Advertisment

இறுதிச்சுற்று

finalround

சமூக இணைப்பில் அக்கறை காட்டிய ஸ்டாலின்!

stalin

கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தினர் ஈஸ்வரன் தலைமையில் செயல்படும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியிலும், அருந்ததியினர் சமூக மக்கள் அதியமான் தலைமையில் இயங்கும் ஆதித் தமிழர் பேரவையிலும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மகுடஞ்சாவடியில் அருந் ததியினர் இன எழுச்சி மற்றும் ஆதித் தமிழர் பேரவை வெள்ளி விழா மாநாடு நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், தன்னை அழைக்க வந்த அதியமானிடம், "மாநாட்டுக்கு ஈஸ்வரனையும் அழையுங்கள். அப்போதுதான் இரு சமூகங்கள் இடையேயான பகை உணர்வு மாறும்'

சமூக இணைப்பில் அக்கறை காட்டிய ஸ்டாலின்!

stalin

கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தினர் ஈஸ்வரன் தலைமையில் செயல்படும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியிலும், அருந்ததியினர் சமூக மக்கள் அதியமான் தலைமையில் இயங்கும் ஆதித் தமிழர் பேரவையிலும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மகுடஞ்சாவடியில் அருந் ததியினர் இன எழுச்சி மற்றும் ஆதித் தமிழர் பேரவை வெள்ளி விழா மாநாடு நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், தன்னை அழைக்க வந்த அதியமானிடம், "மாநாட்டுக்கு ஈஸ்வரனையும் அழையுங்கள். அப்போதுதான் இரு சமூகங்கள் இடையேயான பகை உணர்வு மாறும்' என்றாராம். அதேபோல விழாவில் ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கியபோது, அதியமானையும், ஈஸ்வரனையும் சேர்ந்து தரச்சொல்லி பெற்றுக்கொண்டார். தேர்தல் கணக்கு இருந்தாலும், சமூகங்கள் இணக்கத்தையும் கணக்கில் கொண்டது பாராட்டைப் பெற்றிருக்கிறது.

Advertisment

-ஜீவாதங்கவேல்

பிக்பாஸ் சீஸன் 3?

விஜய் டி.வி.யில் மீண்டும் வரவிருக்கிறது பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ. பிக்பாஸ் சீஸன் 2 எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், சீஸன் 3 இருக்காதென பலரும் முடிவுசெய்திருந்தனர். அவர்களின் நினைப்பை பொய்யாக்கவுள்ளது எண் டமால் நிறுவனம். பிக் பாஸ் 3-க்கான வீடு அமைக்கும் வேலை 70% நிறைவடைந் துள்ளதாம். முதல் 2 சீஸன்களில், பிக் பாஸ் தொகுப் பாளராக வந்த கமல், இம்முறை பாராளுமன்றத் தேர்தல் இருப்பதால் தலைமையேற்பாரா என்பது சந்தேகத்துக் குரியதாகவே இருக்கிறது. சீஸன் 2 வெற்றிகரமாக அமையாததால், சீஸன் 1 டீமே நிகழ்ச்சியை நடத்தப் போகிறதாம். சுவாரசியங்களை அதிகப்படுத்துவதற் கான திட்டமிடல்கள் இப்போதே டிஸ்கஷனில் போய்க் கொண்டிருக்கிறது.

Advertisment

-அரவிந்த்

கட்சி மாறிய மதியழகன்! அதிர்ந்த நிர்வாகிகள்!

mathiகிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற மா.செ. மதியழகன் பிப்ரவரி 10-ஆம் தேதி தி.மு.க.வில் இணைந்திருக்கிறார்.

தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான ரஜினி ரசிகர்களை உறுப்பினர்களாக கொண்ட மாவட்டம் எனும் பெயரை கிருஷ்ணகிரி தக்கவைத்த தற்கு அச்சாரமாக இருந்தவர் மதியழகன். அவர் கட்சி மாறி வந்திருப்பது தி.மு.க. நிர்வாகிகளுக்குள்ளே கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது. முன்னாள் எம்.பி. சுகவனம், மா.செ.செங்குட்டுவன் மோதல் ஒருபுறமிருக்க.... மீண்டும் இணைந்த முல்லைவேந்த னின் திடீர் பிரவேசம் தமக்கு ஆபத்தாக முடியுமோ என்ற பயம் இருவருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், புதுவரவு மதியழகனுக்கு எம்.பி. சீட் கொடுக்கப்படும் என தலைமை உறுதிப் படுத்தியுள்ளதாம். இதனால் தனது எம்.பி. சீட்டுக்கு கேடு வருமோ என்ற கலக்கத்திலிருக்கிறாராம் சுகவனம்.

இது ஒருபக்கமென்றால் அ.தி.மு.க.வில் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. சீட்டை தனது மகனுக்காக கேட்டுவருகிறார் கே.பி. முனுசாமி. மகனுக்குத் தராத பட்சத்தில் அசோக்குமாருக்கு என விண்ணப்பமும் வைத்திருக்கிறாராம். துணைசபா தம்பிதுரையோ தன் நண்பருக்காக இதே கிருஷ்ண கிரியைக் கேட்கிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் தி.மு.க. வேட்பாளர் யாரென உளவுத்துறை மூலம் இ.பி.எஸ். விசாரிக்கச் சொல்ல, பணபலமிக்க மதியழகன் என்பதை யறிந்து, முனுசாமி- தம்பிதுரை இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறாராம் இ.பி.எஸ்.

-அ.அருண்பாண்டியன்

nkn130219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe