பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி மீண்டும் உயிர் பெற்றது. இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடமும் சட்ட நிபுணர்களுடனும் ஆலோசித்தார் சபாநாயகர் அப்பாவு. அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப் பட்ட தனது முந்தைய அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி னார். இதற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை யும் மேற்கோள் காட்டியிருக்கிறார் அப்பாவு. மேலும், திரும்பப்பெறும் உத்தரவு தமிழக அரசின் கெஜட்டிலும் வெளியிடப்பட்டது. இதனால் மீண்டும் எம்.எல்.ஏ.வாகியிருக்கிறார் ddபொன்முடி. உடனடியாக அவரை அமைச்சரவையில் சேர்க்கும் முடிவை எடுத்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் ரவிக்கு 13-ந் தேதி கடிதம் அனுப்பினார். இதனால் 14-ந் தேதி பொன்முடி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, தயாரானார் பொன்முடி. ஆனால், பொன்முடிக்கு உடனடியாக அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் உடன்பாடில்லாத ஆளுநர் ரவி, வியாழக்கிழமை (14-03-24) காலையில் அவசர அவசரமாக டெல்லிக்கு பறந்தார். இதனால், 14-ந் தேதி பொன்முடி அமைச்சராக பதவியேற்கவிருந்த நிகழ்வு தடைப்பட்டது. "டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அரசின் சட்ட வல்லுநர் களுடன் பொன்முடி விவகாரத்தை ஆலோ சிக்கிறார் ஆளுநர். அதில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே பதவியேற்பு வைபவம் தீர்மானிக்கப்படும்' என்கிறது ராஜ்பவன் வட்டாரம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்யவதற்காக ஒன்றிய மோடி அரசால் அமைக் கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையிலான குழு, தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 14-ந் தேதி தாக்கல் செய்திருக்கிறது. 18,626 பக்கங்கள் கொண்டதாக இருக்கிறது அந்த அறிக்கை. நாடு முழுவதும் மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படை யில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வுக்குழு விரிவாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்திருக்கிறதாம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்து அதிபர் ஆட்சி நடைமுறையைக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் இந்த ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம். இந்திய ஜனநாயகத்தில் சர்வாதிகார ஆட்சியைப் புகுத்த பிரதமர் மோடி திட்டமிடுகிறார் என்று குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள்.

-இளையர்

சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை இரண்டு கார்களில் வந்த ஆறு நபர்கள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டு வரு கின்றனர். இது ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் உறவினருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி நவாஸ் கனி சார்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டதும், நவாஸ் கனி மீண்டும் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு பொரு ளாதார ரீதியாக உதவி செய்யக்கூடாது என்ற நோக்கில் அமலாக்கத்துறையின் இந்த சோதனை நடைபெற்றது உள்ளதாக தெரிவிக்கின்றன அரசியல் சோர்ஸ்கள்.

Advertisment

-நாகேந்திரன்