Advertisment

இறுதிச்சுற்று

shivaji

தொகுதியை வலம்வரும் ப.சி.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய மும்முனைத் தாக்குதலுக்கு குடும்பமே உள்ளான நிலையிலும்... சொந்தத் தொகுதியான சிவகங்கைக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளான திருமயத்தில் கடந்த 28-ஆம் தேதி, ஆலங்குடியில் 29-ஆம் தேதி தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார் ப.சி. ஆலங்குடியில் அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கிய ஆவணத்தான்கோட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மொத்தமே 75 பேர் இருந்ததைப் பார்த்து கடுப்பான ப.சி., “""திராவிடக் கட்சிகளில் அந்தக் குடும்பமே ஒரே கட்சியில் இருப்பார்கள். எனவே இளைஞர்களை அதிகளவில் காங்கிரசில் சேர்த்து, பூத் கமிட்டி அமைத்து இப்போதே செயல்படத் துவங்குங்கள். கருப்புப் பணம் மீட்பு, வங்கிக்கணக்கில் 15

தொகுதியை வலம்வரும் ப.சி.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய மும்முனைத் தாக்குதலுக்கு குடும்பமே உள்ளான நிலையிலும்... சொந்தத் தொகுதியான சிவகங்கைக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளான திருமயத்தில் கடந்த 28-ஆம் தேதி, ஆலங்குடியில் 29-ஆம் தேதி தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார் ப.சி. ஆலங்குடியில் அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கிய ஆவணத்தான்கோட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மொத்தமே 75 பேர் இருந்ததைப் பார்த்து கடுப்பான ப.சி., “""திராவிடக் கட்சிகளில் அந்தக் குடும்பமே ஒரே கட்சியில் இருப்பார்கள். எனவே இளைஞர்களை அதிகளவில் காங்கிரசில் சேர்த்து, பூத் கமிட்டி அமைத்து இப்போதே செயல்படத் துவங்குங்கள். கருப்புப் பணம் மீட்பு, வங்கிக்கணக்கில் 15 லட்சம் என வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்தார் மோடி. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஜூலை 15-க்குப் பிறகு மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் வருவேன். எல்லோரும் தயாராக இருங்கள்''’என காங்கிரசாரை உற்சாகப்படுத்திவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

Advertisment

-செம்பருத்தி

shivajiகவர நினைக்கும் முதல்வர்!

ஆட்சிக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு அதிகரித்துக் கொண்டே போனாலும் தினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, சிலரை குளிர்ச்சியாக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி. அவரின் சமீபத்திய குளிர்ச்சி அறிவிப்புதான் வன்னிய சமூகத் தலைவர் ராமசாமி படையாச்சியார் மற்றும் நடிகர்திலகம் சிவாஜியின் பிறந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு. இதுபோக வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு, சொத்துகளை ஒருங்கிணைத்து நலவாரியம் போன்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்பதை, இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்திவரும் அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் வன்னியர் தலைவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளாராம் எடப்பாடி. இதற்கடுத்ததாக, ""நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபம் பிரதான சாலையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும், உள்ளே இருக்கும் சிவாஜி சிலையை மக்களின் பார்வையில் படும்படி வெளிப்புறத்தில் நிறுவவேண்டும், சிவாஜி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதில் ஒன்று மட்டும் நிறைவேறியிருக்கிறது. மற்றவையும் நிறைவேறும் என்று நம்புகிறோம்''’என்கிறார் சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன்.

Advertisment

-இளையர்

மோசடி மோடிக்கு "ரெட் கார்னர்!'

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடியும் அவரது சகோதரர் நிசால் மோடியும் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருக்கிறார்கள். இவர்கள் மீது அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் வழக்குப் பதிவு செய்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன. அவர்களை கைது செய்து இந்தியா கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது சி.பி.ஐ.

நீரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டிருப்பதும், மோசடிகள் குறித்த தகவல்களையும் இன்டர்போலிடம் தெரிவித்து, அவர்களுக்கு எதிராக "ரெட் கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கவும் கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் நீரவ் மோடிக்கும், நிசால் மோடிக்கும் "ரெட் கார்னர்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்டர்போல் வசமுள்ள 192 உறுப்பு நாடுகளுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் விரைவில் நீரவ்மோடி கைது செய்யப்படுவார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது சி.பி.ஐ.

-இளையர்

சந்திப்பு!

stalin-thivakaran

தஞ்சை மகாராஜா மகாலில் 2-ந் தேதி அன்பில் தர்மலிங்கம் மகன் வழி பேரன் அன்பில் இரா.அன்பரசன் திருமண விழாவை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் நடத்தி வைத்தார். திருமண விழாவில் அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரனும் கலந்து கொண்ட நிலையில்... மேடையில் இருந்து இறங்கிய ஸ்டாலின் திவாகரனிடம் கை கொடுத்து நலம் விசாரித் தார். அதன் பிறகு பேசிய திவாகரன்.. ""பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு குடும்பமும் சொந்தக்காரங்க. ஸ்டாலின் நலம் விசாரித்தார் அவ்வளவுதான்'' என்றார்.

கூட இருந்தவர்களோ, ""எப்பவும் திவாகரன் ஸ்டாலினை எதிர்த்து பேசாதவர். நல்ல நெருக்கம் உண்டு'' என்றனர் அர்த்தத்துடன்.

-செம்பருத்தி

nkn06.7.2018
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe