நிர்மலா மீது பாலியல் தொழில் வழக்கு!

nirmaladevi"நிர்மலாவோடு நிறுத்து! கவர் னரை நோண்டாதே! விசாரணைக்கு எடப்பாடி பிரேக்!'’ என்னும் தலைப்பில் கடந்த மே 05- 07 நக்கீரன் இதழில் வெளியிட்டிருந்த செய்தியில் ‘தமி ழகத்து ராஜ்பவன் செயின்ட் ஜார்ஜ் கோட்டையோடு சமாதானம் பேசி யிருக்கிறது. அதனால், ராஜ்பவன் தொடர்புகளை ரொம்ப நோண்ட வேண்டாம். நிர்மலாதேவி பணத்துக் காக விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்று விசாரணையை முடித்தால் போதும்’ என, மேலிடத்திலிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வந்த உத்தரவை அம்பலப்படுத்தி இருந்தோம்.

தற்போது, மதுரை சரகம் - சி.பி. சி.ஐ.டி. காவல் துணை கண்காணிப் பாளர், இந்த வழக்கில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் உள்ள கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருப்பதை, அரசாணை (G.O.(D) No.496 Home (Courts#VIA) Department, dated 11#5#2018) இணைப்போடு, விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் அமர்வு நீதிமன்றத்துக்கு தெரிவிக்கும் கடித மானது, வழக்கின் போக்கைத் தெளிவுபடுத்துகிறது. அந்தக் கடிதத்தில் ‘"இவ்வழக்கில் எதிரி 1 நிர்மலாதேவி 20-4-2018ம் தேதி முதல் 25-4-2018ம் தேதி வரை 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி-யால் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதில், எதிரி 1 நிர்மலாதேவி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி எதிரி முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர்களின் தூண்டுதலின் பேரில் கல்லூரியில் படிக்கும் மாணவி களை பாலியல் தொழில் செய்ய செல்போன் மூலம் கட்டாயப்படுத்தியது தெரியவந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக... பாலியல் தொழில்’ வழக்காக முடித்துவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

-சி.என்.இராமகிருஷ்ணன்

Advertisment

பொன்னார்-வைத்தி சந்திப்பு ரகசியம்!

pon

Advertisment

அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.-சசிகலா அணிகள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போது, மாஜி மந்திரியும் இப்போது எம்.பி.யுமான வைத்திலிங்கம் சசிகலா அணியில் இருந்த போதும் மதிப்பு குறைவாகத்தான் இருந்தார். இப்போதும் அதே நிலை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான வைத்தி, அவ்வப்போது சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில்தான் கடந்த 17-ஆம் தேதி இரவு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திடீரென வைத்திலிங்கத்தைச் சந்தித்து நீண்ட நேரம் பேசி இருக்கிறார். சந்திப்பு போட்டோவை வைத்தி தரப்பே, செல்போன் மூலம் எடுத்து மீடியாக்களுக்கு அனுப்பியது. மேற்படி இருவரின் சந்திப்பை அடுத்து, வைத்தி பா.ஜ.க.வுக்கு தாவப் போகிறார் என்ற தகவல் பரவியது. ஆனால் வைத்தி தரப்போ, “""கட்சிப் பேருதான் வேறவேறயா இருக்கே தவிர, அ.தி. மு.க.வும் பா.ஜ.க.வும் ஒண்ணுதான். பொன்னார் நல்ல நண்பர் என்ற முறையில்தான் சந்தித்தார்''’என்கிறது. பா.ஜ.க. தரப்போ,

""ஆளும் கட்சியில் இருப்பவர்களை இழுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மே.21, 22 தேதிகளில் பொள்ளாச்சியில் பா.ஜ.க. மாநிலக் குழு கூடுது. அமித்ஷா இதில் கலந்துகொள்கிறார். இதையடுத்து தஞ்சைக்கு மோடி வருகிறார். அப்போது லோக்கல் செல்வாக்கு உள்ளவர் உதவி தேவை என்பதால் வைத்தியை சந்தித்தார் பொன்னார். மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் நடந்தாலும் நடக்கும்'' என்கிறார்கள்.

-பகத்சிங்