Advertisment

இறுதிச் சுற்று

ff

ளுநர் ரவியின் தொடக்க உரையுடன் கடந்த 9-ந் தேதி கூடிய சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரின் செயல்களால் செம ஹாட்டாக இருந்தது பேரவை. கூட்டத்தின் நான்காம் நாள் 12-1-23 வியாழன் அவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கலைஞர் அரசால் கொண்டு வரப்பட்டு, பிறகு பா.ஜ.க.வால் முடக்கப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அந்த திட்டத்தின் சிறப்புகளையும்,

ளுநர் ரவியின் தொடக்க உரையுடன் கடந்த 9-ந் தேதி கூடிய சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரின் செயல்களால் செம ஹாட்டாக இருந்தது பேரவை. கூட்டத்தின் நான்காம் நாள் 12-1-23 வியாழன் அவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கலைஞர் அரசால் கொண்டு வரப்பட்டு, பிறகு பா.ஜ.க.வால் முடக்கப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அந்த திட்டத்தின் சிறப்புகளையும், முடக்கியவர்களையும் தனக்கேயுரிய பாணியில் சுட்டிக்காட்டிப் பதிவு செய்தார். இதன்மீது உறுப்பினர்கள் பேசினர்.

Advertisment

ff

ராமரை பற்றி காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கூறிய சில வார்த்தைகளுக்கு அ.தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால், சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ராமர் பாலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பாலம் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் இல்லை என்று ஒன்றிய அரசு பதிலளித்திருந்த நிலையில், திட்டத்தை மீண்டும் துவக்க தீர்மானம் நிறைவேற்றியுள்து தமிழக சட்டப்பேரவை. கேள்வி நேரத்தின்போது முதன்முதலாக பதிலளித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி, "உலக கபடி போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 13-ந் தேதியுடன் முடிவடையும் இந்த கூட்டத்தொடரின் இறுதிநாளில் பல்வேறு சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

-இளையர்

ஆளுநரின் திருவையாறு விசிட்! புறக்கணித்த மேயர்கள்!

ஆளுநர் மீதான எதிர்ப்பு தமிழகமெங்கும் எழுந்துள்ள பரபரப்பான சூழலில், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழாவில் கலந்துகொள்வதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 10ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவெறும்பூர், துவாக்குடி வழியாக தஞ்சாவூர் செல்ல திட்ட மிடப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்ட வழியை காவல்துறையினர் மாற்றி, குண்டூர், மாத்தூர், சூரியூர், வழியாக தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையைப் பிடித்து, தஞ்சாவூருக்கு ஆளுநரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். ஆளுநர் வரும்போது ஒருசில அமைப்பினர் கருப்புக்கொடி காட்டப்போவதாகவும், மறியலில் ஈடுபடப்போவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த திடீர் மாற்றம் செய்யப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளுநர் திருச்சிக்கு வந்தபோதும், தஞ்சாவூருக்கு வந்தபோதும் அவரை வரவேற்றவர்களில் திருச்சி, தஞ்சாவூர் தி.மு.க. மேயர்கள் இருவருமே மிஸ்ஸிங்! ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே வரவில்லையெனத் தெரியவருகிறது.

-துரை.மகேஷ்

nkn140123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe