Advertisment

இறுதிச் சுற்று!

nithy

சர்ச்சை துணைவேந்தர் பதவி ரத்து!

chelladuraiமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டது செல்லாதென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, புதிய குழுவொன்றை அமைத்து வேறு துணைவேந்தரை தேர்வுசெய்யவும் உத்தர விட்டுள்ளது.

Advertisment

மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த ஆண்டு மே-27 ஆம் தேதி செல்லத்துரை நியமனமானது முதலே சர்ச்சைகள் எழுந்துவந்தன. அவரது நியமனத்துக்கு எதிராக பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் தனது பதவியை ராஜினாமா செய்தது, பேராசிரியர

சர்ச்சை துணைவேந்தர் பதவி ரத்து!

chelladuraiமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டது செல்லாதென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, புதிய குழுவொன்றை அமைத்து வேறு துணைவேந்தரை தேர்வுசெய்யவும் உத்தர விட்டுள்ளது.

Advertisment

மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த ஆண்டு மே-27 ஆம் தேதி செல்லத்துரை நியமனமானது முதலே சர்ச்சைகள் எழுந்துவந்தன. அவரது நியமனத்துக்கு எதிராக பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் தனது பதவியை ராஜினாமா செய்தது, பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையில் செல்லத்துரை பெயர் இடம்பெற்றது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தன.

அனைத்தையும் ஈடுகொடுத்து செல்லத்துரை சமாளித்து வந்த நிலையில்தான் நிர்மலாதேவி விவகாரம் வெடித்தது. அருப்புக்கோட்டை தேவாங் கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை மூளைச்சலவை செய்து உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு பலியாக்கும் நோக்கில் அவர் பேசிய உரையாடல் “"கவர்னர் பெய ரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை- ஆடியோ ஆதாரம்' எனும் தலைப்பில் (2018, ஏப்ரல் 08-10 இதழ்) நக்கீரனில் வெளியாகி தமிழகத்தையே உலுக்கியது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெயரும் நிர்மலாதேவி விவகா ரத்தில் அடிபட, அவசர அவசரமாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் பொறுப்பில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அறிவித்தார் ஆளுநர். இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரான செல்லத்துரை யாரையும் கலந் தாலோசிக்காமல் அவரும் ஒரு விசாரணைக் கமிஷனை அறிவித்து எதிர்ப்புக் கிளம்பியதும் ரத்துசெய்தார். அத்துடன், புகாருக்குள்ளான நிலையிலும் கவர்னருடன் நெருக்கம் காட்டினார் துணைவேந்தர்.

Advertisment

சந்தானம் தனது விசாரணையை முடித்து தனது அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், பர பரப்பான தமிழக அரசியல் சூழல்களால் நிர்மலா தேவி விவகாரம் மறக்கப்பட்டிருந்தது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் க்ளீன்-பௌல்ட் என விரலை உயர்த்த, செல்லத்துரை தரப்பு அப்பீல் பற்றி ஆலோசிக்கிறது.

-க.சுப்பிரமணியன்

சூடு பிடிக்கும் நித்தி வழக்கு!

nithyசாமியார் நித்தியானந்தா மீது ஆர்த்தி ராவ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத் தில் 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அதில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாம் குற்றவாளியான கோபால் சீலம் ரெட்டி பலமுறை சம்மன் அனுப்பியும் அமெரிக்காவில் இருந்து கொண்டு இது வரை வழக்கு விசாரணை யில் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந் நிலையில் கடந்த 14-ஆம்தேதி நடந்த விசாரணை யின் போது கோபாலுக்கு சூரிட்டி வழங்கிய சதீஷ் செல்வம் நேரில் ஆஜராகி அடுத்த விசாரணையில் நிச்சயம் ஆஜர் படுத்துவதாக உறுதி அளிக்கவே கர்நாடக ராம்நகர் நீதிமன்ற நீதிபதி... ஜூன் 28 முதல் தொடர் விசாரணை நடைபெற இருப்பதால் வழக்கு தொடர்பாக ஆவணங்களை சமர்ப் பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு இருப்பதால் வழக்கு சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

-சி.ஜீவாபாரதி

nkn19.06.18
இதையும் படியுங்கள்
Subscribe