மனித மிருகங்கள்!
சென்னை அயனாவரத்தில் 200 பேர் வசிக்கும் அபார்ட்மெண்ட் அது. அதில் ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கும் பிஸ்னஸ்மேனுக்கு இரு மகள்கள். மூத்த மகள் வெளியூரில் தங்கிப் படிக்க, 12 வயது மாற்றுத் திறனாளியான இளைய மகள் சென்னையின் பள்ளி ஒன்றில் படிக்கிறார். அந்தக் குழந்தை மீது கண் வைத்த அந்த அபார்ட்மெண்டின் லிஃப்ட் ஆபரேட்டர், செக்யூரிட்டிகள், தண்ணீர் கேன் போடுபவன், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட 17 மனித மிருகங்கள் கூட்டாகச் சேர்ந்து வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று, கத்தியைக் காட்டி மிரட்டியும் போதை ஊசி போட்டும் குதறி எடுத்திருக்கிறார்கள். நீண்ட நாட்களாக இந்தக் கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறது அந்தப் பிஞ்சு. சில நாட்களு
மனித மிருகங்கள்!
சென்னை அயனாவரத்தில் 200 பேர் வசிக்கும் அபார்ட்மெண்ட் அது. அதில் ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கும் பிஸ்னஸ்மேனுக்கு இரு மகள்கள். மூத்த மகள் வெளியூரில் தங்கிப் படிக்க, 12 வயது மாற்றுத் திறனாளியான இளைய மகள் சென்னையின் பள்ளி ஒன்றில் படிக்கிறார். அந்தக் குழந்தை மீது கண் வைத்த அந்த அபார்ட்மெண்டின் லிஃப்ட் ஆபரேட்டர், செக்யூரிட்டிகள், தண்ணீர் கேன் போடுபவன், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட 17 மனித மிருகங்கள் கூட்டாகச் சேர்ந்து வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று, கத்தியைக் காட்டி மிரட்டியும் போதை ஊசி போட்டும் குதறி எடுத்திருக்கிறார்கள். நீண்ட நாட்களாக இந்தக் கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறது அந்தப் பிஞ்சு. சில நாட்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து வந்திருந்த தனது அக்காவிடம் சொல்லி அழுதவுடன் விக்கித்துப் போனது அந்தக் குடும்பம். உடனடியாக அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் 17 மிருகங்களையும் தூக்கி வந்து விசாரித்து வருகிறது போலீஸ். டெல்லியில் ஒரு நிர்பயா, காஷ்மீரில் ஒரு சிறுமி, சமீபத்தில் வேலூரில் ஐந்து மிருகங்களால் சிதைக்கப்பட்ட ஒரு சிறுமி என சிறுமிகளுக்கு எதிரான வக்கிரங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
-ஜீவாபாரதி
ஒத்திகை மர்மம்!
போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களை எப்படி விரட்டியடித்து, கலைப்பது என்பதற்கான ஒத்திகை கடந்த சனிக்கிழமையன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. டி.ஐ.ஜி.லோகநாதன் தலைமையிலும் எஸ்.பி.செந்தில்குமார் முன்னிலையிலும் நடந்த இந்த ஒத்திகையின்போது, நிஜ கண்ணீர்ப்புகை குண்டுகளையே பயன்படுத்தியதால் கிரிஷா, கவிதா, சுதா உள்ளிட்ட ஆறு பெண் காவலர்களும் நான்கு ஆண் காவலர்களும் மயங்கிச் சரிந்தனர். அனைவரையும் ரகசியமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கின்றனர். விஷயம் வெளியே தெரிந்தால் கதை கந்தலாகிவிடும் என நினைத்த மாவட்ட காவல்துறை நிர்வாகம், "ஒரிஜினல் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசிய போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என மயங்கியவர்களிடமே எழுதி வாங்கி கமுக்கமாக அமுக்கிவிட்டனர். அதே சமயம் இந்த ஒத்திகையை நினைத்து தஞ்சைவாசிகள் கலங்கிப் போயுள்ளனர். காவிரி, கதிராமங்கலம் என போராட்டக்களம் மிகுந்த டெல்டாவிலும் ஒரு தூத்துக்குடியை உருவாக்க போலீஸ் திட்டமிடுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
-பகத், மகி
பெரிய இடத்து லிங்க்!
"ரிலேஷன்ஷிப் டேட்டிங் சர்வீஸ்' என்ற வாசகத்துடன் வாட்ஸ்-அப்பில் டி.வி.நடிகை ஜெயலட்சுமி என்பவருக்கு ஏடாகூடமாக மெசேஜ் கொடுத்து, கவியரசன், முருகப் பெருமான் என்ற புரோக்கர் பார்ட்டிகள் போலீசில் சிக்கினர். ஆனால் சிக்காத பலர், பல டிசைன்களில் சர்வீஸ் செய்து வருகின்றனர். அதில் ஒரு டிசைன்தான், நடிகைகளின் ஃபேஸ்புக் மற்றும் கூகுளில் கிடைக்கும் ஹீரோயின்களின் போட்டோக்களை ஆல்பமாக போட்டுக்கொண்டு, ஒரு ரவுண்ட் வருகிறார்கள். சில அமைச்சர்கள், அமைச்சர்களின் மகன்களிடம் சென்று, ""நீங்க ஓ.கே.பண்ணுனா க்ளிக் பண்ணிரலாம்'' என கொக்கியைப் போடுவார்கள். பெரும்பாலும் அந்தக் கொக்கியில் மாட்டுபவர்கள் லட்சக்கணக்கில் அள்ளிவிடுவார்கள். பெரிய இடத்து லிங்க் இருப்பதால், போலீசாலும் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது மாட்டியிருக்கும் கவியரசன், முருகப்பெருமான் ஆகியோரிடம் 56 நடிகைகளின் போட்டோக்கள் கொண்ட ஆல்பம் இருந்துள்ளது. இதுபோல் பல பெருமான்கள் தங்கு தடையின்றி தங்களின் சேவையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சென்னை -அண்ணாநகரில் இருக்கும் பங்களாவாசியான அந்த நபர், லேடீஸ் ஹாஸ்டல் என்ற பெயரில், பெரிய இடத்து ஆட்களுக்கு நன்றாகவே சேவையாற்றி வருகிறாராம். இப்போது அதை ஸ்மெல் பண்ணியுள்ளது போலீஸ். ஆனால் ஆக்ஷன் இருக்குமா என்பதுதான் அண்ணாநகர் வாசிகளின் எதிர்பார்ப்பு.
-அருண்பாண்டியன்