Advertisment

இறுதிச்சுற்று!

finalround

இணக்கம்-கசப்பு!

finalround

சென்னை டூ சேலம் எட்டுவழிச் சாலைக்காக விவசாய நிலங்களும் மரங்களும் அழிக்கப்படுகின்றன. இதை அனுமதிக்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டார். அதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழிசை... டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க.வினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

Advertisment

தமிழிசை சவுந்தரராஜனின் இந்தக் கருத்து பா.ம.க.வினரை உசுப்பிவிட்டது.

டாக்டர் ராமத

இணக்கம்-கசப்பு!

finalround

சென்னை டூ சேலம் எட்டுவழிச் சாலைக்காக விவசாய நிலங்களும் மரங்களும் அழிக்கப்படுகின்றன. இதை அனுமதிக்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டார். அதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழிசை... டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க.வினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

Advertisment

தமிழிசை சவுந்தரராஜனின் இந்தக் கருத்து பா.ம.க.வினரை உசுப்பிவிட்டது.

டாக்டர் ராமதாஸை விமர்சிக்கும் வகையிலான இந்தப் பேட்டியைக் கண்டித்து, பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பா.ம.க. அறிவித்தது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஏ.கே.மூர்த்தி தலைமையில் கண்டன முழக்கம் எழுப்பியபடி வந்த நூற்றுக்கணக்கான பா.ம.க.வினரை போலீஸார் கைதுசெய்து வாகனங்களில் ஏற்றினர்.

Advertisment

சுமுகமாக முடிந்தது என்று போலீஸார் நிம்மதியடைந்த வேளையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலர் பா.ம.க.வினரை நோக்கி கடுமையான வார்த்தைகளை விட்டனர். உடனே வாகனங்களில் ஏற்றப்பட்ட பா.ம.க.வினர் ஆவேசமடைந்து கீழே இறங்கி ஓடிவந்தனர். பா.ஜ.க.வினரை தாக்கத் தொடங்கினர். வழக்கமாக எந்தப் போராட்டத்தையும் அமைதியாக முடிவுக்கு கொண்டுவரும் உதவி ஆணையர் அரவிந்தனுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரே பா.ம.க.வினரையும் பா.ஜ.க.வினரையும் அடி வெளுத்துக் கட்டி வாகனங்களில் ஏற்றினார்.

தமிழிசையின் சர்ச்சைக் கருத்து இணக்கமாக இருந்த பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே கசப்பை உண்டாக்கிவிட்டது.

-சி.ஜீவாபாரதி

படம்: அசோக்

மிரட்டும் பீரங்கி!

இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பயன்படுத்திய பீரங்கியை, கடந்த 25-ஆம் தேதி, திடீரென சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆஹா ஏதோ நடக்கப் போகுது என மிரட்சியானார்கள் மக்கள். ஆனால் அரசு தரப்பிலிருந்தோ, ""கொங்கு பெல்ட்டுக்கு உட்பட்ட 11 மாவட்டங்களில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறார்கள். அப்போது தேர்வுக்கு வருபவர்களிடம் காட்டி விளக்குவதற்குத்தான் இந்த பீரங்கி வந்துள்ளது'' என தகவலைக் கசியவிடுகிறார்கள். ""தமிழ்நாட்ல இதுவரைக்கும் நடந்த ராணுவ ஆள் எடுப்புகளின் போது, இப்படித்தான் பீரங்கியைக் கொண்டு வந்து காட்டினார்களா? பசுமை வழிச்சாலைக்காக போராடுபவர்களை உளவியல் ரீதியாக அட்டாக் பண்ணும் வேலைதான்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

-ராம்கி

finalround nkn29.06.18
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe