Advertisment

FRAUD கதறவிடும் நிதி நிறுவனங்கள்! -மக்களைக் காப்பாற்றுமா அரசு?

ss

"அபார வட்டி! அசரவைக்கும் வட்டி! இன்றே முதலீடு செய்யுங்கள். நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வாரா வாரம் வட்டி தருகிறோம்' என்பது போன்ற அழைப்புகள், மக்களை மயக்கி வருகின்றன.

Advertisment

அந்த வட்டியை அவர்கள் எங்கிருந்து எப்படித் தருவார்கள் என்று யோசிக்காததால், ஏமாறுகிறவர்களின் பட்டியல் பெருகிக்கொண்டே இருக்கிறது. நிதி நிறுவனங்களை நம்பி ஏமாந்தவர் கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் கொடுமைகளும் அடிக்கடி அரங்கேறிவருகின்றன.

fraud

மக்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார் கள்? எப்படி எல்லாம் மக்கள் ஏமாறத் தயாராக இருக்கிறார்கள்? என்பதற்கு கீழ்க்கண்ட, பட்டை நாமச் சம்பவங்களே உதாரணங்கள்.

சம்பவம் 1: ஈரோடு அருகே உள்ள அசோக புரம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளல் பாபு. சோப்பு கம்பெனி நடத்தி வந்த இவர், அதன்மூலம் அப்பகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானார். அதைப் பயன்படுத்தி, தினசரி வசூல் என்ற அடிப்படையில் ’ஸ்டார்’ என்ற பெயரில் ஒரு சீட்டுக் கம்பெனியை ஆரம்பித்தார்.

மூன்று லட்சம் முதல் ஒரு கோடி வரையி லான பணத்தை மக்களிடமிருந்து பெற்று, ஏலச் சீட்டை நடத்தினார். ஆரம்பத்தில் நாணயமாக நடந்துகொண்ட இந்த பாபு, திடீரென இரவோடு இரவாக ஒருநாள் தலைமறைவாக ஆகிவிட்டார். இவரிடம் பணம் கட்டி ஏமாந்த கருங்கல்பாளை யம், அசோகபுரம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் வள்ளல் பாபு மீது புகாரைக் கொடுத்துவிட்டு, தங்கள் பணம் தங்களுக்கு மீண்டும் கிடைக்குமா? என்று பரிதவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ff

சம்பவம் 2: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில், செந்தில் கணேஷ், தீனதயாளன் என்கிற மோசடிக்கார நண்பர்கள், ’கணேஷ் சிட்பண்ட்ஸ்’ என்ற பெயரில் சீட்டுக் கம்பெனியை நடத்திவந்தனர். மக்களிடமிருந்து பல லட்ச ரூபாய்ப் பணத்தை வசூல் செய்தவர்கள், திடீ ரென பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதை யடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் வையம்பட்டி போலீ சில் புகார் கொடுத்தும், ஆண்டுக் கணக்கில் போலீஸ் கொட்டாவிவிட்டது. இதனால் கடுப்பான மக்கள், காவல்துறையைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடு பட்டனர். மோசடிப் பேர்வழிகளை விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் வாக்குறுதி கொடுத்த பிறகே, அவர்கள் மறியலைக் கைவிட்டுவிட்டு சோர்ந்த முகத்துடன் வீட்டுக்குக் கிளம்பினர்.

சம்பவம் 3: தர்மபுரி குமாரசாமி பேட்டை யைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பகுதியில் ஏ

சம்பவம் 3: தர்மபுரி குமாரசாமி பேட்டை யைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு என்று லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளார். இவரிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், தவணை முறையில் பணத்தைச் செலுத்தி, ஒரேயடியாக ஏமாந்துள்ளனர். இவரும் தொடக்கத்தில் நம்பிக்கை ஏற்படும்படி ’புத்தர்’ மாதிரி நடந்துகொண்டிருக்கிறார். பணம் கட்டி யவர்களுக்கு முதிர்வுத் தொகையைக் கொடுக்கும் நேரத்தில், அவர், விஜய் மல்லையாவாக எஸ்கேப் ஆகிவிட்டார். ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் கள், தருமபுரி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

சம்பவம் 4: சேலத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவந்தது "அமுதசுரபி' என்ற நிதி நிறுவனம். இது பல மாவட்டங்களில் தனது மோசடிக் கிளைகளை அமைத்தது. அதன் கிளை ஒன்று ஜெயங் கொண்டம் பகுதியில் இயங்கி வந்தது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானவர்கள் சீட்டுப் பணம் கட்டி உள்ளனர். திடீரென்று ஒருநாள் இந்த அமுதசுரபி யும், பணம் கட்டியவர்களின் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டது.

Advertisment

ff

சம்பவம் 5: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகைப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இந்த டுபாக்கூர் பேர்வழியும், ஏலச்சீட்டு என்ற பெயரில், பொதுமக்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் பணத்தை வசூலித்துக்கொண்டு, திடீரென ஜீபூம்பா போல் மாயமாகிவிட் டார். பாதிக்கப் பட்ட மக்கள் வழக்கம்போல் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, சென்னையில் ஜாலிமுத்துவாக மாறி, தலைமறைவாக இருந்த மாரிமுத்துவையும் அவரது கள்ளக்கூட்டாளி மனைவியான தமிழ்ச்செல்வி யையும் மடக்கி இருக்கிறார்கள்.

சம்பவம் 6: உளுந்தூர்பேட்டையில் வசித்து வந்த ஒரு ஆசிரியரும் அவரது மனைவியும் சேர்ந்து கொண்டு, மோசடி நாடகம் நடத்தக் களமிறங்கினர். "நீங்கள் ஒருமுறை பத்தாயிரம் ரூபாய் செலுத்தி னால் போதும், நாங்கள் மாதந்தோறும் 1500 ரூபாய் பணத்தை நோகாமல் தருவோம். 20000 செலுத்தினால் மாதம் 3000 ரூபாய் தருவோம். உங் கள் பணம் எங்களிடம் முட்டை போடும்'' என்று அறிவித்தார்கள். இதை நம்பி ஆயிரத்திற்கு மேற் பட்டவர்கள் பல லட்ச ரூபாயை, அள்ளிக் கொடுத் துள்ளனர். திடீரென இவர்களின் தந்திரம் அறிந்து, பணம் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு நெருக் கடி கொடுத்ததால், அந்த மோசடித் தம்பதிகள், பயந்துபோய், எமலோகத்துக்கு எஸ்கேப் ஆகி விடலாம், அப்போதுதான் யாரும் துரத்தமாட் டார்கள்’ என்று விஷத்தைக் குடித்தனர். இதில் ஆசிரியரின் மனைவி மட்டும் ஒன்வேயில் இங் கிருந்து மேலே பாஸாகிவிட்டார். ஆசிரியரிடம் விஷம் சரியாக வேலைசெய்யாததால் பிழைத்துக் கொண்டார். அவர் இப்போது ‘பணம் கேட்டு யாராவது நெருக்கடி கொடுத்தால், நான் மறுபடியும் விஷம் குடிப்பேன்’ என்று வாடிக்கையாளர்களை மிரட்டிக்கொண்டு இருக்கிறாராம். கொலைப்பழிக்குப் பயந்து, பணம் கொடுத்தவர்கள் ஊமை அழுகை அழுகிறார்களாம்.

ff

சம்பவம் 7: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் திடீர் என அந்தப் பகுதியில் ஏழ்மையாக இருந்த பலரும் குபேர தேசக் குடிமகன்கள் போல், நகை நட்டுகளுடன் ஆடம்பரமான காரில் வலம்வந்தனர்.

டவுட்டான காவல்துறை அவர்களை விசாரித்த போது வசமாகச் சிக்கிக்கொண்டனர். விசாரணை யில், ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் பத்தா யிரம் ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும் என்று கூறி, வசதி படைத்தவர்களிடம் பணம் வாங்குவோம். அதை இன்னொருவரிடம் கூடுதல் வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் கொடுப்போம். சில மாதங்கள் கழித்து, வட்டியை நிறுத்திவிடுவோம். பணம் கொடுத்தவர்கள் ஏன் பணம் வரவில்லை என்று கேட்டால், உங்களிடம் வாங்கியதை நாங்கள் வேறு நபர்களிடம் கொடுத்தோம். அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று கிளிசரின் போட்டுக்கொண்டு கண்ணீர் விடுவோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்களில் பலரும் இப்போது கம்பிக்குள் இருந்தபடி கிளிசரின் இல்லாமலே கண்ணீர் விடுகின்றனர்.

சம்பவம் 8: இது மூளைக்காரப் பசங்க சிலபேர் ரூம்போட்டு யோசித்துச் செய்த மோசடிக் கதை. குன்னத்தூர், நத்தாமூர், கிளியூர், திருநறுங் குன்றம், பிள்ளையார்குப்பம், பாண்டூர் உட்பட பல கிராமங்களில் ஆன்லைன் மூலம், முகமே தெரியாத நபர்கள், ஏ.ஆர்.எஸ். என்ற ஒரு வாட்ஸ் அப் குழுவை ஆரம்பித்துள்ளனர். ஒரு குழுவுக்கு 500 பேர் என்று 98 குழுக்களை உருவாக்கினர். அதில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரும் 5000 ரூபாய் மட்டும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் மறுநாளே அவர்கள் வங்கிக் கணக்கில் 1250 ரூபாய் பணம் செலுத்தப்படும் என்றும், பத்தாயிரம் ரூபாயைச் செலுத்தினால், வாரம் 2500 ரூபாய் வங்கி கணக்கில் வட்டியாக வந்துவிழும் என்றும் அறிவித்தனர். அதேபோல் பணம் செலுத்திய சிலருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் கொஞ்ச நாள் மங்களகரமாக பணமும் வந்து சேர்ந்தது. இந்த செய்தி பரபரப்பாகப் பரவியது. அப்புறம் என்ன, ஆளாளுக்கு மார்வாடிக் கடைக்கு அணிவகுத்துச் சென்று, நகை நட்டை வைத்துப் பணம் புரட்டி, ஒரு சுமார் ஒரு லட்சம் பேர், தலா பத்தாயிரம், 20 ஆயிரம் என ஆன்லைன் மூலம் பணத்தைச் செலுத்தி, அந்த ஆன்லைன் ஆசாமி களைக் கோடீஸ்வரர்களாக ஆக்கிவிட்டனர்..

சில நாட்கள் கழித்து பணம் செலுத்திய யாருடைய வங்கிக் கணக்கிற்கும், வட்டி வரவில்லை. இது பற்றிக் கேட்கமுடியாதபடி, சம்பந்தப்பட்ட வாட்ஸப் எண்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. எந்த ஆதாரங்களும் இல்லாததால் போலீஸில் புகார் கொடுக்கக் கூட யாரும் போக வில்லை. பாதிக்கப்பட்ட பலரும், அடுத்தவர்களுக் குத் தெரியாத வகையில் பாத்ரூமிற்குப் போய் அழுதுகொண்டு இருக்கிறார்களாம்.

சம்பவம் 9: கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த சரவணகுமார் வேலு, இவர் தன் மனைவி மற்றும் மகன்கள் உட்பட ஆறு பேருடன் சேர்ந்து ’ஸ்ரீ அம்மன் சிட்பண்ட்ஸ்’ என்ற பெயரில் சீட்டுக் கம்பெனியை அனைவருக்கும் பொறிகடலை கொடுத்து ஆரம்பித்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஒரு லட்சம் முதல் 20 லட்சம் வரை முதலீடு செய்தனர். இவர்களின் பணம் முதிர்ச்சியடைந்த பிறகும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காத அந்தக் குடும்பம், திடீரென எஸ்கேப் என்ற பெயரில் ஃபேமிலி டூர் கிளம்பிவிட் டது. பாதிக்கப்பட்டவர்களோ காவல்துறையிடம் கண்ணைக் கசக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

-இப்படி விதவிதமாக அங்கங்கே பண மோசடி கள் நடந்தபடியே இருக்கின்றன. தனி நபர்களாக வும், கும்பலாகவும், குடும்பம் குடும்பமாகவும் மோசடி நபர்கள் விளையாடி வருகின்றனர். சிலர் இந்த மோசடிச் செயல்களுக்கு அழகான பெண் களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கே தெரியா மல் அவர்களைக் குற்றத்திற்கு உடந்தையாக்கி விடுகின்றனர். இப்படி எல்லாம் மோசடித் தொழில் ஜாம் ஜாம் என்று நடந்தபடியே இருக்கிறது.

நம்மிடம் பேசிய ஒருவர், "அவர்கள் போலி ஆட்கள் என்று தெரிந்தே, ஏமாறுகிறோம். கார ணம், கம்பெனி ஆரம்பித்த புதிதில், அவர்கள் தங்களை யோக்கியமாகக் காட்டிக்கொள்ள, நல்ல விதமாக நடந்துகொள்வார்கள். அதற்குள் நாம் செலுத் திய அசல் தொகையை விட, கொஞ்சம் கூடுதலாக நமக்கு கிடைத்துவிடும். அதுபோதும் என்று மேற் கொண்டு பணத்தைச் செலுத்தாமல் நாம் எஸ்கேப் ஆகிவிடுவோம்''’என்று திகைக்க வைத்தார். இப் படியும் சில அறிவு ஜீவிகள், நோட்டும் பென்சிலு மாக இங்கே அலைந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் எப்படிப்பார்த்தாலும், மோசடி ஆசாமிகளிடம் ஏமாறுகிறவர்கள்தான் அதிகம்.

இது குறித்தெல்லாம், ஓய்வுபெற்ற காவல் துறை துணை ஆய்வாளரான திட்டக்குடியைச் சேர்ந்த வீரபாண்டியனிடம் நாம் கேட்டபோது...

"பொதுவாக வயிற்றுப்பசி சீக்கிரம் அடங்கி விடும். சாதாரண மனிதர்கள் முதல் பெரிய செல்வந் தர்கள் வரை வயிறு நிறைய சாப்பாடு கொடுத்த தும், போதும்.. போதும் என்று சொல்லிவிடுவார் கள். இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள் என்றால் வயிற்றில் இடமில்லை... வேண்டாம் என்று மறுத்து எழுந்துவிடுவார்கள். ஆனால் பணப்பசி என்பது யாருக்கும் தீரவே தீராது. பணத்திற்காக அவர்களின் சாதாரண ஆசை கூடப் பேராசையாகிவிடும். அதன் விளைவு, அவர்களை யாரும் எதுவும் செய்ய வேண்டாம், அதுவே அவர்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து விட்டுவிடும். தெரிந்தே ஏமாறும் இப்படிப்பட்டவர்கள், காவல்துறையில் புகார் கொடுப்பதும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாலை மறியல் செய்வதும் தவறானது. இது கண்டிக்கத்தக்கது. காவல்துறை மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது. அப்படி இருக்க, இப்படிப்பட்டவர்கள் தங்கள் பேராசையின் காரணமாக ஏமாறுவதற் கெல்லாம், அது தன் நேரத்தைச் செலவிட முடியாது. மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் என்றால், குடியிருக்க வீடு, பசிக்கு உணவு, தேவையான உடை ஆகியவைதான். இதற்கு மேல் ஆசைப்படுவது ஆபத்து. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, தங்கள் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்''’என்கிறார் அழுத்தமாக.

வழக்கறிஞரான விழுப்புரம் எழிலனோ "அரசு முறையாக சீட்டுக் கம்பெனி நடத்துவதற்குப் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அப்படி அரசு அனுமதியுடன் நிதி நிறுவனம் நடத்து கிறவர்கள் கூட, பணம் செலுத்தியவர்களை ஏமாற்றிவிடுகிறார்கள். இதற்காகவே மக்களின் ஆசைகளைத் தூண்டி விடுகிறார்கள். அதுதான் ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு மூலதனம். திருப்பூர் பகுதியில் ஒரு நபர் நான்குகோடி ரூபாய்வரை சீட்டு கம்பெனியில் கட்டி ஏமாந்துள்ளார். மக்கள், உழைத்து சம்பாதித்த பணத்தை சேமிக்க வேண்டும் என்றும், முதலீடு செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதற்கு நல்ல வழிகள் ஏராளம் உள்ளன. அதைவிட்டு விட்டு சீட்டுக் கம்பெனி களிடம் தாங்களாகவே பலிகடாக்களாக ஆகிறார்கள். இதை என்னவென்று சொல்வது? திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது''’என்றார்.

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல், ஊருக்கு ஊர், நகரத்துக்கு நகரம் இதுபோன்ற போலி சீட்டுக் கம்பெனி களை ஆரம்பித்து, மக்கள் பணத்தை மோசடி செய்வது தொடர்ந்துகொண்டே உள்ளது. இதையெல்லாம் காவல்துறையும் அரசும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

-எஸ்.பி.எஸ்.

nkn291022
இதையும் படியுங்கள்
Subscribe