ம்பூர் கஸ்பா பகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் பாலசுப்பிரமணியனின் கார் கண்ணாடியை அ.தி.மு.க.வினர் உடைத்த தாக புகார் எழுந்ததையடுத்து, அ.ம.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட, போலீஸ் தடியடியில் ஒருவரின் மண்டை உடைந்தது. ஆரணி தொகுதி கீழ்விஷாரம் பகுதியில் கலவரத்தைத் தடுக்க வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட பதற்றம் அதிகமானது.

f

சிதம்பரம் தொகுதியில் அரியலூர் அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவு முடியும் நிலையில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறால் பானை சின்னம் வரையப்பட்டிருந்த 20 வீடுகள் சேதமடைந்தன. வன்முறை பரவுமோ என்கிற பதட்டம் அதிகமானது.

Advertisment

ன்னியாகுமரியில் வாக்காளர்கள் கொத்துக் கொத்தாக விடுபடல். தூத்தூர் இனயம், முட்டம் பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் விடுபட்டிருந் தது. ஒக்கி புயலின்போது போதிய நிவாரணம் வழங்கப்படாத காரணத்தால், ஆளும்கட்சி கூட்டணிக்கெதிராக வாக்கு கள் விழுமென்ற பயத்தில் திட்டமிட்டுப் பேர்கள் நீக்கப்பட்டதாக புகார். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடியாத்தத்தில் பா.ம.க.- தி.மு.கவினரிடையே மோதலில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

மாலை மூன்று மணிக்கு மேல் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்ட மிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் மற்றும் டி.ஜி.பி.யிடம் தி.மு.க. புகார் அளித்தது. கண்காணிப்பு கேமராக்களைச் செயலிழக்க வைத்து விட்டு கள்ள ஓட்டுப் போட திட்டமிருப்பதாகவும் அதைத் தடுக்க வேண்டுமெனவும் அந்த புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Advertisment

f

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ரத்தானாலும், குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குகளுக்கும் தாராளமாக ரூ 2000 விநியோகிக்கப்பட்டது. "பூத்துக்குள் தி.மு.க. ஏஜெண்டுகளை விலைபேசுங்கள், படியாதவர்களை பிரச்சனை செய்து பூத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது. இரு பெரிய அணிகளுக்கும் மோதல் சூழல் உருவானது.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், புதுக்கோட்டை அருகேயுள்ள மச்சுவாடி வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு இயந்திரத்தில் அவரது பெயர் வரிசை மாறி இடம்பெற்றுள்ளதாகக் கூறி தர்ணாவில் ஈடுபட்டார். பின் தேர்தல் அலுவலர்களின் சமாதானத்தை ஏற்றுக் கொண்டு தர்ணாவைக் கைவிட்டார்.

-ராஜா, மணிகண்டன், சுப்பிரமணி