஜபக்ஷேக்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

அரசாங்கத்தை ராணுவ மயமாக்குவதில் அக்கறை காட்டினார் கோத்தபாய. கவர்னர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், செயலாளர்கள் என முக்கிய பதவிகளி லெல்லாம் ராணுவ அதிகாரிகளை நியமித்தார். அவர்களுக்கு மக்களுக்கான அரசியலை சொல்லித்தரத் கோத்தபாயவுக்கு தெரியவில்லை. இப்படி பல்வேறு காரணங்களால் மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை. வாழ்வாதாரம் கேள்விக் குறியானதால் புரட்சி வெடிக் கிறது''’என்கிறார் ஆவேசமாக.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் முன்னாள் முதல்வருமான செந்தில் தொண்டமானிடம் நாம் பேசியபோது,’

srilanka

"ஜனாதிபதியின் பல்வேறு நட வடிக்கைகளில் நாங்கள் முரண்பட்டிருந்தோம். அதனால் இப்படிப்பட்ட மோசமான பொருளாதார சூழல்கள் உருவாகும் என்பதை பல முறை அவரிடம் விவாதித்தோம். அவரிடமிருந்து நேர்மறையான எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் இரு மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டோம். தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் துரதிர்ஷ்டமானது''’என்கிறார் இயல்பாக.

ஸ்வீடனில் இருக்கும் சர்வதேச அரசியல் ஆராய்ச்சியாளர் முனைவர் விஜய் அசோகனிடம் விவாதித்தபோது,’"தமிழின அழிப்பிற்காக ராஜபக்ஷேக்கள் நடத்திய போரின் விளைவால் உருவானதுதான். அந்த போரினால்தான் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்தது. தமிழினத்தை அழிக்க உருவாக்கப்பட்ட வலையில் இப்போது அவர்கள் வீழ்ந்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், "தமிழர்களை இன அழிப்பிற்கு உட்படுத்துவதன் வழியாக, நீங்கள் உங்களை அழித்துக்கொண்டிருக்கிறீகள். இதனை ஒருநாள் உணர்வீர்கள். அந்த தருணம் வரும்போதுதான் இந்த மண்ணில் எல்லோரும் நிம்மதியாக வாழும் சூழல் பிறக்கும்' என அடிக்கடி சொல்லியிருக்கிறார். வினை விதைத்தவர்கள் வினையை அறுத்துக் கொண்டிருக் கிறார்கள்.

தமிழர்களுக்கான நியாயங்களை சிங்களவர்கள் உணரும் போதும், இரு தரப்புக்குமான சமமான அரசியல் தீர்வுகளை எட்டும்போதும்தான் இலங்கைத் தீவில் நிலையான பொருளாதார வளர்ச்சியை கொண்டுவர முடியும்.

srilanka

ஒரு இனத்தை சுரண்டிக்கொண்டும் அழித்துக் கொண்டும் இன்னொரு இனம் வாழ முடியாது என்பதை சிங்களவர்கள் இப்போதாவது உணரவேண்டும். தமிழினத்தை அழிக்க ராஜபக்ஷேக்களுக்கு துணை நின்ற அமெரிக்கா, நார்வே, இந்தியா, சீனா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் நினைத்திருந்தால் பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள தேசத்தை காப்பாற்றியிருக்க முடியும். இப்போது இருக்கும் அரசியல் சூழல்களில் ராஜ பக்ஷேக் களை வீழ்த்தும்வரை அமைதி காப்பார்கள். அவர்களை வீழ்த்திவிட்டு, பிறகு இலங்கையை காப்பாற்று வார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கான நியாய மான அரசியல் தீர்வின் வழியாகத்தான் இரு இனங் களும் இணைந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். இல்லையெனில், இலங்கையில் தமிழீழம் முறையாக உருவாவதற்கு வாய்ப்பாக அமையும்''’என்கிறார் மிக அழுத்தமாக.

மதங்களால் சூழ்ந்த தேசம் ஒரு கட்டத்தில் மக்களால் வீழ்த்தப்படும் என்பதை ராஜபக்ஷேக்களால் நிரூபித்துக்கொண்டி ருக்கிறது இலங்கை.

nkn140522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe