Advertisment

இறுதிச்சுற்று

ff

கொதிப்பை ஏற்படுத்திய எஸ்.பி.ஐ. கட் ஆஃப்!

ddபொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவைச்(இ.டபுள்யூ.எஸ்.) சேர்ந்தோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு தரும் சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தியது மோடி அரசு. இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ரெப்கோ வங்கியின் தமிழக கிளைகளுக்கான 40 காலிப்பணியிடங்களில் இ.டபுள்யூ.எஸ். பிரிவினருக

கொதிப்பை ஏற்படுத்திய எஸ்.பி.ஐ. கட் ஆஃப்!

ddபொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவைச்(இ.டபுள்யூ.எஸ்.) சேர்ந்தோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு தரும் சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தியது மோடி அரசு. இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ரெப்கோ வங்கியின் தமிழக கிளைகளுக்கான 40 காலிப்பணியிடங்களில் இ.டபுள்யூ.எஸ். பிரிவினருக்கு இடஒதுக்கீடு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அடுத்ததாக, எஸ்.பி.ஐ. ஜூனியர் எக்சிக்யூடிவ் பணி யிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வில் இ.டபுள்யூ. எஸ். பிரிவினருக்கு 28.5 சதவீதம் மட்டுமே கட் ஆஃப் மதிப்பெண்ணாக விதிக்கப்பட்டது அதிர்ச்சியை உண்டாக் கியது. மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி எஸ்.பி.ஐ. கட் ஆஃப் விவகாரம் குறித்து கேள்வியெழுப்பி, கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இதைப் பற்றியெல்லாம் மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரிய வில்லை. திருச்சியில் இயங்கிவரும் பெல் நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான தேர்வு, தபால்துறை தேர்வு என வரிசையாக இ.டபுள்யூ.எஸ். பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை வெளிப்படையாகவே அது புகுத்தி வருகிறது.

நிறைவேறியது முத்தலாக் சட்டம் !

dd

முத்தலாக் தடைச் சட்டத்தை ஒரு வழியாக நிறைவேற்றிவிட்டது மத்திய அரசு. மூன்றுமுறை ‘தலாக்’ கூறி விவாகரத்து கொடுத்துவிடுவ தால் முஸ்லிம் பெண்கள் பாதிக் கப்படுகிறார்கள். அவர்களின் நலனில் அக்கறை கொண்டு இப் படியொரு சட்டத் தைக் கொண்டுவருவதாக பா.ஜ.க. அரசு 2017 ஆம் ஆண்டில் அறிவித்தது. இரண்டு ஆண்டுகளாக நாடாளுமன்ற அவைகளில் கிடப்பில் கிடந்த இதற்கான மசோதா, 25 ஆம் தேதி நடத்தப் பட்ட குரல்ஓட்டின் மூலமாக 303 வாக்கு களோடு ஒருவழியாக சட்டமாக நிறை வேற்றப்பட்டது.

Advertisment

ஐந்து மணிநேரம் நடந்த காரசார விவாதத்தில், பா.ஜ.க. இதில் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்பட்டன. ‘முஸ்லிம் பெண்கள் உரிமை பாதுகாப்புச் சட்டம் 2019 அல்லது ‘முத்தலாக் சட்டம்’ என்ற பெயரில் நிறைவேற்றப் பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின் மூலம், இனி முத்தலாக் கூறுவது கிரிமினல் குற்றமாகிறது. மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மனைவி அனுமதித்தால் கணவனுக்கு ஜாமீன் வழங்கலாம். மக்களவையில் 82 பேர் இதற்கு எதிராகவே வாக்களித்திருந்தனர்.

-மதி

nkn300719
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe