அரசியல் நேர்மைக்கு வயது 95!

fd

இந்தியாவின் மூத்த தலைவர் களில் மிக முக்கியமானவர் தோழர் நல்லகண்ணு. அவர் ஓர் அரசியல் ஆச்சர்யம். நேர்மைக்கும், எளிமைக் கும் அடையாளமாக வாழ்ந்துவரும் தோழர் நல்லகண்ணு, தனது 95-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்ற 1925 டிசம்பர் 26 தான் அவரது பிறந்த தினம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதும் இதே நாளில் தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95-வது ஆண்டு அமைப்பு தின விழா வையும், தோழர் நல்லகண்ணுவின் பிறந்ததினத்தையும் கொண்டாடும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தது கட்சித் தலைமை. அரசியல் கட்சியினர் உள்ளிட்ட ஏராள மானோர் இதில் கலந்துகொண்டனர்.

அங்கு நேரில்சென்று வாழ்த் திய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், "மார்க்ஸிய தத்துவத்தின் மனித உருவம் ஐயா நல்லகண்ணு' என வாழ்த்திப் பேசினார். துணை முதல் வர் ஓ.பி.எஸ். தோழர் நல்லகண்ணு வுக்கு வாழ்த்துமடல் அனுப்பி இருந்தார். பாலன் இல்லத்தில் கொடியேற்றிவிட்டு வீடுவந்த தோழர் நல்லகண்ணுவை, நக்கீரன் ஆசிரியர் நேரில்சென்று வாழ்த் தினார். "தொடர்ந்து அரசியல் களத்தில் எளிய மக்களின் விடுதலைக்காக ஓய்வின்றி உழைக்கும், அரசியல் தலைமுறையினருக்கு வாழும் உதாரணமாக இருக்கும் தோழர் நல்லகண்ணு, நூறாண்டு கடந்தும் வாழவேண்டும்' என அரசியல் கட்சியினரும், சமூக செயற்பாட்டாளர் களும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்தினைத் தெரிவித்துள்ளனர். பிறந்த நாளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எழுத்தாளர் கள்-கலைஞர்கள்-ஓவியர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தில் பங்கேற்று போர்க்குரல் எழுப்பினார் மூத்த தோழர்.

-மதி

டெல்லிப் புள்ளி!

fd

தமிழக அரசியலில் இனி பரபரப்பாக பேசப்படவிருக்கிறார் டெல்லி முரளிதரன் என்கிற வேலூர் முரளி. டெல்லியில் தொழிலதிபராக வளைய வரும் முரளி, பா.ஜ.க.வின் உள் அரசியல் வட்டாரங்களில் செல்வாக்கை(?) வளர்த்து வைத் திருப்பதாக சொல்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் வீரமணி வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. அதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதனையடுத்து தன் னைச் சுற்றி பா.ஜ.க. பின்னும் வலைப்பின்னலிலிருந்து தப்பிக்க டெல்லியில் முரளியை சந்தித்து உதவி கோரினார் வீரமணி. அதேபோல தமிழக அமைச்சர்கள் பலரும் அவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவை சேர்ந்த முரளி, முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். இவருடைய மனைவி நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். எந்த ஒரு அரசுப் பதவியிலும் இல்லாத இவர், பா.ஜ.க. தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கம் என சொல்லி வருகிறாராம். பிரதமர் அலுவலகமே, தமிழக அரசியல் குறித்து இவரிடம்தான் விவாதிப் பதாக திடீர் தகவல்கள் றெக்கைக் கட்டிப் பறக்கின்றன.

Advertisment

-இளையர்