ந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் புதிய அறிவிப்பு மாணவர்-பெற்றோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இதயங்களில் ஈட்டியைப் பாய்ச்சியிருக்கிறது.

eed

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 16-வது பிரிவு திருத்தப்பட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ரெகுலர் தேர்வு (வழக்கமான தேர்வு) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வில் ஐந்து மற்றும் எட்டாம்வகுப்பு மாணவர்கள் ஃபெயில் ஆகிவிட்டால் இரண்டு மாதத்தில் சிறப்புத்தேர்வு நடத்தப்படும். அத்தேர்விலேயும் தேர்ச்சிபெறவில்லை என்றால் ஃபெயில் செய்யப்பட்டுவிடுவார்கள். அதாவது, மீண்டும் அதே வகுப்பில் வைக்கப்படுவார்கள். இப்புதிய சட்டத்திருத்தத்திலிருந்து விலக்கு பெற மாநில அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால், இதிலிருந்து விலக்கு பெறாமல் மத்திய அரசுக்கு அடிபணிந்துவிட்டது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அரசு. இதுகுறித்து, குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடும் "தோழமை'’அமைப்பின் தலைவர் தேவநேயன் நம்மிடம், “""கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஃபின்லாந்து சென்று என்னத்த பார்வையிட்டார்? அங்கெல்லாம் தேர்வுமுறைகளால் மாணவர்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். கிரியேட்டிவிட்டி, பேச்சுத்திறன், மொழி ஆற்றல் உள்ளிட்டவற்றைதான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். தேர்வு என்றால் தேர்ந்தெடுத்தல். மீதமுள்ளவர்கள் தேவையில்லை என்பதுதான் தேர்வு. இது பல குழந்தைகளை வெளியேற்றுமே தவிர உள்ளே கொண்டுவராது.

Advertisment

ee

நாட்டில் 64 சதவீத தாய்மார்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் மூளைவளர்ச்சி என்பது மற்ற குழந்தைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.

மெதுவாக கற்றல், மிதமான கற்றல், விரைவாக கற்றல், மாற்றுத்திறன் என்று நான்கு வகைகள் உள்ளன. இப்படி வகைப்படுத்தப்பட்டதற்குக் காரணம், குழந்தைகளின் கவனக்குறைவோ அலட்சியமோ அல்ல. கர்ப்பகால பராமரிப்பும் குழந்தைகளின் குடும்ப பொருளாதாரச் சூழலும்தான். இப்படிப் பட்ட ஏற்றத்தாழ்வுகள் கொண்ட குழந்தைகளுக்கு ஐந்தாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு என்று ஃபில்டர் செய் வது என்பது அதிகபட்ச குழந்தை உழைப் பாளர்களையும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளையும்தான் உரு வாக்கும். இது குலக்கல்விக்கு கொண்டு செல்கிறது''’என்கிறார் அவர்.

Advertisment

கல்வியாளரும் பொதுப்பள்ளிகளுக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, “""தமிழக அரசின் ஆணைப்படி முதல் மூன்றாண்டுகளுக்கு ஃபெயில் ஆக்கி அதே வகுப்பில் (க்ங்ற்ஹண்ய்) தங்கவைக்கமாட்டார்கள். ஆனால், அதற்குப்பிறகு முழுமையாக அமல்படுத்தும் வாய்ப்புள்ளது.

கல்வி உரிமைச்சட்டப்பிரிவு-16 திருத்தத்தின்படி வழக்கமான (பொது) தேர்வு என்கிறது தமிழக அரசு. ஆனால், அதே சட்டப் பிரிவு 30(1)-ன்படி எட்டாம் வகுப்பு முடியும்வரை எந்தக் குழந்தையும் வாரிய (போர்டு எக்ஸாம்) தேர்வில் தேர்ச்சி பெறவேண்டிய அவசியமில்லை என்கிறது. வழக்கமான தேர்வுக்கும் வாரிய தேர்வுக்குமான வித்தியாசம் என்ன என்று தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

அதேபோல், தேர்வு நடத்தவேண்டிய அவசியமில்லை என்றால் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றலாம். காரணம், கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதையும் தமிழக அரசு செய்யவில்லை. தமிழக அரசின் கொள்கையே இடைநிற்றல் இல்லா தேர்ச்சி -அதாவது எட்டாம் வகுப்புவரை பொதுத்தேர்வு கிடையாது என்பதுதான். ஆனால், தமிழக அரசின் கொள்கைமுடிவை தமிழக அரசே மீறும்போது நீண்ட விவாதம் நடத்தப்படவேண்டுமல்லவா? மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்திடமிருந்து இதுகுறித்து ஏதாவது கருத்து கேட்கப்பட்டதா? பொதுவிசாரணை நடத்தி குழந்தைகள், மாணவர் அமைப்பு, ஆசிரியர் அமைப்பு, பெற்றோர் அமைப்பு உள்ளிட்டவைகளிடம் வெளிப்படை யாக கருத்துக் கேட்பு நடைபெற்றதா? இவ்வாறு எந்த நடவடிக்கையும் பின்பற்றாமல் ஒரு கொள்கை முடிவு மாற்றம் என்பது மக்கள் ஆட்சி மாண்பிற்கு பொருத்தமானது அன்று.

தேர்வு கூடாது என்று முடிவெடுப்பதற்கு முன்னால் தேர்வினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆராயப் பட்டது. மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஆவணப்படியே தேர்வு என்பதனால் மட்டுமே மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, தேர்வுகளி னால் மாணவர்கள் பள்ளிக் கல்வியிலிருந்து விடுபடவே அதிக வாய்ப்புள்ளது. கல்வி உரிமைச்சட்டத்தின் நோக்கமே அச்சமில்லாமல், பதட்டமில்லாமல் இயல்பாக ஒரு குழந்தை கற்று, தான் கற்ற திறனை வெளிப்படுத்துவதுதான். இந்த நோக்கத்துக்கு நேர் எதிராக ஐந்து மற்றும் எட்டு பொதுத்தேர்வு என்பது அமைந்துள்ளது.

ஒரு குழந்தையை ஃபெயில் ஆக்கி அதே வகுப்பில் தங்கவைக்கும்போது அக்குழந்தையும் பாதிக்கப்படுகிறது; அதோடு புதிதாக வரும் குழந்தைகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். அதனால், தமிழக அரசு இதனைத் திரும்பப் பெறவேண்டும். சமமான கற்றல் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குழந்தைகள் கற்பதற்கு ஆசிரியர்கள் முழு கவனத் தையும் செலுத்த வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்கு கற்றல் -கற்பித்தல் பணியைத்தவிர வேறு பணிகள் கொடுக்கக் கூடாது''’என்கிறார் ஆலோசனையாக.

குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம். நிகழ்காலத்தை அழித்துக்கொண்டிருக்கும் மத்திய-மாநில அரசுகள் தங்களின் கொள்கை முடிவுகளால் மாணவ மணிகளின் எதிர்காலத்தை யும் சீரழித்துக்கொண்டிருக்கின்றன.

-மனோசௌந்தர்