லக மகளிர் தினத்தையொட்டி கனிமொழி தலைமையில் கடந்த 8ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது தி.மு.க. மகளிர் அணி. இதற்காக மகளிர் அணி நிர்வாகிகள் ஹெலன் டேவிட்சன், முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்ளிட்டோர் மாவட்ட அமைச்சரான மூர்த்தியை சந்தித்து நிகழ்ச்சிக்கு ஆதரவு கேட்க... அமைச்சரோ, "என்னைக் கேட்காமல் மதுரையை நீங்கள் செலக்ட் செய்ததே தவறு' என்று அனுமதி மறுதுவிட்டாராம். இதனால், அந்தக் கூட்டம் திண்டுக்கல்லில் நடத்தப்பட்டிருக்கிறது.

-இளையர்

Advertisment

ff

பா.ஜ.க. வேட்பாளராக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவிவருகிறது. அவருடைய கணவர் சரத்குமார் சார்ந்த நாடார் வாக்குகளும், ராதிகாவின் சமுதாய தெலுங்கு வாக்குகளும் இத்தொகுதியில் கணிசமாக உள்ளதால், ராதிகாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகப் பேசப்படுகிறது. பேராசிரியர் ராம சீனிவாசன் தொடர்ந்து இத்தொகுதியை குறிவைத்து வரும் நிலையில், டாக்டர் வேதா என்பவர், எனக்குத் தான் இத்தொகுதி என எக்ஸ் களத்தில் பதிவிட்டுள்ள அவர், "எனக்கு சீட் தராவிட்டால், என் பெயரை அறிவிக்காவிட்டால், திருமங்கலம் சுங்கச்சாவடி முன் 13ஆம் தேதி சாலை மறியல் செய்வேன்' என்று அதிரடி கிளப்பியுள்ளார். நடிகை என்பதற்காக, தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ராதிகாவை பா.ஜ.க. களம் இறக்குவதா? என்ற அதிருப்தியும் எதிர்ப்பும் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி பா.ஜ.க. தரப்பில் வெளிப்பட்டுவருகிறது.

-ராம்கி

காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு எண்ணிக்கையை அறிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்று முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில், திருவள்ளூர் தனித் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும், உங்கள் கருத்துக்களைக் கூறுங்களென்றும், அத்தொகுதிக் காக விருப்ப மனு செய்திருந்த தி.மு.க.வினரிடம் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக பொன்னேரி சட்ட மன்றத் தொகுதி தி.மு.க. வசமில்லை. திருவள்ளூர் தொகுதியும் 15 ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சிகளின் வசமே உள்ளது. இப்படியேயிருந்தால் தி.மு.க.வினர் மத்தியில் தொய்வு ஏற்படும். எனவே திருவள்ளூர் தனித்தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டுமென்று, இத்தொகுதிக்காக விருப்ப மனு செய்துள்ள 38 பேரும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாக அவர்களிடம் ஸ்டாலின் பதிலளித்திருப்பதால், தங்களுக்கே தொகுதி கிடைக்கு மென்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் உ.பி.க்கள்.

-அரவிந்த்

Advertisment

பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பசாமி என்பவரை வெட்டிக் கொன்ற பேச்சித்துரை என்ற போதை ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இதுகுறித்த கட்டுரை இந்த இதழில் 38ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பேச்சித்துரை, சிகிச்சை பலனின்றி மார்ச் 11, திங்களன்று உயிரிழந்தார்.

(ஆர்.)